Monday, November 23, 2015

பசித்தவருக்கு உணவளிப்பது சிறந்த தர்மம்.




Big Royal Solute to this Family!

அவசியமான நேரத்தில் முன்வந்து உதவும் அனைவருமே ஹீரோக்கள் தான். ஆனால் இந்தக்குடும்பத்தினரின் செயல் ஹீரோக்களையே வியந்து பார்க்க வைக்கும் சூப்பர் ஹீரோயிஸம்.


ஏற்கனவே திரு அப்துல் வஹாப், அவரது குடும்பம் மற்றும் உறவினர்கள் அமிஞ்சிகரை ஸ்கைவாக் எதிரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்த காலணி மக்களுக்கு உணவளிக்க நம்மை தூண்டியதையும். அவர்கள் செலவில் இரவு உணவளித்ததையும் எழுதியிருந்தேன். ஆனால் அதன் பின் நான்கு நாட்களாய் தொடரந்து கிட்டத்தட்ட 9 வேளை உணவளித்து வருகின்றனர். ஒரு வேளைக்கு உணவளிப்பதே மிகப்பெரிய விசயம்.
ஆனால் அதை காலை, மதியம், இரவு என தொடந்து நான்கு நாட்களாய் புன்னகை மாறாமல், மனம் சலிக்காமல் செய்ய நிச்சயமாய் பரிசுத்தமான அன்புள்ளம் வேண்டும்.
நீங்கள் கொடுத்துவிடுங்கள் என்று சொன்னாலே போதும்.. நாம் கொடுத்துவிட தயாராய் இருக்கிறோம். ஆனால் அவர்கள் தன் குடும்பத்தின் பெண்கள், குழந்தைகளை அனைவரையும் அழைத்துவருகின்றனர். அனைவரும் இறங்கி ரோட்டாரத்தில் பந்தி வைத்து பரிமாறுகின்றனர். மழையோ வெயிலோ தங்களின் கடமையாய் பொறுப்புடன் செய்கின்றனர்.

அதுவும் இந்த குடும்பத்தின் பெண்கள் என்னை இன்னும் ஆச்சர்யப்படுத்தினர். நிறைய துணிமணிகளை எடுத்துவந்து கொடுத்தனர். பாதிக்கப்பட்ட பெண்களிடம் சகோதரியைப் போல பேசி அவர்களின் அவசியத்தேவைகளை கேட்டு அவற்றை நிறைவேற்ற முயற்சி எடுக்கின்றனர். எல்லா குடும்பத்து பெண்களையும் ஒரு பேப்பரில் தங்களின் தேவைகளை பட்டியலிட்டு எழுதித்தர சொல்லி வாங்கிச்சென்றனர்.
தானே முன்னின்று உணவளிக்கின்றனர். கூட்டத்தை அதட்டி கட்டுப்படுத்துகின்றனர். தங்களின் பையன்களையும், பருவ வயது பெண்குழந்தைகளையும் அழைத்து வந்து இதில் பங்கெடுக்க ஊக்கப்படுத்துகின்றனர்.

இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவது ஒருவித பிற்போக்குத்தனமாய் விமர்சிக்கபடும் விசயம். பர்தா அணிய வேண்டும் என வலியுறுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் முற்போக்குத்தனம் என்பது அணியும் உடையில் இல்லை. அது மனதில், நாம் செய்யும் செயல்களில் இருக்கிறது என்பதற்கு இவர்களே சிறந்து உதாரணம்.

மனித நேயத்தை, அதை அவசியமானவர்களுக்கு சரியான நேரத்தில் சரியான செயல்கள் மூலமாய் வெளிக்காட்டுவதைவிட சிறந்த முற்போக்கான விசயம் எதுவும் இல்லை!

Btw, இந்த போஸ்டை போஸ்ட் செய்துவிட்டு இவர்களின் சார்பாக இரவு உணவை எடுத்துச்செல்ல இருக்கிறேன்.

Big Royal Solute to this Family.

-----------------
தொடரும்...
உங்களின் பிறந்தநாள், திருமண நாள் மற்றும் விசேஷநாட்களில் ஆதரவற்றோருடன் உணவை பகிர்ந்து கொண்டாட தொடர்புகொள்ளுங்கள்!

Please share to reach more people and make it happen everyday!

