Wednesday, April 23, 2014

நுங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

நுங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

இந்தியாவில் கோடைக்காலத்தில் தெருக்களில் விற்றுக் கொண்டு வரும் பழங்களில் ஒன்று தான் நுங்கு. இந்த நுங்கு மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, இதில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக கோடையில் உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்துக்களை இது தன்னுள் அதிகம் உள்ளடக்கியுள்ளது. மேலும் உடலின் கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். அதுமட்டுமின்றி, இதில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளது.

இந்தியாவில் கோடைக்காலத்தில் தெருக்களில் விற்றுக் கொண்டு வரும் பழங்களில் ஒன்று தான் நுங்கு. இந்த நுங்கு மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, இதில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக கோடையில் உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்துக்களை இது தன்னுள் அதிகம் உள்ளடக்கியுள்ளது. மேலும் உடலின் கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். அதுமட்டுமின்றி, இதில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளது.

இங்கு நுங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து, கோடையில் நுங்கு சாப்பிட்டு மகிழுங்கள்.

எடையை குறைக்கும் 
கோடையில் மிகவும் ஈஸியாக உடல் எடையைக் குறைக்கலாம். ஏனெனில் இக்காலத்தில் உடல் எடையை குறைக்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். அதில் ஒன்று தான் நுங்கு சாப்பிடுவது. நுங்கு சாப்பிட்டால், அதில் உள்ள அதிகப்படியான தண்ணீரானது வயிற்றை நிரப்பி, அடிக்கடி பசி ஏற்படுவதைத் தடுக்கும்.

மார்பக புற்றுநோய் 
நுங்குவில் ஆந்தோசையனின் என்னும் பைட்டோ கெமிக்கல் உள்ளது. இவை மார்பக புற்றுநோய் செல்கள் மற்றும் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்கும் சக்தி கொண்டவை.

சின்னம்மை 

சின்னம்மை வராமல் தடுக்க வேண்டுமானாலும் சரி, வந்த சின்னம்மையை விரைவில் குணப்படுத்தவும் சரி, நுங்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

வெயிலால் ஏற்படும் மயக்கம்
சிலருக்கு வெயிலில் செல்லும் போது அடிக்கடி மயக்கம் போடுவார்கள். அத்தகையவர்கள் நுங்கு அதிகம் சாப்பிட்டால், உடலின் நீர்ச்சத்து அதிகரித்து, மயக்கம் ஏற்படுவது குறையும்.

கர்ப்ப காலம் கர்ப்பிணிகள் 
நுங்கு சாப்பிட்டால், செரிமானம் அதிகரிப்பதுடன், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்

நீர்ச்சத்தை அதிகரிக்கும்

நுங்குவில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே கோடையில் உடலில் வறட்சி ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், நுங்கு சாப்பிடுங்கள்.

வயிற்று பிரச்சனைகள் 

வயிற்றில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைப் போக்க வேண்டுமானால், நுங்கு சாப்பிடுங்கள்.

சோர்வு 
கோடையில் விரைவில் சோர்வடைந்துவிடுவோம். இத்தகைய சோர்வை நுங்கு சாப்பிட்டால் தடுத்துவிடலாம்.

செரிமான பிரச்சனைகள் 
செரிமான பிரச்சனை உள்ளவர்கள், நுங்கு சாப்பிட்டு வந்தால், அது செரிமான மண்டலத்தை சீராக செயல்பட வைத்து, செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.

மலச்சிக்கல் 

மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள், காலையில் வெறும் வயிற்றில் நுங்கு சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

கல்லீரல் பிரச்சனை
கல்லீரலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நுங்கு பெரிமும் உதவியாக இருக்கும். ஏனெனில் இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது.

உடலை குளிர்ச்சியாக்கும் 
கோடையில் உடலின் வெப்பமானது அதிகரிக்கும். இத்தகைய வெப்பத்தை நுங்கு சாப்பிடுவதன் மூலம் தணிக்க முடியும்.

வியர்குரு 
நுங்கு சாப்பிட்டால், உடல் வெப்பம் குறைந்து, உடலில் வந்துள்ள வியர்குரு போய்விடும்.

வெயில் கொப்பளம் 
கோடையில் பலருக்கு வெயில் கொப்பளம் வரும். இத்தகைய கொப்பளத்தை வராமல் தடுக்க, நுங்கு சாப்பிடுங்கள்.

