Tuesday, June 13, 2017

பிரான்சு நாட்டின் உயரிய விருதை பெற்ற ஜிஹாதி

பிரான்சால் பாராட்டப்பட்ட ஜிஹாதி

19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் நடந்தது அந்த நிகழ்ச்சி!  ஒரு நாட்டால் தேசத் துரோகியாய் கருதப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்ட ஒருவர், பின்னர் அதே நாட்டால் அந்த நாட்டின் மிக உயர்ந்த விருது வழங்கப்பட்டு ஹீரோவாய் புகழப்படுவது வரலாற்றில் அரிதாகக் காணக்கிடைக்கும் நிகழ்வு. இத்தனைக்கும் குற்றம் சாட்டியதும், பின்னர் அவரைக் கொண்டாடியதும் அவரது சொந்த நாடு அல்ல.

“அமீர் அப்துல் காதிர் அல் ஜசாயிரி” ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் 1808 ஆம் ஆண்டு பிறந்து இளம் வயதிலேயே அல்-குரானை மனனம் செய்து இஸ்லாமியக் கல்வியையும் கற்ற மார்க்க அறிஞராகத் திகழ்ந்தார். 1825 ஆம் ஆண்டு மக்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டுவிட்டு, பல்வேறு அரபு நாடுகளில் பிரயாணம் செய்து விட்டு பல வருடங்கள் கழித்து நாடு திரும்பிய போது தனது தாய்நாடான அல்ஜீரியாவை பிரஞ்சுப் படைகள் ஆக்கிரமித்திருந்தன. இன்று உலகில் நல்லவர்கள் என்பது போல் காட்டிக்கொள்ளும் ஆங்கிலேயர்களும் பிரஞ்சுக்காரர்களும் உலகம் முழுவதும் நிகழ்த்திய கொடூரங்கள் எண்ணிலடங்காதவை.

வெறும் 22 வயதில் ஆக்கிரமிப்புக்கு எதிராக களம் இறங்கினார் அப்துல் காதிர். போர்க்களில் அனுபவம் ஏதுமின்றி களத்தில் குதித்து வல்லரசுகளில் ஒன்றான பிரான்சை எதிர்த்துப் போரிடும் சாதாரண பணியில்லை. ஆனாலும் உறுதி பூண்டார், களம் கண்டார்,  தனித்தனி குழுவாக இருந்த அனைத்துப் பழங்குடி மக்களையும் ஒன்றிணைத்து ஒரு படையை அமைத்தார். இதுவே அவர்களின் முதல் வெற்றி !!!

1842 வரை தொடர்ந்த தாக்குதல்களில் சில இடங்களில் இவரது படைகளும் சில இடங்களில் பிரஞ்சுப் படைகள் வெற்றி பெற்றன. பிரஞ்சுப் படைகள் நிறைய இடங்களில் சமாதான உடன்படிக்கைகளை மீறி தாக்குதல் நடந்தியது.

நவீன ஆயுதங்களும், பணபலமும், படைபலமும் கொண்ட ஒரு வல்லரசை எதிர்த்து எத்தனைநாள் பழங்குடிகளால் தாக்குப் பிடிக்க முடியும்? பிறகு சில வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்ட அப்துல் காதிர். பின்னர் பிரான்சுக்கும், பிறகு அங்கிருந்து டமாஸ்கஸ் நகருக்கு நாடு கடத்தப்பட்டார். அல்ஜீரியா பிரஞ்சின் காலனி நாடு ஆனது.
அரேபியக் கைதிகளின் உடல்களைச் சிதைப்பது, பழங்குடிக் குழுக்களை ஒட்டுமொத்தமாக துடைத்தெறிவது, ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளை உயிருடன் எரிப்பது என்று பிரான்ஸ் தனது அழிச்சாட்டியத்தை காட்டியது. ஆனால் இஸ்லாமிய போர் நெறிமுறைகளைப் சரிவரப் பின்பற்றிய  அமீர் தனது எதிரிகளைப் போன்று கீழ்த்தரமாக நடந்து கொள்ளாமல் பெருந்தன்மையாக நடந்து கொண்டார். இவ்வளவு ஏன், ஒருமுறை கடும் உணவுப் பஞ்சம் வந்தபோது தன்னிடம் கைதிகளாக உள்ள பிரஞ்சுப் படை வீரர்களுக்கு தன்னால் உணவளிக்க முடியாமல் போனபோது அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்து விட்டார். அதற்கு முன்னரோ பின்போ போரில் நடக்காத இந்த அரிய நிகழ்வை வரலாறு இன்றும் பொன்னெழுத்துக்களால் பொறித்து வைத்துள்ளது.

1841 ஆம் ஆண்டு அப்துல் காதிரிடம் இருந்த பிரஞ்சுக் கைதி ஒருவரை விடுதலை செய்யக் கோரி அல்ஜீரிய பிஷப் எழுதிய கடிதத்தில் ”என்னை உங்களுக்குத் தெரியாது. எனது இறைப் பணி என்பது கடவுளுக்கு பணிவிடை செய்வதும் எல்லா மனிதர்களையும் சகோதர்களாக  நேசிப்பதும் தான். என்னிடம் தருவதற்கு பணமோ தங்கமோ இல்லை “கருணையுள்ளவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்” என்ற விவிலிய வாக்கியத்துடன் நிறைவடைந்த கடிதத்துக்கு அமீர் இப்படி பதில் எழுதினார்.

சிறைபட்டிருக்கும் ஒரு கிருஸ்த்தவரின் விடுதலையை மட்டுமே நீங்கள் கோரி இருக்கக் கூடாது. எல்லா கிருஸ்த்தவர்களையும் விடுவிக்குமாறு நீங்கள் கோரி இருக்க வேண்டும். அதே போன்று பிரஞ்சு ராணுவத்தால் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம்களையும் விடுவிக்குமாறு நீங்கள் கூறி இருந்தால், உங்கள் இறைப்பணி இன்னும் இருமடங்கு பலனுள்ளதாய் ஆகி இருக்குமே. விவிலியத்தில் தானே இதுவும் இருக்கிறது ”மற்றவர்கள் உனக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறாயோ அதனை நீ அவர்களுக்குச் செய்” என்று முடித்திருந்தார்.

இந்த வீரர்களை மீட்கும் பணியில் இரு தரப்பினரும் ஈடுபட்டிருந்த வேளையில் பிரஞ்சு தளபதிகள் முதல் முதலாக அப்துல் காதிர் அவர்களை  நேரில் கண்டு அவரது எளிமையைக் கண்டு வியந்து போனார்கள். டமாஸ்கசுக்கு நாடு கடத்தப்படுவதற்கு முன்னால் அமீரை சந்தித்த நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் நன்றிகளை அவருக்குத் தெரிவித்தார்கள். அவர்களில் அப்துல் காதிர் அவர்களிடம் கைதியாகப் பிடிபட்டு நல்ல முறையில் நடத்தப்பட்ட பிரஞ்சு ராணுவ அதிகாரிகளும் உண்டு.

நாடுகடத்தப்பட்டு டமாஸ்கஸ் நகரில்  வாழ்ந்து கொண்டிருந்த அப்துல் காதிர் அங்கும் சில சவால்களை மேற்கொள்ள வேண்டி வந்தது. 1860 ஆம் ஆண்டு உதுமானியப் பேரரசின் அப்போதைய கவர்னராக இருந்த உமர் பாஷாவின் ஆளுகையில் இருந்த ஷியாக்களில்  ஒரு பிரிவினரான “துருஸே முஸ்லிம்கள்” கிறித்தவர்களை தாக்கினார்கள். அநியாயமாக எந்தக் கிறித்தவனும் கொலை செய்யப்படுவதை நான் வேடிக்கை பார்க்க மாட்டேன் என்று அறிவித்த அப்துல் காதிர் ஒரு படையை திரட்டி கிறித்தவர்களை பாதுகாக்கும் பணியில் இறங்கினார்.

