Friday, January 9, 2015

"முஸ்லிம்கள் உலகுக்கு அறிமுகப்படுத்திய நவீன கண்டுபிடிப்புக்கள்-1"

"முஸ்லிம்கள் உலகுக்கு அறிமுகப்படுத்திய நவீன கண்டுபிடிப்புக்கள்"


உலகின் பலநூறு அரிய கண்டுபிடிப்புக்களை முஸ்லிம்களால் சம கால உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் அவைகளில் பல பின்னர் மறைக்கப்பட்டதுடன் அதை காப்பி (Copy) பண்ணியவர்கள் தம்மால்தான் இது கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லிக்கொண்டதுடன் அவர்களின் பெயர்களே சரித்திரத்தில் இடம்பெற்றும் விட்டது. அவ்வாறான ஒருசில கண்டுபிடிப்புக்களின் உண்மைத்தன்மையை பார்ப்போம்.

14 ஆம் நூற்றாண்டளவில், காலித் என்ற எதியோப்பியாவின் ஆட்டு இடையன், தனது ஆடுகள் ஒரு குறித்த பழத்தை சாப்பிட்டவுடன் புதுத்தெம்புடன் செல்வதை அவதானித்தான். பின்னர் அவன் அந்த பழக்கொட்டைகளை சூடாக்கி அருந்திப்பார்த்தான். அவனுக்குள்ளும் புத்துணர்ச்சி ஏற்படுவதை உணர்ந்தான். அவன் அருந்தியதுதான் உலகின் முதலாவது காஃபி (Coffee).

இது எத்தியோப்பியா முழுவதும் பரவியது. 15 ஆம் நூற்றாண்டில் மக்காவுக்கு யாத்திரை செல்வோர் , இரவு வணக்கங்களுக்கு நித்திரைவிழிப்பதற்காக இதை அங்கு கொண்டுசெல்ல, அந்த நேரத்தில் மக்காவின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த துருக்கியர், அதனை மிகவும் விரும்பி அருந்தினர். பின்னர் 1645 இல் துருக்கியில் இருந்து வர்த்தக நோக்கத்துக்காக இத்தாலியின் வெனிசுக்கு இந்த காஃபி ஏற்றுமதி செய்யப்பட்டது.

அது பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் உலகெங்கும் பரவியது. பெயர்கூட அரபியின் கவ்வா, துருக்கியின் கொவ்வே என்று மருவி பின்னர் அதுவே இத்தாலியின் கஃபே (caffe) யாகி, ஆங்கிலத்தில் காஃபி (Coffee) யாகியது.

உண்மையில் ஓர் உருவத்தை பார்க்க வேண்டுமானால் உருவத்திற்கே ஒளி இருக்கவேண்டும். 10 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த கிரேக்கர்கள் கண்ணில் இருந்து ஒளி உருவத்தை நோக்கி செல்வதாகவும் அதனால்தான் கண்ணால் பார்க்கமுடிகிறது என்று நம்பிய காலங்களில், அதே நூற்றாண்டில் அரேபியாவில் வாழ்ந்த புகழ்பெற்ற வான சரித்திர ஆய்வாளரும், கணக்கியல் நிபுணருமான இப்னு ஹைதம் என்பவர் ஒரு முறை தனது அறையில் தூங்கிக்கொண்டு இருந்தபொழுது ஒரு ஜன்னலின் சிறிய துவாரத்தினூடாக சென்ற வெளிச்சம் எதிர்பக்க சுவர்களில் பாரியளவில் பிம்பமாக தோன்றுவதை அவதானித்தார்.

அதைவைத்து ஆராய்ச்சி செய்த அவர், துவாரம் சிறியதாகிற போது, பிம்பங்களின் தரம் அதிகரிப்பதை கண்டுபிடித்தார். அதுவே அவர் முதலாவது கேமராவை (Camera) கண்டுபிடிக்க காரணமாகியது. Qamara என்ற அரபு சொல்லின் அர்த்தம் இருட்டு என்பதாகும்.

செஸ் (Chess) என்பது பண்டைய இந்தியாவில் ஆடப்பட்டு இருந்தாலும், அதன் இன்றைய வடிவத்தை கண்டுபிடித்தவர்கள் பாரசீகர்கள்.

பின்னர் அந்த ஆட்டம் இஸ்லாமிய ஸ்பைனுக்கு கொண்டு செல்லப்பட்டதால் ஐரோப்பியாவில் பிரபல்யமடைந்தது.

ரைட் சகோதரர்கள் பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இஸ்லாமிய ஸ்பெயினில் வாழ்ந்த அப்பாஸ் இப்னு பிர்னாஸ் என்ற முஸ்லிம் பொறியியலாளர் மனிதனால் பறக்க முடியும் என்று சிறு வயது முதல் உறுதியாக நம்பினார். இதற்காக பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

இறுதியாக 852 ஆம் ஆண்டு பாரசூட் போன்ற விமானத்தை உருவாக்கி தமது தலைநகரில் இருந்த பெரிய பள்ளிவாசலின் மினாரத்தில் இருந்து தலைநகரை (Cordoba) ஒரு சிறிய வலம் வந்தார். எனினும் இது பெரியளவில் சாத்தியமாகவில்லை. இருபது வருடங்களாக அதிலுள்ள நெளிவு சுளிவுகளை கற்றறிந்து 875 ஆம் ஆண்டு ஒரு பெரிய மலையில் இருந்து குதித்து 10 நிமிடங்கள் வெற்றிகரமாக பறந்து காட்டினார். அந்த நேரம் அவருக்கு வயது 70.