குமட்டல் 
குமட்டல் உணர்வைத் தடுக்க எலுமிச்சை உதவவில்லை என்றால், நுங்கு சாப்பிடுங்கள். இது குமட்டலைத் தடுக்கும்.

ஆற்றலை அதிகரிக்கும் 

நுங்குவில் உள்ள சரியான கனிமச்சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும், உடலின் குளுக்கோஸ் அளவை சீராக வைத்து, உடலை சுறுசுறுப்புடன் வைத்துக் கொள்ள உதவிப் புரியும்.


நன்றி 
ஒன்  இந்தியா... 

Saturday, April 19, 2014

திருச்சிக்கு பெருமை சேர்த்த சுதந்திர போராட்ட வீரர் சையத் முர்துஜா ஹஸ்ரத் !!!!



திருச்சிக்கு பெருமை சேர்த்த சுதந்திர போராட்ட வீரர் சையத் முர்துஜா ஹஸ்ரத் !!!!

இவர்களை போன்ற மாமனிதர்களை நாம் நினைவு கூறுவது மிக முக்கியமான ஒன்று , மாமனிதர்களின் சரித்திரங்கள் மறைக்க பட்டு உள்ளது ஒரு நண்பர் இவரை பற்றிய தகவல் தந்து பகிர சொன்
னார் அதனால் நான் இந்த தகவலை உங்களுக்கு பகிர்கிறேன் ,இது போன்று உங்களுடைய ஊருக்கு பெருமை சேர்த்த தலைவர்கள் ,ஊர் பெருமை பற்றிய தகவல் தந்தால் நான் எல்லா நண்பர்களுக்கு பகிர்கிறேன் . இதன் மூலம் தெரியாத விசையங்களை எல்லோருக்கும் தெரிய ஒரு வாய்ப்பாக அமையும் . சையத் முர்துஜா ஹஸ்ரத் அவர்களின் பூர்வீகம் புகாரா (புகாரஸட் – ரஷ்யா) ஆகும். ஹஸ்ரத் அவர்கள் பிறந்தது, வளர்ந்தது திருச்சிராப்பள்ளியில் தான். இவர் பி.ஏ. வரை படித்து தேர்வு பெற்று, திருச்சி ஜில்லா மாவட்ட ஆட்சியர் காரியாலயத்தில் தலைமைக் குமாஸ்தா பதவியை ஏற்றார்கள். கல்வியில் இஸ்லாமியர்கள் சிறக்க வேண்டும் என்பதால் “இஸ்லாமிய உயர்நிலைப்பள்ளி” என்ற பள்ளியைத் தோற்றிவித்தார். இப்போது இதன் பெயர் “சையத் முர்துஜா அரசு உயர்நிலைப்பள்ளி” என்று மாற்றப்பட்டுள்ளது.
ஹஸ்ரத் அவர்கள் சமுதாய கல்வி வளர்ச்சிக்காகப் பாடுபட்ட அதே நேரத்தில் அரசியலிலும் பங்கெடுத்துத் தேசத்திற்காகவும் சேவை செய்து வந்தார்கள். கி.பி. 1912- ல் மதராஸ் சட்டக்கவுன்ஸில் அங்கத்தினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அச்சமயம் இந்தியாவை ஆண்டு வந்த ஐந்தாம் ஜார்ஜ் அவர்கள் ஹஸ்ரத்தை அழைத்து ஹானரபிள் என்ற பட்டம் வழங்கினார். ஆனால் இந்தப் பட்டத்தை தூக்கியெறிந்து விட்டு பிரிட்டிஷாரின் பகையை ஏற்படுத்திக் கொண்டார்கள். கி.பி. 1919 –க்குப் பின் கிலாபத் இயக்கத்தில் தீவிர பங்கு கொண்டு, காங்கிரஸ் உடன் சேர்ந்து ஒத்துழையாமை இயக்கத்திலும் கலந்து கொண்டார்கள்.
மெளலானா ஷவுகத் அலி, காந்திஜீ ஆகிய இரு பெருந்தலைவர்கள் திருச்சி வந்தபொழுது இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக ரூ.20 ஆயிரம் நிதி திரட்டிக் கொடுத்தார்கள். இதனால் ஹஸ்ரத் அவர்களின் புகழ் இந்தியாவின் எண்திசைகளிலும் பரவக் காரணமாகியது. கி.பி. 1923-ஆம் ஆண்டில் டத்திய சட்டசபை (தற்போதைய பாராளுமன்றத் தேர்தல் போன்றது) தேர்தல் நடந்தபொழுது, சென்னை மாநிலத்தின் பதினொரு ஜில்லாக்களின் சார்பில் நடைபெற்ற தேர்தலில் ஹஸ்ரத் அவர்கள் திருச்சி ஜில்லாவில் நின்று வெற்றி வாகை சூடினார். இவர் 24 வருடங்கள் தொடர்ந்து மத்திய சட்டசபையில் இருந்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நீண்ட காலத்திற்கு ஹஸ்ரத் அவர்கள் மத்திய சட்டசபையில் சேவை செய்து வந்ததால் இந்தியாவில் அனைத்துத் தலைவர்களுக்கும் ஹஸ்ரத் அறிமுகமானவராக இருந்தார்.
பாகிஸ்தான் ஏற்படுவதை எதிர்த்த குறைந்த முஸ்லீம் தலைவர்களில் ஹஸ்ரத் அவர்களும் ஒருவராக இருந்தார்கள். இதனால் திருச்சி மக்கள் அனைவரும் இவரை “படே ஹஸ்ரத்” (பெரிய ஹஸ்ரத்) என்றே அன்புடன் அழைத்தனர். இவர் கி.பி. 1940 –ம் ஆண்டு நவம்பர் மாதம் 6 –ம் தேதி மறைந்தார்கள்.