தனது நாட்டை அடிமைப்படுத்தி, தன்னை போரில் தோற்கடித்து சிறையில் அடைத்து நாடு கடத்தியவர்கள் தானே என்று பார்க்காமல் நியாயத்துக்கு குரல் கொடுத்தார். உதுமானியப் பேரரசின் அரசருக்கு தகவல் அனுப்பினார். படை திரட்டி 12,000 க்கும் மேற்பட்ட கிருஸ்த்தவர்களைக் காப்பாற்றி ”Citadel of Damascus” என்ற கோட்டையில் அவர்களைத் தங்க வைத்து பாதுகாத்தார். உலகம் முழுவதும் பரவிய இந்தத் தகவலில் நெகிழ்ந்துபோனார்கள் கிறித்தவர்கள். கூனிக் குறுகிப் போனது பிரஞ்சு அரசாங்கம். அவரது மனித நேய நடவடிக்கைக்காக ஆயிரக்கணக்கில் மக்களை பாதுகாப்பாய் இடம் பெயர்த்த ஜிஹாதுக்காக பிரஞ்சு அரசின் மிக உயரிய விருதான  Grand Cross of the Légion d’honneur  அவருக்கு அறிவிக்கப்பட்டது.

தங்களுக்கு எதிராகப் போர் தொடுத்து தங்களால் நாடு கடத்தப்பட்ட ஒருவருக்கே தனது நாட்டின் உயரிய விருதை வழங்கும் நிகழ்வு வரலாற்றில் மிக அரிதே. அது இங்கே நடந்தது. காட்டுத்தீயெனப் பரவிய இந்த சம்பவம் அமெரிக்காவை வந்தடைந்தது. ஒரு முஸ்லிம் கிறித்தவர்களின் உயிருக்காக ஜிஹாத் செய்தாரா? என்று நம்ப முடியாமல் கேட்டார் அதிபர் ஆப்ரஹாம் லிங்கன்.

பாராட்டுக் கடிதமும்  சில துப்பாக்கிகளும் அன்பளிப்பாக லின்கனிடமிருந்து அனுப்பப்பட்டது. இன்றும் அந்தத் துப்பாகிகள் அல்ஜீரிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்றார்கள். அயோவா மாகாணத்தில் இருக்கும் ஒரு நகரத்துக்கு “Elkader” அப்துல் காதிரின் பெயர் சூட்டப்பட்டது.

அரபுப் பெயர் கொண்டவர்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு முன்னால் சந்தேகப் பார்வை பார்க்கப்பட்டு தனிச் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படும் ஒரு நாட்டில், எங்கோ நீதிக்காய்ப் போராடிய ஒரு விரரின் பெயரில் ஒரு நகரம் இருக்கிறது என்பது ஆச்சரியமான விஷயம் தானே !!!

       நமது பிள்ளைகளுக்கு இவரை போன்ற அரசர்களின் வரலாறுகளையும், இஸ்லாமிய அரசியல் முறையும் சொல்லி வளர்ப்போம். இவரைபோன்ற இஸ்லாமிய மார்க்கத்தையும், இஸ்லாமிய போர் நெறிமுறைகளையும் பேணி காத்த பல இஸ்லாமிய சுல்தான்கள், அரசர்கள் வரலாற்றில் உள்ளனர். இவர்களுடைய வரலாறுகள் படிக்காமல் தேவையில்லாத மக்களுடைய வரலாறுகள் படிப்பது நமது நேரத்தை வீனாக்குவதற்கு சமம். இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!

Thursday, April 13, 2017

நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள்படக்கூடாதுஇது நல்லதா ?கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்!!!

நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள்படக்கூடாதுஇது நல்லதா ?கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்!!!


பறவைகளில் கழுகுகள் மிக சக்திவாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக்கூடியவை.அவற்றை வலிமை மற்றும் தைரியம்ஆகியவற்றின் சின்னமாகக்கருதுகின்றோம்.

ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகசசக்திகளும், வலிமையும், தைரியமும்பிறப்பிலேயே வருபவை அல்ல. அவைகழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக்கொள்ளப்படுபவை தான். குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக,பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள்பலவீனமாகவே இருக்கின்றன.அவை அப்படியே சுகமாகவும்,பாதுகாப்பாகவுமே இருந்து விட்டால்வலிமையாகவும், சுதந்திரமாகவும்மாறுவது சாத்தியமல்ல. எனவேகுஞ்சுகளாக இருக்கும் போது வேண்டியஉணவளித்து, பாதுகாப்பாகவைத்திருக்கும் தாய்ப்பறவை குஞ்சுகள்பறக்க வேண்டிய காலம் வரும் போது மாறிவிடுகின்றது.

முதலில் கூடுகளில் மெத்தென இருக்கும்படுக்கையினைக் கலைத்து சிறுகுச்சிகளின் கூர்மையான பகுதிகள்வெளிப்படும்படி செய்து கூட்டைசொகுசாகத் தங்க வசதியற்றபடி செய்துவிடுகின்றது.பின் தன் சிறகுகளால் குஞ்சினை அடித்துஇருக்கும் இடத்தை விட்டுச் செல்லத்தூண்டுகின்றது.தாய்ப் பறவையின் இம்சை தாங்க முடியாதகழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்புவரைவந்து நிற்கின்றது.

அது வரை பறந்தறியாத குஞ்சு கூட்டின்வெளியே உள்ள உலகத்தின் ஆழத்தையும்உயரத்தையும் விஸ்தீரணத்தையும் பார்த்துமலைத்து நிற்கின்றது.அந்தப் பிரம்மாண்டமான உலகத்தில் தனித்துப்பயணிக்க தைரியமற்று பலவீனமாகநிற்கின்றது.அது ஒவ்வொரு குஞ்சும் தன்வாழ்க்கையில் சந்தித்தாக வேண்டிய ஒருமுக்கியமான தவிர்க்க முடியாத கட்டம்.அந்த நேரத்தில் அந்தக் குஞ்சையேதீர்மானிக்க விட்டால் அது கூட்டிலேயேபாதுகாப்பாகத் தங்கி விடமுடிவெடுக்கலாம்.ஆனால் கூடு என்பது என்றென்றைக்கும்பாதுகாப்பாகத் தங்கி விடக் கூடியஇடமல்ல. சுயமாகப் பறப்பதும்இயங்குவதுமே ஒரு கழுகுக்கு நிரந்தரப்பாதுகாப்பு என்பதைத் தாய்ப்பறவைஅறியும்.அந்தக் கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்பில்என்ன செய்வதென்று அறியாமல் வெளியேஎட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கும்அந்தக் கட்டத்தில் தாய்ப்பறவை அந்தக்குஞ்சின் உணர்வுகளை லட்சியம்செய்யாமல் குஞ்சை கூட்டிலிருந்துவெளியே தள்ளி விடுகிறது.