Team வீட்டு சாப்பாடு Veettu Saappadu
Mohamed A. K. Jailani
phone/whatsapp/imo: 7299427999 / 9500092255
email: mjailani@gmail.com
www.veettusappadu.com www.beinghero.org ‪#‎BeingHeroProject‬

Friday, November 20, 2015

உலகின் 10 துயரமான நேரங்களில் எடுக்கப்பட்ட அதிசிறந்த புகைப்படங்கள்

உலகின் 10 துயரமான நேரங்களில் எடுக்கப்பட்ட அதிசிறந்த புகைப்படங்கள்

வியட்நாமில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் அமெரிக்காவையே தலைகுனிய வைத்தது, இதுதான் துயரங்களை வெளிக் கொண்டு வருவதில் புகைப் படங்களின் பங்கை உலகுக்கு உணர்த்திய சம்பவமாகவும் கருதப்பட்டது,

எல்லோருக்கும் ஏதாவது கவலை இருந்து கொண்டு தான் இருக்கும், இழப்புகள் கவலையை இன்னும் அதிகரிக்கும், அந்த இழப்புகள் உலகளாவியரீதியில் நடந்தால் அது உலகம்முழுக்க துயரகீதங்களை விட்டுச்செல்லும், அந்தத் துயரமான நேரங்களில் எடுக்கப்படும் புகைப்படங்கள் உலகை மாற்றிய வரலாறுகளும் உண்டு, அத்தகைய 10 இடங்களில் நடந்த துயரச்சம்பவங்களை வெளிக்கொண்டுவந்த புகைப்படங்களை நாம் இங்கு நோக்கலாம்

10.கொசோவா அகதிகள்
கொசோவாவில் இருந்து உள்நாட்டுக் கலவரங்கள் காரனமாக இடம்பெயர்ந்து சென்ற மக்கள் அந்த நாட்டு எல்லைகளைக் கடக்கும்போது இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது, ஒரு இரண்டுவயதுச் சிறுவன் முட்கம்பிகளுக்கு உள்ளாக எல்லையை தாண்டிக் கைமாற்றப்படும் இந்தப் புகைப்படம் கொசோவா மக்களின் துயரத்தை உலகுக்கு உணர்த்தியது,

இதனை படம்பிடித்தவர், உலகப் புகழ்பெற்ற புலிச்சர் விருதை வென்ற பெண் புகைப்படவியலாளரான கரோல் குஷி என்பவராவார்

09. அண்டர்பூட் யுத்தம்
இந்தப் புகைப்படம் லெபீரியாவில் நடந்த உள்நாட்டுப்போரின் கொடூரத்தைக் காட்டுகின்றது, அரசாங்கப் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் நடந்த அந்தச் சண்டையில் தொருமுழுவதும் கொட்டிக்கிடந்த வெற்று ரவைக்கூடுகளை அமெரிக்காவின் மிகச்சிறந்த புகைப்படவியலாளரான கரோலின் கோல் தனது பாணியில் எடுத்திருந்த புகைப்படம்தான் இது…

08.தாய்லாந்துப் படுகொலை
1977 ஆம் ஆண்டிற்கான புலிட்சர் விருதை வெண்ற புகைப்படம் இது, தாய்லாந்துநாட்டின் சர்வாகிகாரி F. M. T. கிற்ரிக்கச்சோர்ன் இன் அடாவடிகளை எதிர்க்கும் மக்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் அவரை எதிர்த்த டனாமாஸ்ட் பல்கலைக்கழக மானவன் படுகொலை செய்யப்படும் காட்சியை வெளிக்கொண்டுவந்த இந்தப் புகைப்படம் உலகம் முழுவது அதிர்ச்சிப் பேரலைகளைக் கிளப்பியது, இதனை எடுத்து உலகுக்கு கொடுத்தவர் நீல் உலீவிச் ஆவார்


07.புயலின் பின்னரான ஹெயிட்டி

2008 இல் ஹெயிட்டியில் வீசிய பெரும்புயலை அடுத்து அங்கு பெருத்த சேதங்கள் உண்டாகின இதனை புகைப்படவியளாளர் மியாமி ஹெரால்ட் என்பவர் தனது கறுப்பு வெள்ளைப் புகைப்படங்கள் மூலம் உலக்குக்கு வெளிக்கொண்டுவந்தார்,அதில் ஒரு புகைப்படம்தான் இது,