Thursday, April 17, 2014

ஹாக்கியின் அரசன்"தியான் சந்த்"

ஹாக்கியின் அரசன்"தியான் சந்த்" 


இங்குள்ள பல பேருக்கு இவர் யார் என்று தெரிய வாய்பில்லை!
உண்மையில் விளையட்டு துறைக்கு என்று ஒருவருக்கு விருது வழங்க வேண்டுமானால்! அதற்கு இவரை தான் முதல் ஆளாக பரிசீலிக்க வேண்டும்! *1932 இல் 37 போட்டிகளில் 133 கோல் , 1934 -35 இல் 43 போட்டிகளில் 201 கோல் என இவர் அசுரத்தனமாக அடிப்பதை பார்த்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டான் பிராட்மேன் 'நீங்கள் ஹாக்கி வீரர் என்று சொல்லி ஒரு கிரிக்கெட் வீரரை அணியில் சேர்த்து விட்டீர்கள்! இவர் ரன்களை போல அல்லவா கோல்கள் அடிக்கிறார்!' என்று சொல்லி இருக்கிறார்! 

*சில வெளிநாட்டு பத்திரிக்கைகள் 'இவர் மட்டையில் பசையை தடவி வைத்திருப்பார் போலும்! பந்து அவர் மட்டையுடனே செல்கிறதே!' என எழுதின! 

*ஆஸ்திரிய நாட்டில் இவர் நான்கு கைகளுடன் இருப்பது போல சிலை வைக்கப்பட்டு உள்ளது! அந்த நான்கு கைகளும் தலா ஒரு ஹாக்கி மட்டையை கையில் பிடித்த வண்ணம் இருக்கும்! 
*1905 இல் பிறந்து 1979 இல் மறைந்த தியான் சந்தின் பிறந்தநாளான ஆகஸ்ட் 29 தான் இந்திய நாட்டின் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது! 
*ஹாக்கி விளையாட்டின் மந்திரவாதி என அந்தக் காலத்து பத்திரிக்கைகள் இவரை வர்ணித்தன! 'ஹாக்கியின் கடவுள் " என்றும் வர்ணிக்கப்படுகி றார்! இவரைப்போல அசுரத்தனமாக எந்த வீரரும் இன்று வரை ஹாக்கி அரசன்  ஆடியதில்லை! 