அந்த எதிர்பாராத தருணத்தில்கழுகுக்குஞ்சு கஷ்டப்பட்டு சிறகடித்துப்பறக்க முயற்சி செய்கின்றது.முதல் முறையிலேயே கற்று விடும்கலையல்ல அது.குஞ்சு காற்றில் சிறகடித்துப் பறக்கமுடியாமல் கீழே விழ ஆரம்பிக்கும்நேரத்தில் தாய்க்கழுகு வேகமாக வந்து தன்குஞ்சைப் பிடித்துக் கொள்கிறது. குஞ்சுமீண்டும் தாயின் பிடியில் பத்திரமாகஇருப்பதாக எண்ணி நிம்மதியடைகிறது.அந்த நிம்மதி சொற்ப நேரம் தான். தன்குஞ்சைப் பிடித்துக் கொண்டு வானுயரப்பறக்கும் தாய்க்கழுகு மீண்டும் அந்தக்கழுகுக்குஞ்சை அந்தரத்தில் விட்டுவிடுகிறது.மறுபடி காற்று வெளியில் சிறகடித்துப்பறக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அந்தக்குஞ்சு உள்ளாகிறது.இப்படியே குஞ்சை வெளியே தள்ளிவிடுவதும், காப்பாற்றுவதுமாகப் பலமுறை நடக்கும்இந்தப் பயிற்சியில் கழுகுக் குஞ்சின்சிறகுகள் பலம் பெறுகின்றன. காற்றுவெளியில் பறக்கும் கலையையும்விரைவில் கழுகுக்குஞ்சு கற்றுக்கொள்கிறது. அது சுதந்திரமாக,ஆனந்தமாக, தைரியமாக வானோக்கிப்பறக்க ஆரம்பிக்கிறது.கழுகுக் குஞ்சு முதல் முறையாககூட்டுக்கு வெளியே உள்ள உலகத்தின்பிரம்மாண்டத்தைக் கண்டு பயந்து தயங்கிநிற்கும்அந்தத் தருணத்தில் தாய்க்கழுகு அதனைமுன்னோக்கித் தள்ளியிரா விட்டால் அந்தசுதந்திரத்தையும், ஆனந்தத்தையும்,தைரியத்தையும் அந்தக் கழுகுக்குஞ்சுதன் வாழ்நாளில் என்றென்றைக்கும்கண்டிருக்க முடியாது.பறக்க அறியாத அந்தக் குஞ்சை கூட்டினைவிட்டு வெளியே தாய்ப்பறவை தள்ளியபோது அது ஒருவிதக் கொடூரச்செயலாகத் தோன்றினாலும்பொறுத்திருந்து விளைவைப் பார்க்கும்யாருமே அந்தச் செயல் அந்தக் குஞ்சிற்குப்பேருதவி என்பதை மறுக்க முடியாதுஒவ்வொரு புதிய சூழ்நிலையும்யாருக்கும் ஒருவித பதட்டத்தையும்,பயத்தையும் ஏற்படுத்தக் கூடும். ஆனால்அந்தக் காரணத்திற்காகவே அந்தசூழ்நிலைகளையும், அனுபவத்தையும்மறுப்பது வாழ்வின் பொருளையேமறுப்பது போலத் தான்.கப்பல் துறைமுகத்தில் இருப்பது தான்அதற்கு முழுப்பாதுகாப்பாக இருக்கலாம்.ஆனால் கப்பலை உருவாக்குவது அதைதுறைமுகத்தில் நிறுத்தி வைக்க அல்ல.கப்பலின் உபயோகமும் அப்படி நிறுத்திவைப்பதில் இல்லை.கழுகிற்கும், கப்பலுக்கும் மட்டுமல்ல,மனிதனுக்கும் இந்த உண்மை பொருந்தும்.தாய்க்கழுகு தான் குஞ்சாக இருக்கையில்முதல் முதலில் தள்ளப்பட்டதைஎண்ணிப்பார்த்து "நான் பட்ட அந்தக் கஷ்டம் என்குஞ்சு படக்கூடாது. என் குஞ்சிற்கு அந்தப்பயங்கர அனுபவம் வராமல் பார்த்துக்கொள்வேன்" என்று நினைக்குமானால்அதன் குஞ்சு பலவீனமான குஞ்சாகவேகூட்டிலேயே இருந்து இறக்க நேரிடும்.ஆனால் அந்த முட்டாள்தனத்தை தாய்க்கழுகுசெய்ததாக சரித்திரம் இல்லைஅந்த தாய்க்கழுகின் அறிவுமுதிர்ச்சி பலபெற்றோர்களிடம் இருப்பதில்லை. "நான் பட்டகஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது"என்று சொல்லக்கூடிய பெற்றோர்களைஇன்று நாம் நிறையவே பார்க்கிறோம்.ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பமும் அதில்கும்பலாகக் குழந்தைகளும் இருந்த போதுபெற்றோர்களுக்குத் தங்கள் ஒவ்வொருகுழந்தை மீதும் தனிக்கவனம் வைக்க நேரம்இருந்ததில்லை. அதற்கான அவசியம்இருப்பதாகவும் அவர்கள் நினைத்ததில்லை.ஆனால் இந்தக் காலத்தில் ஓரிருகுழந்தைகள் மட்டுமே உள்ள நிலையில்பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மிகநல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்கவேண்டும் என்பதில் குறியாகஇருக்கிறார்கள். அதில் தவறில்லை. ஆனால்தான் பட்ட கஷ்டங்கள் எதையும் தங்கள்குழந்தைகள் படக்கூடாது என்றுநினைக்கும் போது பாசமிகுதியால்அவர்கள் அந்தக் கஷ்டங்கள் தந்த பாடங்களின்பயனைத் தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கத்தவறி விடுகிறார்கள்.அதற்காக "நான் அந்தக் காலம் பள்ளிக்கூடம்செல்ல பல மைல்கள் நடந்தேன். அதனால் நீயும்நட" என்று பெற்றோர்கள் சொல்ல வேண்டும்என்று சொல்லவில்லை. வசதிகளும்,வாய்ப்புகளும் பெருகி உள்ள இந்தக்காலத்தில் அப்படிச் சொல்வது அபத்தமாகத்தான் இருக்கும்.இன்றைய நவீன வசதி வாய்ப்புகளின்பலனை பிள்ளைகளுக்கு அளிப்பதுஅவசியமே. தேவையே இல்லாத கஷ்டங்களைபிள்ளைகள் படத் தேவையில்லைதான்.ஆனால் 'எந்தக் கஷ்டமும், எந்தக் கசப்பானஅனுபவமும் என் பிள்ளை படக்கூடாது'என்று நினைப்பது அந்தப் பிள்ளையின்உண்மையான வளர்ச்சியைக் குலைக்கும்செயலே ஆகும்.வாழ்க்கையில் சில கஷ்டங்களும், சிலகசப்பான அனுபவங்களும் மனிதனுக்குஅவசியமானவையே.அவற்றில் வாழ்ந்து தேர்ச்சி அடையும்போது தான் அவன் வலிமை அடைகிறான்.அவற்றிலிருந்து பாதுகாப்பளிப்பதாகப்பெற்றோர் நினைப்பது அவனுக்குவாழ்க்கையையே மறுப்பது போலத் தான்.சில கஷ்டங்கள் பிள்ளைகள்படும் போதுபெற்றோர்களுக்கு மனம் வருத்தமாகஇருக்கலாம்.ஆனால் கஷ்டங்களே இல்லாமல் இருப்பதுவாழ்க்கை அல்ல,வாழ்க்கையின் அர்த்தமும் அல்ல.

by
வாட்ஸாப் இருந்து வந்தவை 

Friday, March 24, 2017

உலகின் நான்காவது மிகப்பெரிய ஏரி இன்று காணாமல் போன அதிசயம் அல்ல, நமது தவறால் ஏற்பட்ட இழிநிலை