இதை கௌரவிக்கும் முகமாக இன்றும் பாக்தாத் விமான நிலையத்தில் ஓர் நினைவுஸ்தூபி இருப்பதும், சந்திரனின் வளைவினை அளக்கும் குறியீடாக Ibn Firnas என்ற அளவுகோல் பாவிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

சுத்தம் ஈமானில் (இறை நம்பிக்கை) பாதி என்று இஸ்லாத்தில் சொல்லப்படுகிறது. அதனைக் கருத்தில் கொண்டு தாவர எண்ணெய்யையும், சோடியம் ஹைட்ரோக்சைட் ஒன்று சேர்த்த இன்றைய சோப்பு (Soap) எகிப்தியர்களால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களே இன்றைய ஷாம்பூ (shampoo) வையும் கண்டுபிடித்தனர்.

Crankshaft எனப்படும் வாகன இஞ்சினில் இருக்கும் சக்கரத்தை ஒரு குறிப்பிட்ட வேகத்தில் சுழல வைக்கும் இயந்திரம் அல்- ஜசாரி என்ற பொறியியலாளரால் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுவே பிற்காலத்தில் அனைத்து வகையான மோட்டார் வாகன உற்பத்திக்கு உந்து சக்தியாகமாறியது. இவரே இன்றைய வாகனங்களின் பிஸ்டன் (piston) மற்றும் வால்வுகளின் (valves) முன்னோடி.

10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அல்-சஹ்ராவி என்ற மருத்துவரே இன்றைய சத்திரசிகிச்சைகளின் (Surgical Treatment) முன்னோடியாவார். இன்றைய நவீன சத்திர சிகிச்சையில் பாவிக்கப்படும் 200 ற்கும் மேற்பட்ட கருவிகள் அன்று அவரால் அறிமுகப்படுத்தப்பட்டதாகும்.

மேலும் வில்லியம் ஹாவிக்கு 300 வருடங்களுக்கு முன்பாக வாழ்ந்த இப்னு நபிஸ் என்ற மருத்துவர் மனிதனின் இரத்த சுற்றோட்டத்தை (Blood Circulation) கண்டுபிடித்தார். இதற்கும் மேலதிகமாக இவர்களே மயக்கமடைய செய்தல் (Anesthetics) முறையை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள்.

காற்றாடி மூலம் நீர் இறைத்தல் முறை, உலகிற்கு 634 ஆம் ஆண்டு வாழ்ந்த பாரசீக கலிஃபாவினால் அறிமுகப்படுத்தப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டிலேயே இது ஐரோப்பாவில் புழக்கத்திற்கு வந்தது.

தடுப்பூசி ஏற்றும் முறையை லூயிஸ் பாய்ச்சர் கண்டுபிடித்ததாக உலகம் நம்புகிறது. ஆனால் அது முஸ்லிம்களால் கண்டுபிடிக்கப்பட்டு 1724 ஆம் ஆண்டு துருக்கியில் இருந்த ஆங்கிலேய தூதுவருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பிறகே ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. சின்ன அம்மை போன்ற நோய்களுக்காக சிறு பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றுதல் முறை ஐரோப்பியர்களுக்கு ஒரு நூற்றாண்டிற்கு முன்பாகவே துருக்கியில் வழக்கத்தில் இருந்துவந்தது.

மையை தொட்டு எழுதும் முறையில் இருந்து மையை பேனாவிற்குள் கொண்ட fountain pen யை கண்டுபிடித்தவர் 953 ஆம் ஆண்டு வாழ்ந்த எகிப்தின் மன்னராகும்.

அல் –ஜிப்ராவை பற்றி பெரிதாக சொல்லத்தேவையில்லை என்று நினைக்கிறேன். இதனை கண்டுபிடித்த அறிஞர் அல்- கவாரிஸ்மி ஆவார். இவரின் பிரபல்யமான புத்தகத்தின் பெயரே அல்- ஜிப்ரா வல் முகாபிலா. அதுவே அல்- ஜிப்ராவாக மாறியது. இதற்கு மேலதிகமாக இவருடன் சேர்ந்து இருந்த அல்- கிந்தி எனும் கணக்கியலாளர் cryptology ஐ கண்டுபிடித்தவர்.

சிர்யாப் என்று புனைப்பெயரால் அழைக்கப்படும் அலி இப்னு நாபி என்பவரே இன்றைய கண்ணாடியை கண்டுபிடித்தவர்.


தொடர்ந்து படிக்க <<இங்கே>> சுட்டவும்...

No comments:

Post a Comment

welcome ur comment,