*ஹாலந்து நாட்டில் இவரது ஹாக்கி மட்டையை உடைத்து அதில் காந்தம் ஏதும் வைத்து இருக்கிறாரா என சோதித்து இருக்கிறார்கள்! 
*ஒருமுறை வளைதடிப் பந்தாட்டமொன்றில் என்ன முயன்றும் தியான் சந்தினால் கோல் அடிக்க முடியவில்லை; பலமுறை தவறியபின்னர் தியான் சந்த் நடுவரிடம் இரு கோல் வலைகளுக்கும் இடையே உள்ள தூரம் சரியில்லை என்று முறையிட்டார். அளவெடுத்துப் பார்த்தபோது பன்னாட்டு விதிகளின்படி இடைத்தூரம் சரியாக இல்லை என்றறிந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. 
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQPSKfUR0q558E9xuc0p8R0Szo1_sQlyeexPNReogKT0RKlMa_8ag
*தியான் சந்தின் திறமையை பார்த்த ஹிட்லர் ஜெர்மன் குடியுரிமையுடன் , ராணுவத்தில் கலோனல் பதவியும் தருவதாக சொல்லி இருக்கிறார்! அந்த சலுகையை தயான் சந்த் மறுத்து விட்டார்! 

*சர்வதேச ஹாக்கியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோல்களை இவர் அடித்துள்ளார். இவர் பெயர் "தியான் சந்த்". பாரத ரத்னா விருது இவருக்கு வழங்கப்படும் என அனைவராலும் எதிர்பார்க்கபட் டது. விளையாட்டு அமைச்சகமும் இவருக்கு பரிந்துரை செய்தது. ஆனால் விளையாட்டு வீரர்களுக்கு "பாரத் ரத்னா" கொடுக்கப்படுவதி ல்லை என்பதால் அதை அரசு மறுத்துவிட்டது.

Wednesday, April 9, 2014

பெட்ரோல் நிரப்பும்போது கோல்மால்களிலிருந்து தப்பிக்க சில டிப்ஸ்!

பெட்ரோல் நிரப்பும்போது கோல்மால்களிலிருந்து தப்பிக்க சில டிப்ஸ்!


இன்று வாகன உரிமையாளர்களுக்கு பெரும் சவாலாக இருப்பது எரிபொருள் கொள்ளை. சில பெட்ரோல் நிலையங்களை தவிர்த்து பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் அளவீட்டில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன.
சில பெட்ரோல் பங்குகள் ஒரு படி மேலே போய், கலப்படம் செய்து பெட்ரோல், டீசலை விற்பனை செய்கின்றன. இதனால், எஞ்சினின் ஆயுட்காலம் சுருங்கத் தொடங்கி விடுவதுடன், உரிமையாளர்களுக்கு பராமரிப்பு செலவீனத்தை பன்மடங்கு அதிகரிக்க வைக்கின்றன.
இது போதாது என்று பெட்ரோல் நிலைய பணியாளர்கள் அளவீடுகளில் செய்யும் முறைகேடுகளும் வாகன உரிமையாளர்களுக்கு பெரும் சவாலாக இருக்கின்றன. இந்த நிலையில், பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் நிரப்பும்போது முன் யோசனையுடன் நடந்து கொண்டால் இதுபோன்ற பிரச்னைகளிலிருந்து ஓரளவு விடுபடலாம்.

பெட்ரோல் நிரப்பும்போது காரில் இருக்கும் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் பேசுவதை தவிருங்கள். அதேபோன்று, உங்களிடம் பெட்ரோல் நிலைய ஊழியர் பேச்சுக் கொடுத்தாலும், சற்று பொறு என்று சொல்லிவிட்டு முழு கவனத்தையும் பெட்ரோல் மீட்டர் மீது வைத்துவிடுங்கள்.

சார் கார்டா, கேஷா...
பெட்ரோல் மீட்டரை ஆன் செய்தவுடனேயே அங்கிருக்கும் ஊழியர், சார், கார்டா, கேஷா என்று கேட்டு உங்களது கவனத்தை திசை திருப்ப முயல்வர். அப்போது கவனமாக இருங்கள். பெட்ரோல் நிரப்பி முடிந்த பின்னரே கார்டு அல்லது பணத்தை செலுத்துங்கள்.

இதிலும் கவனம் தேவை

பெட்ரோல் நிரப்பும்போது பம்ப்பின் நாசிலில் பெட்ரோல் நிலைய ஊழியரை கைவைக்க வேண்டாம் என்று கூறுங்கள். தற்போது தானியங்கி முறையில் பெட்ரோல் நிரப்பும் வசதி இருப்பதால், பெட்ரோல் முழுமையாக நிரப்பிய பின்னர் பம்ப்பின் நாசில் தானாகவே ஆஃப் ஆகிவிடும் வசதி உள்ளது.