காணாமல் போன கடல்,

'மூன்றாம் உலகப்போர்' என்று ஒன்று உருவானால், அதற்குக் காரணம் தண்ணீராகத்தான் இருக்க முடியும் என்று அனைத்து நாடுகளும் அச்சுறுத்தி வருகின்றன. தண்ணீரை நாம் பாதுகாக்கத் தவறியதன் விளைவுதான் இன்று நாம் பார்க்கும் தண்ணீரற்ற ஆறுகள், ஏரிகள், குளங்கள். ஒரு காலத்தில் தண்ணீர் இல்லாமல் தமிழகத்தின் எந்த ஓர் ஆற்றையும், ஏரியையும் பார்க்க முடியாது. ஆனால் இன்று நிலைமை அப்படியல்ல. தலைகீழாக மாறிவிட்டது. தண்ணீர் இல்லாததன் பயனால், தினம்தினம் பல ஏக்கர் விவசாய நிலங்களையும், பல விவசாயிகளையும் இழந்துகொண்டிருக்கிறோம். இலவசமாக நமக்குக் கிடைக்கவேண்டிய குடிநீரை, பாலின் விலைக்கு வாங்கிக்கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் தண்ணீர்ப் பஞ்சம் வரப்போகிறது என்றால் நிச்சயம் நாம் நம்பித்தான் ஆகவேண்டும். இந்த நிலை இன்னும் சில காலங்கள் தொடர்ந்தால் தமிழ்நாடே பாலைவனமாக மாறிவிடும் என்பதில் ஆச்சர்யம் இல்லை. இது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, மொத்த உலகத்துக்கும்தான். அது எப்படி உலகம் பாலைவனமாகும் என்று நீங்கள் நினைத்தால்... வெறும் 55 ஆண்டுகளில் ஒரு கடலே காணாமல் போய், அந்த இடம் முழுவதும் இன்று பாலைவனமாக மாறி இருக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? 'உலக தண்ணீர் தினமான' இன்று 'காணாமல்போன ஒரு கடலை'ப் பற்றித் தெரிந்துகொள்வோம்1960-ம் ஆண்டு சுமார் 68,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிந்திருந்தது ஏரல் ஏரி. இதன் பரப்பளவு கடல்போல் பறந்துவிரிந்து இருந்ததால், இந்த ஏரிக்கு 'ஏரல் கடல்' என்ற பெயரும் உண்டு. இந்த ஏரல் கடலானது மத்திய ஆசியாவைச் சேர்ந்த கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் அமைந்திருந்தது. ஷியர் தர்யா மற்றும் அமு தர்யா என்ற இரண்டு ஆறுகள் இந்த ஏரிக்குத் தண்ணீரை வாரிவழங்கியது. இந்தக் கடலைச் சுற்றி இருந்த சதுப்பு நிலங்கள், நீர்நிலைகள் என அனைத்தையும் சேர்த்து சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான ஹெக்டேர் பரப்பளவு.

மத்திய ஆசியாவில் அதிகமான இடங்கள் வறண்ட நிலங்களாகவே இருந்தன. அதனால், ஏரல் ஏரிக்குத் தண்ணீர் தரும் இரண்டு ஆறுகளையும் தடுத்து பருத்தி பயிர் செய்யப் பயன்படுத்தலாம் என்று சோவியத் யூனியன் சொல்ல... இந்த ஏரியை நம்பியிருந்த நாடுகள் சம்மதம் தெரிவித்தன. விளைவு அந்த ஏரிக்குத் தண்ணீர் தரும் இரண்டு ஆறுகளும் தடுக்கப்பட்டு சிறுசிறு கால்வாய்களாக மாற்றப்பட்டன. மேலும், ஏரியின் நீரும் விவசாயத்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டது. 

1980-ம் ஆண்டில் சுமார் 70 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்புகளில் பருத்தியை உற்பத்தி செய்துவந்தனர். அதனால், அந்தப் பகுதிகளில் மக்கள்தொகை எண்ணிக்கை சரசரவென உயர ஆரம்பித்தது. பருத்திச் செடி, தண்ணீரை அளவுக்கு அதிகமாகக் குடித்துவிடும். இருந்தாலும், அனைவரும் செய்த மிகப்பெரிய தவறு ஒன்று இருக்கிறது. பருத்தி உற்பத்தியை மேம்படுத்த ரசாயன உரங்களை அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கினர். விளைவு, நிலங்கள் அனைத்தும் விஷமேறின. அதனால், தண்ணீரின் அளவும் அதிகமாகத் தேவைப்பட 'ஏரல் ஏரியின்' நீரை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்தனர். இதோடு விட்டிருந்தால்கூட 'ஏரல் கடல்' தப்பித்திருக்கும். ஒருபுறம், ரசாயன உரங்களால் நிலத்தை அழித்துக்கொண்டிருந்தனர். மற்றொருபுறம், தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்பட்ட வேதியியல் கழிவுகள், குப்பைகள் என அனைத்தையும் கடலில் கொட்டத் தொடங்கிவிட்டனர். இதனால் விவசாய நிலங்களும், 'ஏரல் கடலும்' தனது கனிம வளங்களை முழுமையாக இழக்கத் தொடங்கின. ஏரித் தண்ணீர், ரசாயனக் கழிவுகளால் விஷமேறி இருந்ததால்... மீன்களும் இறக்கத்தொடங்கின. அதனால் ஏரியில் மீன்பிடித் தொழிலும் நின்றுபோனது. 1995-ம் ஆண்டுக்குப் பிறகு ஏரல் கடலும், அதனை நம்பியிருந்த விவசாய நிலங்களும் பாலைவனங்களாக மாறத்தொடங்கின. ஏரியில் இருக்கும் விஷம்... காற்றில் கலந்து, நூற்றுக்கும் மேற்பட்ட கிலோ மீட்டர் தூரம்வரை தாக்கியதால், அந்தப் பகுதி மக்களும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டனர். இன்று அந்தப் பூமியே ஒரு பாலைவனமாக மாறிவிட்டது. 

ஏரியில் தண்ணீர் நிரம்பி இருந்த காலத்தில் போக்குவரத்துக்காகவும், மீன்பிடித் தொழிலுக்காகவும் பயன்படுத்தப்பட்ட கப்பல்களும், படகுகளும் தண்ணீர் இல்லாத அந்த ஏரியின் மணலில் புதைந்து இருப்பதை இன்றும் நாம் காண முடியும்.


தண்ணீரைப் பாதுகாக்கத் தெரியாமல் சிறு கால இடைவெளிக்குள் ஒரு கடலையே இந்த உலகம் இழந்திருக்கிறது. வெறும் கடலில் கொட்டப்பட்ட கழிவுகளால் மட்டும் இந்தப் பேரழிவு ஏற்படவில்லை. விவசாயம் செய்வதற்கு ரசாயன உரங்களை அதிக அளவில் பயன்படுத்தியதும் இந்தக் கடல் அழிந்துபோனதுக்கு மிகப்பெரிய காரணம். இன்று நாமும் அப்படி ஒரு தவற்றைத்தான் செய்துவருகிறோம். விவசாயம் நன்றாக நடக்க வேண்டும் என்பதற்காக நிலங்களில் ரசாயன உரங்களைப் பயன்படுத்தி, நிலங்களை மட்டும் அல்லாமல் நிலத்தடி நீர், ஆறு மற்றும் ஏரி நீர் அனைத்தையும் அழித்துவருகிறோம். மழை வராமல் இருப்பதற்கும், நீர் வற்றிப்போனதற்கும் இயற்கை மட்டும்தான் காரணமென நீங்கள் இப்போதும் நினைக்கிறீர்களா? 

இந்த 'உலக தண்ணீர் தினத்தில்' அருகில் இருக்கும், ஆறுகள் மற்றும் ஏரிகளில் இருக்கும் கனிமவளங்கள், கொள்ளைபோகாமல் பாதுகாக்கவும், ரசாயன உரங்களைப் பயன்படுத்தி நிலங்களை அழிக்காமல் இருப்பதற்கும் சபதம் எடுப்போம். இல்லையேல், ஒருநாள் காணாமல்போன கடல் லிஸ்ட்டில் நம்மைச் சுற்றி இருக்கும் கடல்களும் சேர்ந்துவிடும். 
- ஜெ.அன்பரசன்