06.இஸ்ரேலிய காவல்த்துறையை எதிர்க்கும் பெண்

இஸ்ரேலில் தங்கள் இருப்பிடங்களை அப்புறப்படுத்த வந்த காவல்த்துறை அதிகாரிகளை எதிர்க்கும் ஒரு பென்ணின் புகைப்படம்தான் இது, இதன் பின்னர் அந்தப் பெண் போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டார் என செய்திகள் கூறுகின்றன,இதனை படம்பிடித்தவர் ஒடேட் பலில்டி எனும் புகைப்படவியலாளராவார், இவரது இந்தப் புகைப்படம் இஸ்ரேல் அரசுக்கு பெருத்த அவமானத்தைப் பெற்றுக்கொடுத்தது…

05.செப்டெம்பர் 11

இதைப்பற்றி அறியாதவர்களே இருக்கமுடியாது, அமெரிக்காவின் பெருமையாக நிமிர்ந்து நின்ற இரட்டைக் கோபுரங்களை ஒரே நாளில் சரிந்து கொட்டச்செய்த சம்பவம்தான் இது, இதனைப் படம்பிடித்தவர் ஸ்டீவ் லட்லும் என்பவராவார்…

04.சுனாமி

இது 2004 இல் இந்தோநேசியாவில் உருவாகி ஆசியாவையே ஒருகை பார்த்த சுனாமியின் போது இந்தியாவில் எடுக்கப்பட்டம் புகைப்படம், ஒரு தாய் கடல்த்தாயிடம் தன் மழலை எங்கே எனக் கதறும் செஞ்சை நெருடும் காட்சி,இது இந்தியப் புகைப்படவியலாளர் அக்ரோ தத்தாவினால் படம்பிடிக்கப்பட்டது

03.போபால் விசவாயுக் கசிவு


2. ஆபரேஷன் லயன் ஹார்ட் (Deanne Fitzmaurice)

புலிட்சர் பரிசு விருது பெற்ற புகைப்பட பத்திரிக்கையாளர் Deanne Fitzmaurice புகைப்பட கட்டுரை 2005 இல், மிகவும் மரியாதைக்குரிய விருது வென்றது "ஆபரேஷன் லயன் ஹார்ட்."

ஈராக் போர் - "ஆபரேஷன் லயன் ஹார்ட்" கடுமையாக நவீன வரலாற்றின் மிகவும் வன்முறை மோதல்கள் ஒரு காலத்தில் ஒரு வெடிப்பு காயமுற்ற ஒரு 9 வயது ஈராக்கிய சிறுவன் கதை. சிறுவன் அவர் வாழ்க்கை-சாவா அறுவை சிகிச்சை டஜன் கணக்கான சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது, அங்கு ஓக்லாண்ட், CA, ஒரு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு. சலே Khalaf, "லயன் ஹார்ட்": அவரது தைரியம், இறக்க விருப்பமின்மை இவரை கொடுத்தார்.
1

1The photo was taken in Sudan in March 1993 by Kevin Carter, a photographer from South Africa. The picture depicts a famine wretched little girl that tries to get closer to the site where UN were giving out food and a vulture that landed behind her. 

The shot became really famous in a short period of time and was awarded the Pulitzer Prize for Feature Photography. Keving Carter, the photographer, commited suicide because of acute depression three months after receiving the Putlizer Prize.

Become a KeepSnap independent photographer and go out today to snap people around you and earn a living. It's completely free for photographers.

Wednesday, November 18, 2015

நிஜமானஹீரோ (ஆட்டோ ஓட்டுனர்) காஸம்ஃபர் அலி.

நிஜமானஹீரோ (ஆட்டோ ஓட்டுனர்) காஸம்ஃபர் அலி.



ஒவ்வொரு ஆண்மகனும் கண்டிப்பாக படிக்கவும்....
சில மாதங்களுக்கு முன்னால், பெங்களூருவைச் சேர்ந்த காஸம்ஃபர் அலி என்னும் ஆட்டோவில், இரவு எட்டரை மணியளவில் ஒரு பெண் பெங்களூருவில் இருந்து கானக்புரா வரை பயணித்தார். அடுத்த நாள் காலை வரையிலும், காஸம்ஃபர் அலிக்கு வழக்கமான தினசரி பயணமாகத்தான் இருந்தது.