ரசீது

பெட்ரோல் நிரப்பியுடன் அச்சிடப்பட்ட ரசீதை பெற்று சரிபாருங்கள். அதில் பெட்ரோல் அளவு சரியாக இருக்கிறதா என்பதை பார்த்துவிட்டு பணத்தை செலுத்துங்கள்.

பெட்ரோல் நிலையத்தில் சேவை குறைபாடுகள் மற்றும் அளவீடுகளில் பிரச்னை இருந்தால் பெட்ரோல் நிலைய மேலாளரிடம் இருக்கும் புகார் புத்தகத்தை வாங்கி புகாரை பதிவு செய்து விட்டு வாருங்கள். இந்த விஷயத்தில் எண்ணெய் நிறுவனங்கள் மிகுந்த அக்கறையுடனும், தீவிரமாகவும் எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்கின்றன.

காரை நிறுத்தும்போதே...
காரை நிறுத்தும்போதே முடிந்தவரை பம்ப்பை விட்டு சற்று தள்ளியே நிறுத்துங்கள். பெட்ரோல் நிரப்பும் குழாயை மடக்காமல் சற்று நீளமாக இழுத்து வந்து பெட்ரோல் நிரப்பும்போது, அதிலிருந்து பெட்ரோல் முழுமையாக டேங்கிற்கு எளிதாக செல்லும்.

கலப்பட பெட்ரோல்
சிறந்த பெட்ரோல் நிலையங்களே கேட்டு தெரிந்துகொண்டு அங்கு பெட்ரோல் அல்லது டீசல் நிரப்புவதை வழக்கமாகி கொள்ளுங்கள்.

பெட்ரோல் அளவு சரியாக இல்லாதபட்சத்தில் நமக்கு பல்வேறு சந்தேகங்கள் மனதில் எழும். நம் டிரைவிங் சரியில்லாததால் மைலேஜ் தரவில்லை என்று சிலர் நினைக்க கூடும். சாலை சரியில்லை, எஞ்சின் சரியில்லை என்று கால்குலேட்டரும் கையுமாக அலைய வேண்டியிருக்காது. ஒரு சில கிமீ தள்ளி இருந்தாலும் நம்பகமான பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் நிரப்புங்கள். ஒவ்வொரு பயணமும் சந்தோஷமாக அமையும்.

எந்த நேரத்தில் பெட்ரோல் நிரப்புவது சிறந்தது?
எந்த நேரத்தில் பெட்ரோல் நிரப்புவது சிறந்தது? டிப்ஸ் செய்தியை படிக்க இங்கே <<கிளிக்>> செய்யவும்.

உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா....?


thanks to
one india a

Tuesday, April 1, 2014

10 Nokia Secret Codes:

10 Nokia Secret Codes:


1)One of the most important and frequently used Nokia code allows users to find out the phone's firmware version. Use *#0000#, to get the firmware version and date created displayed on the screen. 

2)To find the phone's IMEI (International Mobile Equipment Identity Code) one should use this code: *#06#. This seems to be the only code that works on every Nokia phone, regardless of the model.

3)Using the *#92702689# code will allow you to check the phone's exact release date from the factory, as well as the repaired dates of the phone, if it's the case.

4)The Nokia secret code *4720# is useful when you want to turn on the half rate transmission. This will make your phone use only half of the bandwidth, but will have a negative impact on the on call sound quality. To turn it off again use #4720#.

5)Most Symbian phones already have a special option that allows users to display or turn off the carrier's logo. Those who don't have this option in the phone's menu can use *#67705646#.

6)To find out the clock status of the SIM card inside the phone use the code combination *#746085685#. This code is only available on some Nokia phones.

7)Symbian phones allows users to use the soft reset command without browsing for it in the main menu. Simply use the code *#7370# to soft format the memory of the phone.

8)When you have troubles with the phone's Bluetooth connection and you need to find the MAC address, simply use *#2820#. This code seems to work on most Nokia phones that feature Bluetooth connectivity.

9)Use *#30# code combination to see a private number in case someone is calling you and uses this feature.

10)To restore the phone's Factory Settings use *#7780#. Obviously, this will reset the phone to factory defaults and comes in handy when you make changes in the phone's settings while experimenting with it.