Wednesday, February 8, 2017

சித்த வைத்தியம்

சித்த வைத்தியம்நோய் என்பது ஒரு நாட்டின் தட்ப வெப்ப நிலை மற்றும் ,அந்நாட்டின் கலாசாரம் பண்பாடு இவைகளை ஒட்டியே அந்நாட்டில் வாழும் மனிதர்களுக்கு தொடக்கமாக உள்ளது நமது இந்திய பண்பாட்டுக்கு உகந்த முறையில் மக்களின் உடலில் கோளாறுகள் உருவாகிறது,அதை சரி செய்ய பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய மருத்துவ அறிஞர்கள் சித்தர்கள் மருத்துவ முறைகளை கையாண்டு அனுபூதியான அவர்கள் தனக்கு பின்னால் தாஙகள் கையாண்ட முறைகளை எதிர்கால சந்ததிக்கு கொடுத்தும் ஏடுகளின் மூலமும்,நூல்களின் மூலமும்,குரு பாரம்பரியம்,குடும்ப பாரம்பரியம், மருத்துவ முறைகளை விட்டு சென்றார்கள்.கால வேகம் அரசியல் மாற்றம்,இனபாகுபாடு,இவைகளின் தாக்குதலால், மேற்கண்ட முறை பல வகையாக சிதறின. சுமார் நாநூறு ஆண்டுகளுக்கு முன்னால் அந்நிய தேசத்தவர்கள் கையில் நமது தேசம் உட்பட்டது,அவர்களுடைய மருத்துவ முறைகளும் உள்ளே புகுத்தப்பட்டது அந்நிய தேசத்தவர்களின் மருத்துவ முறைகள் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது. நமது தேசத்தவர்களின் மருத்துவ முறைகள் மெய்ஞானிகளால் உருவாக்கப்பட்டது.விஞ்ஞானம் என்பது விநாடிக்கு,விநாடி மற்றம் அடையக்கூடியது,மெய்ஞானம் ஆதியை உணர்ந்து என்றும் மாறாத நிலைத்த தன்மை உடையது. அவர்களின் நவீன மருத்துவ முறைகளில் நமது பாரம்பரிய மருத்துவ முறைகள் புறக்கணிக்கப்பட்டன. சித்தர்களின் காலத்திற்க்குப்பின் சித்த வைத்தியத்தை தொடர்ந்து கையாண்டவர்களில் சிலர் சுய நல மிக்கவர்களால் தன்வசம் உள்ள மருத்துவ முறைகளை மறைக்க துவங்கினார்கள் இப்படி பல்வேறு அற்புத செய்முறைகள் மறைந்தே போயின.

அனைத்து மாற்று மருத்துவ முறைகளும் சித்த மருத்துவத்தின் அடிப்படியிலிருந்து தான் உருவானது. இன்றைய காலகட்டத்தில் ஆயுர்வேதம் என்று கூறப்படும் மருத்துவமானது ஆயுள் வேதம் என்ற சொல்லின் மருவிய வார்த்தை. இந்த ஆயுள் வேதமானது இராவணன் அவர்களால் இந்த உலகிற்கு மனித குலத்தின் ஆயுளை கூட்டி வாழ்வதருக்கு கொடுக்கப்பட்ட ஒரு கொடை.

இனி மருத்துவத்தை பற்றி பார்ப்போம்.


மருத்துவரின் குணநலன்கள்

சித்த மருத்துவம் செய்பவர்கள் பொறுமை,கருணை,கண்ணியம்,காருண்யம்,தியாகம், சகிப்புத்தன்மை, உழைப்பு,ஊக்கம்,சிறந்த விவேகம்,யூகம், அதீத நுண்ணறிவு இவைகளை கொண்டிருக்கவேண்டும்.
இந்திய  பரம்பரியபடி மருத்துவரின் வயது 40-60 உட்பட்டு இருக்க வேண்டும்


ஒரு மருத்துவரிடம் கூடாதவை

வெற்றிலை போடுவது,பீடி சிகரெட் பிடிப்பது போதை வஸ்துக்கள் பயன்படுத்துவது,புறம் கூறுவது,திருட்டு எண்ணம்,பேராசை,பெறாமை,கொலை பாதகத்திற்க்கு ஈடான செயல்களை செய்வது. ஒரு பொருளை அடைய என்ன வேண்டுமானாலும் செய்யும் குணம்,குற்ற உணர்வு அற்ற குணம்,இவை எல்லாம் ஒரு மருத்துவருக்கு கூடாதவைகள்.மொத்தத்தில் ஒரு யோகி போல வாழ வேண்டும். ஒரு மருந்தை தொடுவதற்கு முன் கைகளை சுத்தம் செய்து கொண்டு பின்புதான் மருந்தைத் தொடவேண்டும்.ஒரு மருந்தைத்தொட்ட கையால் இன்னொரு மருந்தைத்தொடக்கூடாது! நம்மிடம் வரும் நோயாளிகளுக்கு பத்தியத்தை சத்தியத்தை போல் காக்க சொல்லித் தரவேண்டும்.


வைத்திய முறைகள்
சித்த வைத்திய முறைகளில் கையாளும் மருந்துகள்.


1.பச்சிலை.
2.சம்பை சரக்குகள்.
3.உப்பு சரக்குகள்
4.உபரச சரக்குகள்
5.நவ லோகங்கள்
6.64 பாசானங்கள்
7. வர்ம முறைகள்

8. பல்வேறு உலோகங்கள்

போன்ற முறைகள் மூலம் நோயாளிகளுக்கு உண்டான மருந்தைத் தயாரிக்க வேண்டும்.அவை...
1.பஸ்பம்
2.செந்தூரம்
3.சுண்ணம்
4.ஜெயநீர்
5.களங்குகள்
6.கட்டுக்கள்
7.திராவகங்கள்

இவைகளை மருந்தாகப் பயன் படுத்தவேண்டும்.

நோய் வகைகள்

பரம்பரை நோய்கள் 

கர்ம நோய்கள் 

அசாத்திய நோய்கள் 

சீதோஷ்ண நோய்கள்

எந்த வகையான நோய்களுக்கு என்ன வகையான மருந்துகள் கொடுக்க வேண்டும் என்பதை நாடியை அறிந்து பிறகே தீர்மானிக்கவேண்டும். நாடி அறிதல்:-ஆண்களுக்கு வலது கரமும், பெண்களுக்கு இடது கரமும் கையில் மணிக்கட்டுக்கு கீழ் ஓரங்குலம் தள்ளி கட்டை விரலை நோக்கி செல்லும் விரலில் நமது ஆள்காட்டி விரல் நடு விரல் மோதிர விரல் இம்மூன்று விரல்களால் நிதானமாக பார்க்க வாதம் முதல் விரலில்,பித்தம் இரண்டாவது விரலிலும்,கபம் மூன்றாவது விரலிலும் துடிப்பதை அறிய முடியும்.வியாதி அற்றவர்களுக்கு வாதம்-1, பித்தம் 1/2,சிலோத்துமம் 1/4, துடிப்பு தென்படும்.

சித்தர்களால் 4448 நோய்களை பற்றியும் அதனின் உட்பிரிவினை பற்றியும், அதற்கான மருத்துவ முறைகளை பற்றியும் பலகோடி ஆண்டுகளுக்கு முன்பே மனித குலத்திற்கு அளிக்கப்பட்டது. ஜீவ அணுக்களை சித்த வைத்திய முறையில் மட்டுமே உருவாக்க முடியும்

Friday, December 2, 2016

மர்மங்கள் நிறைந்த அமேசான் நதி

தென்அமெரிக்கா கண்டத்தில் பிரேசில் நாட்டில் ஆன்டிஸ் மலைத் தொடரில்
உற்பத்தியாகி அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கும் அமேசான், உலகிலேயே பெரிய நதிகளில் ஒன்று. இது பல அதிசய உண்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

உலகில் கடலில் கலக்கப்படும் மொத்த நீரின் அளவில் அமேசானின் பங்கு 20 சதவீதம். 6,437 கி.மீ., நீளமுள்ள இந்த நதியில் பாயும் நீரின் அளவானது, உலகின் மற்ற 7 பெரிய
நதிகளின் மொத்த நீரின் அளவை விட அதிகம். வட அமெரிக்காவில் பாயும் பிரமாண்டமான மிசிசிப்பியைப் போல பத்து மடங்கு பெரியது. தென்அமெரிக்க கண்டத்தின் 40 சதவீத நிலப்பரப்பு (70 லட்சம் சதுர கி.மீ.,) அமேசானின் வடிநிலமாக இருக்கிறது.