என்ன நடந்ததெனத் தெரியவில்லை. அடுத்த சில மணிநேரங்களில் சமூக வலைதளங்களில் பிரபலம் ஆனார் காஸம்ஃபர் அலி. அதே வாரத்தில், தெருவில் உள்ளவர்கள் அவரை அடையாளம் கண்டுகொள்ளத் தொடங்கினர். வார இறுதியில், முதல் நாளன்று தன் ஆட்டோவில் பயணித்த பெண், எதிர்பாராத விதமாக நேரில் வந்து காஸம்ஃபர் அலிக்கு நன்றி சொல்லி ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
என்ன நடந்தது?

மார்க்கெட்டிங் ஆலோசகர் மற்றும் இசைக்கலைஞரான ரஞ்சனி சங்கர்தான் அந்த ஆட்டோ பயணி. அலுவல் காரணமாக ரஞ்சனி, பெங்களூருவுக்கு செல்ல நேர்ந்திருக்கிறது. நகரத்தில் வேலை காரணமாக, இருப்பிடத்துக்கு இரவில் தனியாகச் செல்ல வேண்டிய சூழல். அந்த இடத்திலிருந்து 38 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கானக்புரா சாலைக்குச் செல்ல வேண்டியிருந்தது. இரவு மற்றும் அதிக தூரம் காரணமாக அவருக்கு டாக்ஸி கிடைக்கவில்லை.

கடைசியாக ஓலா ஆட்டோ செயலி மூலம் ஓர் ஆட்டோவை பதிவு செய்தார் ரஞ்சனி. ஓலா அனுப்பி வைத்தது, ஓட்டுநர் காஸம்ஃபர் அலியை.
செல்ல வேண்டிய இடத்தைக் கவனமுடன் கேட்டுக்கொண்ட காஸம்ஃபர் அலி, செல்லப்போகும் பாதை மிகவும் கடினமானது என்று தெரிவித்திருக்கிறார். விளக்குகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே காணப்படும்; வெளிச்சம் குறைவாகத்தான் இருக்கும் என்று கூறியவர், ரஞ்சனியை பயப்பட வேண்டாம் எனவும் கூறியிருக்கிறார். பதற்றமாகவும், பயமாகவும் இருந்தது ரஞ்சனிக்கு. ஆனாலும் அந்த நேரத்தில் வேறு வழியில்லை. துணிந்து ஆட்டோவில் ஏறினார்.

தன் செல்பேசி வழியாக 'கூகிள் மேப்ஸ்' மூலம் வழிசொல்லி, அது காட்டும் வழியில் ஆட்டோவைச் செலுத்தச் சொன்னார், ரஞ்சனி. 15 நிமிடங்கள் கழிந்திருந்தன. நிமிர்ந்து பார்த்தால் சாலை முழுவதும் கும்மிருட்டாகக் காட்சியளித்தது. பயந்திருந்த ரஞ்சனியிடம், பயப்பட வேண்டாம் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தார் காஸம்ஃபர் அலி. கானக்புராவை அடைந்தது ஆட்டோ. அங்கே தனக்காக நண்பர் காத்திருப்பார் என்ற எண்ணத்தில் கொஞ்சம் நிம்மதியானார் ரஞ்சனி.

போக்குவரத்து நெரிசல் காரணமாக, உரிய நேரத்துக்கு ரஞ்சனியின் நண்பரால் வரமுடியவில்லை. இன்னும் வந்து சேராத நண்பருக்காக, சில தேநீர்க்கடைகள் மட்டுமே இருந்த இடத்தில், ரஞ்சனி காத்திருக்க நேர்ந்தது. சற்றும் யோசிக்காமல் காஸம்ஃபர் அலி, நண்பர் வரும்வரை ரஞ்சனியுடன் காத்திருப்பதாக நம்பிக்கையளித்தார். நண்பர் வர சுமார் 20 நிமிடங்கள் ஆனது. அந்த நேரத்தில்தான் அந்த ஃபேஸ்புக் பதிவை எழுதினார் ரஞ்சனி.

அதை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுவிட்டு, ஹோட்டல் அறைக்குத் திரும்பினார் ரஞ்சனி. ஒரு மணி நேரத்தில் 400 லைக்குகள், அடுத்த நாள் காலையில் 2,000 லைக்குகள். 4000, 5000 என அதிகரித்த அந்தப்பதிவுக்கு இப்போது (நீங்கள் இதைப் படிக்கும்போது இந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம்) கிடைத்திருக்கும் லைக்குகளின் எண்ணிக்கை 17,700. ஷேர்கள் மொத்தம் 2828. அது மட்டுமல்ல. பல்வேறு ஆன்லைன் ஊடகங்களிலும் இது வைரலாகி இருக்கிறது.