அமேசான் நதியின் ஆதாரம்

அமேசான் நதியின் அதிகப்படியான நீருக்கு, தென் அமெரிக்க கண்டத்தின் மேற்கு பகுதியில் உயர்ந்து நிற்கும் ஆன்டிஸ் மலைத்தொடரின் பனி மூடிய சிகரங்களும், நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்யும் கனமழையும் தான் காரணம். அமேசான் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆண்டுக்கு சராசரியாக ஐந்து ஆயிரம் மி.மீ., மழை பெய்கிறது. அமேசான் நதிக்கு பெரும்பாலான நீர் மழையின் மூலமாகவே கிடைக்கிறது. இந்த கனமழை ஆண்டின் பெரும்பாலான நாட்களில் 40 லட்சம்சதுர கி.மீ., பரப்பளவுக்கு கொட்டித்தீர்க்கிறது. இதனால் வெள்ளம் பெருக்கெடுத்து, அமேசான் உலகத்திலேயே மிகப் பெரியநதியாக இருப்பதற்கு காரணமாகிறது.மழை அதிகம் பெய்யும் காலங்களில் அமேசான் ஆற்றில் விநாடிக்கு 80 லட்சம் கன அடி வரை நீர் பாய்கிறது. அந்த சமயத்தில் ஆற்றின் அகலம் 50 கி.மீ., வரை இருக்கும். நீரின் ஆழம் 300 அடி வரை இருக்கிறது. அமேசான் கடலில் கலக்கும் இடத்தில் சுமார் 300 கி.மீ., சுற்றளவுக்கு கடல் நீரை உள்தள்ளி நன்னீராக இருக்கிறது.

துணை நதிகள்: அமேசானுக்கு 1,100க்கும் மேற்பட்ட துணை நதிகள் உள்ளன. ரியோநெக்ரோ, கைனியா, மரோனா, ஜாபுரா, காகுடா, உகேயாலி, புருஸ், டாபஜோஸ், சிங்கு போன்றவை முக்கியமான துணை நதிகள். நீர் பாயும் கன அளவைப் பொறுத்த வரை ரியோநெக்ரோ, அமேசானுக்கு அடுத்தபடியாக 2வது பெரிய நதியாக இருக்கிறது.

மூன்றில் ஒரு பங்கு உயிரினங்கள்

* அமேசான் நதியை சுற்றி இருப்பதால் அமேசான் காடுகள் என பெயர் வந்தது. இதுவே உலகின் பெரிய மழைக்காடு. இதன் மொத்த பரப்பளவு
55 லட்சம் சதுர கி.மீ., 
* இதன் 60 சதவீத பகுதி பிரேசிலில் உள்ளது.பெரு 13 மற்றும் கொலம்பியா 10 சதவீதத்தை
கொண்டுள்ளது. தவிர வெனிசுலா, பிரஞ்சு கயானா, பொலிவியா உள்ளிட்ட நாடுகளில் சிறிய அளவில் உள்ளன. 
* உலகில் வாழும் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்த காடுகளில் உள்ளன. இதனால் உலகின் பெரிய ஆய்வு பிரதேசமாகவும் விளங்குகிறது. 
* பலவகையான மருத்துவ செடிகள், மூலிகைகளையும் கொண்டுள்ளது. 
* 25 லட்சம் வகையான பூச்சியினங்கள், 10 ஆயிரம் தாவர வகைகள், 2 ஆயிரம் பறவைகள் மற்றும்பாலூட்டிகளுக்கு இருப்பிடமாக திகழ்கிறது. 
* அமேசான் காடுகளிலும், நதியிலும் மனிதர்களால் கண்டுபிடிக்கப்படாத மர்மங்கள் நிறையவே
உள்ளன. இந்த 

Tuesday, August 2, 2016

ஸாலிஹ் நபியும் - ஸமூது கூட்டமும்

Tuesday, July 12, 2016

மெயின் அருவி பொங்குமாங்கடல்


மெயின் அருவி பொங்குமாங்கடல் 


குற்றாலத்தின் பிரதான அருவியான மெயின் அருவிதான், அதிக சுற்றுலா பயணிகளால் குளிக்குமிடம். தண்ணீர் நிரம்பி விழும் காலங்களில் மெயின் அருவி 5 கி.மீ. தொலைவில் இருக்கும் தென்காசியிலிருந்தே காணமுடியும். தொடர்ந்து பல மாதங்களுக்கு மழை இல்லாவிட்டாலும் மெயின் அருவியில் தண்ணீர் கொஞ்சமாவது விழுந்துக்கொண்டே இருக்கும். மற்ற அருவிகளில் அப்படியில்லை. தொடர்ச்சியாக ஒரு மாதம் மழை இல்லாவிட்டால், மெயின் அருவி தவிர மற்ற அனைத்து அருவிகளும் காய்ந்து வறண்டு காட்சியளிக்கும்.

மெயின் அருவியின் அழகே அந்த பொங்குமாங்கடல் தான். பொங்குமாங்கடல் இல்லையென்றால் மெயின் அருவி ஒரு காட்சிப்பொருளாகத்தான் இருந்திருக்கும். மலைப்பகுதியில் சிறிய மழை பெய்தாலே மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து, பேரிரைச்சலுடன் கொட்டும். அதிகமாக பெய்தால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் பாதுகாப்பு வளைவை தாண்டி விழும். இதனால் தான் குளிக்க தடை விதிக்கப்படும்.மெயின் அருவி, 288 அடி உயரம் கொண்டது. இந்த உயரத்திலிருந்து தண்ணீர் நேரடியாக கீழே விழுந்தால் யாரும் குளிக்க முடியாது. (சும்மாவே சீசன் காலத்தின் போது, இந்த மெயின் அருவியில் வாரத்திற்கு ஒரு நபராவது இறந்து போவதை நாம் செய்திகளில் பார்த்திருக்கிறோம்.)19 மீட்டர் ஆழம் கொண்ட பொங்குமாங்கடல் கிட்டத்தட்ட அகலமான கிணறு மாதிரி தான் இருக்கும். மலைப்பகுதியில் இருந்து பாய்ந்து வரும் தண்ணீர், முதலில் பொங்குமாங்கடல் பள்ளத்தில் விழுந்து, அது நிரம்பி வழிந்த பின், நாம் குளிக்க ஏற்ற வகையில், மிதமான வேகத்தில் கீழே விழுகிறது. மேலும், மலைப்பகுதியிலிருந்து அடித்து கொண்டுவரப்படும் மரக்கிளைகள் ஆகியவற்றை இந்த பொங்குமாங்கடல் தான் தடுத்து நிறுத்துகிறது.
மெயின் அருவியில் குளிப்பவர்களுக்கு பல வகையில் இந்த பொங்குமாங்கடல் பாதுகாப்பு அளிக்கிறது. தண்ணீர் அழுத்தத்தில் இந்த பொங்குமாங்கடலின் ஆழம் அதிகரித்துக்கொண்டே போவதாகக் கூட கூறப்படுகிறது.


மீண்டும் ஒரு பயணத்தில் சந்திப்போம் 

Friday, June 24, 2016

அமேசான் காட்டில் காணப்படும் மர்ம நதி


அமேசான் காட்டில் காணப்படும் மர்ம நதி


பெரு நாட்டுப் பகுதி அமேசன் மழைக்காடுகளில் மர்மமான நதி ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.              6.4 கி.மீ நீளத்திற்கு இந்த நதியின் நீர் வெப்ப நீராக மாறி இருக்கிறது. 50 பாகை முதல் 90 பாகை செல்சியஸ் வரை வெப்பம் நிலவுகிறது. சில இடங்களில் அதிகபட்சமாக 100 பாகை செல்சியஸ் வெப்பம் காணப்படுகிறது.

இந்த நதிக்குள் தவறி விழும் விலங்குள் சில நிமிடங்களில் உயிரிழந்து, மிதக்கின்றன வெப்ப நதிக்குப் பல காரணங்களைக் கதைகளாகச் சொல்கிறார்கள். 1930 ஆம் ஆண்டு முதலே வெப்ப நீர் நதி பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் இந்த நீர் ஏன் வெப்பமாக மாறுகிறது. என்பதற்குச் சரியான அறிவியல் விளக்கம் இன்று வரை கிடைக்கவில்லை.

அமேசனிலிருந்து 400 மைல்கள் தூரத்தில் ஓர் எரிமலை இருக்கிறது.அதனால் எரிமலையில் இருந்தும் இந்த நீர் வருவதற்கன வாய்ப்பில்லை என்கிறார்கள்.ரூஸோ என்ற இளம் விஞ்ஞானி இந்த பகுதிக்கு வந்து,ஆராய்ச்சி செய்த பிறகு தன்னுடைய அனுபங்களைப் புத்தகமாக எழுதியிருக்கிறார்.
Andrés-Ruzo-boiling-river-1200x675

“தண்ணீருக்குள் கை வைத்தபோது,மிகவும் சூடாக இருந்தது.சட்டென்று கையை எடுத்துவிட்டேன்.தவறி விழுந்தால் உயிர் பிழைக்க முடியாது.ஆற்றில் இருந்து ஆவி வந்துகொண்டே இருக்கிறது.இந்த தண்ணீருக்கு மருத்துவக்குணங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.இந்தப் பகுதிக்கு வருவது எளிதல்ல.அதிக வெப்பமாக இருக்கிறது.விஷப் பூச்சிகள் கடிக்கும்.இங்கே வருவதே ஆபத்தான விஷயம்” என்கிறார் ரூஸோ.

Thursday, May 12, 2016

நெல்லை மட்டன் தக்கடி சமைத்து அசத்தலாம்

நெல்லை மட்டன் தக்கடி

தேவையான பொருட்கள் ;

வறுத்த அரிசிமாவு (புட்டு மாவு) - 400 கிராம்

மட்டன் - அரை கிலோ

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்

கரம் மசாலா (ஏலம்,பட்டை,கிராம்புத்தூள்)-அரைஸ்பூன்

கறி மசாலாத்தூள் - 2 டேபிள்ஸ்பூன்

சின்ன வெங்காயம் - கால் கிலோ

தேங்காய்த்துருவல் - பாதி தேங்காய்

பச்சை மிளகாய் -3

மல்லி கருவேப்பிலை புதினா - சிறிது

எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்

உப்பு- தேவைக்கு


மாவுடன் பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் , மல்லி,கருவேப்பிலை,பச்சை மிளகாய் சேர்த்து கலந்து வைக்கவும்.


குக்கரில் எண்ணெய் விட்டு சிறிது வெங்காயம் வதக்கி,இஞ்சி பூண்டு,கரம்மசாலா,சிறிது மல்லி,புதினா,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.பின்பு சுத்தம் செய்து கழுவிய மட்டனை சேர்த்து ,கறிமசாலா ,உப்பு சேர்த்து கறி மூழ்கும் அளவு தண்ணீர் வைத்து மூடி 3 விசில் வைத்து அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கவும்.இப்ப தக்கடிக்குண்டான மட்டன் கிரேவி ரெடி.

ரெடி செய்து வைத்த மாவில் அந்த கிரேவியை மட்டும் மாவு கொள்ளும் அளவு விட்டு கலந்து விடவும்.

இப்ப தக்கடிக்கான மாவு ரெடி.

மட்டனை தனியாக எடுத்து விட்டு மாவிற்கு மூன்று மடங்கு தண்ணீர் வைத்து கொதிக்க வைக்கவும்.உப்பு சரி பார்க்கவும்.


ரெடி செய்த தக்கடி மாவை கொழுக்கட்டைகளாக பிடிக்கவும்.இருபது கொழுக்கட்டை மீடியம் சைசில் வரும்.

2 கொழுகட்டைக்கான மாவை மீதி வைக்கவும்.


தண்ணீர் நன்கு கொதி வரவும் நெருப்பை கூட்டி வைத்து கொழுக்கட்டையை ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.கொழுக்கட்டை வெந்து வரும் வரை அகப்பை போடக்கூடாது.கொழுக்கட்டி வெந்து மேலே வந்தவுடன்,தனியாக எடுத்து வைத்த 2 கொழுக்கட்டை அளவு மாவை தூவி விடவும். மூடி போட்டு சிம்மில் 10 நிமிடம் வைக்கவும், அந்த மாவு கூட்டு போல் ஆகிவிடும்.
பாத்திரத்தின் மூடியை திறந்து வேகவைத்து எடுத்து வைத்த மட்டனை போடவும்.கொழுகட்டை உடையாமல் மிக்ஸ் செய்யவும். மட்டனை எடுக்காமல் கொத்திக்க வைத்தால் மட்டன் பாத்திரத்தில் அடியில் இருக்கும் எடுப்பது சிரமம்.இப்படி மேலே போடும் பொழுது கலந்து எடுக்க வசதியாக இருக்கும்.

சுவையான நெல்லை மட்டன் தக்கடி ரெடி.

சூடாக ப்லேட்டில் கொழுகட்டை மட்டன் கிரேவியுடன் பரிமாறவும்.

THANKS TO
--ஆசியா உமர்.


குறிப்பு : தலைக்கறியில் தக்கடி போட்டால் சூப்பராக இருக்கும். நாங்க இதற்கு எங்க ஊர் கறி மசாலாவை உபயோகிப்போம்.மசாலா குறிப்பில் உள்ளது.

SOURCE
http://asiyaomar.blogspot.in/2010/06/blog-post_24.html

Wednesday, April 27, 2016

சர்ச்சைக்குரிய வரலாறு : புரியாத 'ஓபார்ட்' புதிர்கள்..!!


சர்ச்சைக்குரிய வரலாறு : புரியாத 'ஓபார்ட்' புதிர்கள்..!!

அறிவியலுக்கு அப்பாற்ப்பட்ட, நமது தற்போதைய அறிவுக்கு சவால் விடும் சர்ச்சைக்குரிய நிகழ்வுகள் மற்றும் கோட்பாடுகள் பல உண்டு. அனுதினமும் புதிய கற்பனைகளையும், கருத்துப்படிவங்களையும் 'கிளப்பி விடும்' விடயங்கள், சில நேரம் சர்ச்சைக்குரிய வரலாறாகி விடுகிறது என்பது தான் நிதர்சனம்..! 

அப்படியான மிகவும் சர்ச்சைக்குரிய மற்றும் குழப்பமான 16 'ஓபார்ட்' (Oopart) பற்றிய தொகுப்பே இது..!


சுருக்கம் : ஓபார்ட் என்பது அவுட்-ஆப்-ப்ளேஸ்-ஆர்ட்டிகிராப்ட் (Oopart : out-of-place artifact) என்பதின் சுருக்கமாகும்.

பொருத்தமற்ற வரலாறு : உலகம் முழுவதும் கண்டுப்பிடிக்கப்பட்ட, மிகவும் பொருத்தமற்ற, சாத்தியமில்லாத கால கட்டங்களில் உருவாக்கம் பெறப்பட்ட அதிநவீன வரலாற்றுக்கு முந்தைய பொருட்களை தான் ஓபார்ட் என்று குறிப்பிடுகிறார்கள்.

200,000 ஆண்டுகளுக்கு முன்பு : வரலாற்றின் வழக்கமான கருத்தின்படி, சுமார் 200,000 ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து தான் (தற்போதைய உருவ அமைப்பில் இருக்கும்) மனிதர்கள் பூமி கிரகத்தில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

விளக்கம் : ஆனால், அதற்கு முன்பே சில நவீனத்துவமான பொருட்கள் உருவாக்கம் பெற்றது எப்படி..? என்ற கேள்விக்கு பல விஞ்ஞானிகள் இயற்கை நிகழ்வுகளை பயன்படுத்தி விளக்கம் பெற முயற்சித்துக்கொண்டே தான் இருக்கின்றனர், ஆனால் பெரிய அளவிலான பலனில்லை.

உயர் தொழில்நுட்ப நாகரிகங்கள் : அப்படியாக, வரலாற்றுக்கு முந்தைய உயர் தொழில்நுட்ப நாகரிகங்கள் இருந்துள்ளன என்பதை பரிந்துரைக்கும் 16 நம்ப முடியாத ஓபார்ட்களை தான் பின் வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

ஓபார்ட் #16 : 


பண்டைய எகிப்தியன் லைட் பல்ப் - ஒளி விளக்கை போன்ற பொருள் எகிப்தில் உள்ள ஹாதோர் கோயிலின் கீழே ஒரு மறைவிடத்தில் பொறிக்கப்பட்டது.