அப்படி அந்தப்பதிவில் என்னதான் இருந்தது? ஒரு சாதாரணப் பயணம், தனக்கு மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான மக்களிடையே என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியது?

ரஞ்சனியே சொல்கிறார்:
"நாம் பெரும்பாலும் எதிர்மறையான செய்திகளையே கேட்க பார்க்க நேரிடுகிறது. முக்கியமாக டாக்ஸி பயணங்களைப் பற்றியும், டாக்ஸி ஓட்டுநர்களைப் பற்றியும்.

நேர்மறையான விஷயங்கள் யாருடைய கவனத்துக்கும் எட்டப்படுவதே இல்லை. முரட்டுத்தனமான, ஆபத்தான ஓட்டுநர்களைப் பற்றி மட்டுமே பேசி வரும் நாம் ஏன் ஒரு நல்லவரை, உழைப்பாளியைப் பற்றிப் பேசக்கூடாது என்று தோன்றியது. அதன் விளைவுதான் அந்தப் பதிவு. இருட்டு, தனிமை, பயமுறுத்தும் சாலையில் ஒரு பெண் தனியாகப் பயணிக்க நேர்ந்த நிலைமையை அனைவராலும் புரிந்துகொள்ள முடிந்தது. அப்போது உதிர்க்கப்பட்ட ஓட்டுநரின் தைரியமூட்டும் வார்த்தைகள், அப்பெண்ணுக்கு எவ்வளவு ஆறுதலாக இருந்திருக்கும் என்பதையும் உணர முடிந்தது. அதனால்தான் அப்பதிவு வைரலானது!".

மற்றொரு பக்கம், அர்ப்பணிப்புடன் வேலை பார்த்த காஸம்ஃபர் அலிக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. தான் வசிக்கும் பகுதியின் ஹீரோவாகவே ஆகிவிட்டார் காஸம்ஃபர். வானொலி, ஊடகங்கள், செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகள் இதை செய்தியாக்கி இருக்கின்றன. 



உள்ளூர் காவல்துறை ஆணையாளர் இவரை அழைத்துப் பாராட்டு தெரிவித்திருக்கிறார். இதை அறிந்த ஓலா நிறுவனம், அவரின் ஆட்டோரிக்‌ஷாக் கடனைத் தாங்களே செலுத்தி விடுவதாகக் கூறிவிட்டது. அத்தோடு ரஞ்சனியை அழைத்த ஓலா, காஸம்ஃபரைச் சந்திக்க முடியுமா எனவும் கேட்டது.

தேவைப்பட்ட நேரத்தில், தைரியம் அளித்து, தன்னைப் பத்திரமாய் இருப்பிடம் அழைத்துச் சென்ற காஸம்ஃபரை மீண்டும் பார்க்க உடனே ஒப்புதல் அளித்தார். ஓலாவும் ரஞ்சனியை ஏற்றிக்கொண்டு பெங்களூருவுக்குப் பறந்தது. ரஞ்சனி, தன் வீட்டுக்குள் நுழைந்ததும், வியப்பின் உச்சத்துக்கே போனார் காஸம்ஃபர் அலி. தன் மனைவியையும், ஐந்து வயது மகனையும் ரஞ்சனிக்கு அறிமுகம் செய்து வைத்தார். 




மரியாதையளிக்கும் விதமாகவும், நன்றி தெரிவிக்கும் விதமாகவும் ரஞ்சனி, அவருக்கு கைக்கடிகாரம் ஒன்றைப் பரிசளித்தார். ஒன்றாக அமர்ந்து எல்லோரும் தேநீர் அருந்தினர்.
சில நிமிட அமைதிக்குப் பின்னர், காஸம்ஃபர் அலி ரஞ்சனியிடம் கேட்டிருக்கிறார்.

"மேடம், நான் ஏன் இத்தனை பிரபலமானேன் என்று எனக்குத் தெரியவில்லை. எல்லோரும் ஃபேஸ்புக்தான் அதற்குக் காரணம் என்கிறார்கள். ஃபேஸ்புக் என்றால் என்னவென்று தெரியும். ஆனால் அது என்ன 'லைக்'கு?"

SOURCE
http://www.thehindu.com/features/metroplus/society/bangalore-ola-auto-driver-is-social-media-sensation/article7443777.ece
THANKS TO
'கொல்லாபுரம்' MOHAMED ALI.