சக்தியூட்ட்படும் விளக்கின் மாதிரி : ஒளி விளக்கை சுற்றி பழங்கால எகிப்தியர்கள் நிறப்து போல் இருக்கும் அதில் உள்ள விளக்கு வடிவம் ஆனது, ரத்த நிறத்தில் ஒழி உமிழும் சக்தியூட்டப்படும் விளக்கின் மாதிரி என்கின்றன சில கோட்பாடுகள்.

ஓபார்ட் #15 : 
பாக்தாத் பேட்டரி - களிமண் ஜாடிகள் மற்றும் இரும்பு கம்பிகள் ஆகியவைகளை பயன்படுத்தி சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கம் பெற்ற பேட்டரிகள் பாக்தாத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.

வோல்ட் : அவைகள் ஒரு வோல்ட் அளவிலான சக்தியை வழங்க வல்லமை கொண்டவைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஓபார்ட் #14 : 
டெக்சாஸ் பெருஞ்சுவர் - இயற்கையாக உருவாகியிருக்க சாத்தியமே இல்லாத சுமார் 200,000 முதல் 400,000 ஆண்டுகள் வரையிலாக பழமை வாய்ந்த, டெக்சாஸின் ராக்வால் பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்ட சுவர் வடிவமைப்பு.

கட்டடக்கலை : சுவரில் காணப்படும் ஆர்சுகள், நுழைவு வாயில்கள், ஜன்னல்கள் மாதிரியான சதுர திறப்புகள் போன்றவைகள் அதனை வடிவமைத்த நாகரீகத்தின் கட்டடக்கலை நுணுக்கத்தை விவரிக்கிறது.

ஓபார்ட் #13 : 
1.8 பில்லியன் வருட பழைய அணு உலை - ஆப்பிரிக்காவில் உள்ள ஓக்லோ என்ற பகுதியில் தோண்டி எடுக்கப்பட்ட யூரேனியம் ஏற்கனவே பிரித்தெடுக்கப்பட்டுள்ளதை (already been extracted) வைத்து அங்கு பெரிய அளவிலான அணு உலை இருந்துள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டது. 

500,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை : அந்த உலையானது சுமார் 1.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கம் பெற்று கடந்த 500,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை இயங்கி கொண்டு இருந்துள்ளது.

ஓபார்ட் #12 : 

பிரீ ரீஸ் மேப் - ஒரு துருக்கிய கடற்படை அதிகாரி பிரீ ரீஸ் என்பவர் மூலம் 1513 ஆம் ஆண்டில் வரையப்பட்ட மேப், அண்டார்டிக்கா பனியால் சூழ்வதற்கு முன்பே வரையப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


ஓபார்ட் #11 : 
2,000 வருட பழைய நிலநடுக்கம் கண்டறியும் இயந்திரம் - 132 கிபி-யில் வாழ்ந்த ஷாங் ஹெங் தான் உலகின் முதல் சீஸ்மோஸ்கோப்தனை (நிலநடுக்கத்தை கண்டறியும் இயந்திரம்) உருவாக்கியுள்ளார்.துல்லியமான முறை : நவீன கருவிகளுடன் ஒப்பிடக்கூடிய வண்ணம் மிகவும் துல்லியமான முறையில் இக்கருவி வேலை செய்வது எப்படி என்பது இன்றுவரை மர்மம் தான்..!

ஓபார்ட் #10 : 
150,000 ஆண்டுகள் பழைமையான பைப்புகள் - சீனாவில் உள்ள மவுண்ட் பாய்கொங் குகையில் ஏரியை நோக்கிய குழாய்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

8% : ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட அந்த குழாயின் 8% ஆனது, எந்த பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை கண்டுப்பிடிக்கவே முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஓபார்ட் #09 : 
ஆண்டிகைதேரா மெக்கானிசம் - 150 பிசி காலக்கட்டத்தில் கிரேக்கர்களால் உருவாக்கப்பட்ட பண்டைய கம்ப்யூட்டர் வடிவமைப்பு தான் இந்த ஆண்டிகைதேரா மெக்கானிசம்..!

வானியல் மாற்றம் : மிகவும் துல்லியமான முறையில் வானியல் மாற்றங்களை கணக்கிடும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

ஓபார்ட் #08 : 

நிலக்கரிக்குள் ட்ரில் பிட் - 1852-ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் நிலக்கரிக்குள் ட்ரில் செய்யும் ஆணி வடிவமைப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகள் : நிலக்கரி உருவாக நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகள் ஆகும் என்ற நிலையில் அதனுள் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஸ்க்ரூ பிட்டும் மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே உருவாகி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஓபார்ட் #07 : 
2.8 பில்லியன் வருட பழைமையான கோளங்கள் - அழகான முறையில் சுற்றி வட்டமாக பள்ளம் வெட்டப்பட்ட கோளங்கள் தென் ஆப்ரிக்க சுரங்கங்களில் கண்டுபிடிக்கப்பட்டன.

2.8 பில்லியன் ஆண்டுகள் : செயற்கையான முறையில் உருவாக்கப்பட்டுள்ள அந்த கோளங்கள் சுமார் 2.8 பில்லியன் ஆண்டுகள் பழைமையானது என்று பின்னர் கண்டுப்பிடிக்கப்பட்டது.

ஓபார்ட் #06 : 
டெல்லியில் உள்ள இரும்பு தூண் - சுமார் 1500 ஆண்டுகள் பழமையான இந்த சந்திர குப்தரின் தூண் ஆனது இன்றுவரையிலாக துரு பிடிக்கமல் உள்ளது மற்றும் அதிர்ச்சியூட்டும் வகையில் மிகவும் தூய்மையாக உள்ளது.

99.72% சுத்தமான இரும்பு : அதாவது 99.72% சுத்தமான இரும்பு மூலம் உருவாக்கம் பெற்றுள்ளது. ஆனால், தற்போது நம்மால் 99.78% தான் தூய்மையான இரும்பை உருவாக்க முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓபார்ட் #05 : 
உல்ப்ர்ட் வாள் - ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வாளின் காலம் கிபி 800 முதல் 1000 வரையிலாக இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

3,000 டிகிரி பாரன்ஹீட் : இதை உருவாக்க இதன் இரும்பு தாது குறைந்தபட்சம் 3,000 டிகிரி பாரன்ஹீட் அளவில் வெப்பம் பாய்ச்சப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அந்த அளவிலான வெப்பம் பெறும் தொழில்நுட்பம் அந்த காலக் கட்டத்தில் எப்படி சாத்தியம் என்பது புதிர்தான்.

ஓபார்ட் #04 : 

1934-இல் டெக்சாஸில் சுற்றி கற்களால் அமைக்கப்பட்ட, சுமார் 100 மில்லியன் ஆண்டுகள் பழைமையான சுத்தியல் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டது.


ஓபார்ட் #03 : 
மில்லியன் வருட பழைமையான பாலம் - இந்திய புராணங்களில் ராம பக்தர்களால் கட்டப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் இது எப்படி உருவானது என்ற இயற்கையான விளக்கம் இன்றுவரை புவியியலாளர்கள் மத்தியில் கிடையாது.

ஓபார்ட் #02 :

 500,000 வருட பழைமையான ஸ்பார்க் பிளக் - 1961-ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்பார்க் ப்ளக் ஆனது சுமார் 500,000 ஆண்டுகள் பழைமையானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


ஓபார்ட் #01 : 
பஹாமாஸ் அருகேயுள்ள வரலாற்றுக்கு முந்தைய சுவர் - 1968-இல் பஹாமஸின் கடற்கரைக்குள் அடர்த்தியான தொகுதி வடிவ பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

12,000 முதல் 19,000 ஆண்டு : மனித வடிவமைப்பான இது சுமார் 12,000 முதல் 19,000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டுள்ளது.

Read more at: http://tamil.gizbot.com/miscellaneous/16-of-place-artifacts-suggest-hightech-prehistoric-civilizations-exist-011276.html#slide94199