Saturday, August 23, 2014

அம்பலமாகியுள்ள ஏரியா 51 இரகசியங்கள் –1

அம்பலமாகியுள்ள  ஏரியா 51 இரகசியங்கள் –1


பறக்கும் தட்டுக்கள் வானில் தென்படுவது தொடர்பிலும், அவற்றினைப் பயன்படுத்தி வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்து செல்கின்றார்கள் எனவும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பலதரப்பட்ட கதைகள் பரவி வந்துள்ளதுடன், இது தொடர்பில் பல புகைப்படங்களும் வெளிவந்திருந்தன. இவை தொடர்பிலான ஆதாரங்கள் எதுவும் இன்று வரையிலும் சரிவர நிரூபிக்கப்படாத காரணத்தினால், பறக்கும் தட்டுக்கள் தொடர்பிலான மர்மங்கள் முடிச்சவிழ்க்கப்பட முடியாமல் இன்று வரையில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.


இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் ஆர்வம் உடையவர்கள் எவரும் நிச்சயமாக Area 51 பற்றி அறிந்திருக்காமல் இருக்க முடியாது. அந்தளவுக்கு, பறக்கும் தட்டுக்களுடனும் வேற்றுக்கிரகவாசிகளுடனும் நெருங்கிய தொடர்புடைய ஒன்றாக Area 51 காணப்படுகின்றது.

Area 51 மேற்கு அமெரிக்காவின் Nevada பிராந்தியத்திலுள்ள மலைசார்ந்த வறண்ட நிலப்பிரதேசத்தில் அமைந்துள்ளது. Area 51 என்பது அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான ஒரு பயிற்சி பட்டறையும் பரிசோதனை கூடமும் ஆகும். மிக நீண்டகாலமாகவே குறித்த பகுதிக்கு சாதாரண மக்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பிரதேசத்தின் மீதான பொதுவான விமானப்பறப்புக்களும் தடை செய்யப்பட்டுள்ளன. குறித்த பிரதேசம் தொடர்பிலான தகவல்கள் ஆரம்பத்தில் பலருக்கும் தெரியாமல் மிகவும் இரகசியமாகப் பேணப்பட்டு வந்த போதிலும், நாளடைவில் Area 51 தொடர்பிலான விடயங்கள் வெளியுலகத்திற்குக் கசியத் தொடங்கியதையடுத்து அமெரிக்க மக்கள் உள்ளிட்ட உலகத்தில் உள்ள அனைத்து மக்களினதும் கவனமானது Area 51 இன் மீதும், அங்கு என்ன நடக்கின்றது என்பது தொடர்பிலும் திரும்பத்தொடங்கியது.




1955 களில் நிர்மாணிக்கப்பட்டு செயற்படுத்தப்படத் தொடங்கிய குறித்தகட்டமைப்பானது மிகவும் இரகசியமான இராணுவ பரிசோதனைநவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டது என்று ஆரம்பத்தில் கருதப்பட்டபோதிலும், குறித்த பகுதியில் காணப்படுகின்ற Groom Lake எனப்படுகின்றபனிக்கட்டிகள் போன்ற தரைத்தோற்றத்தினைக் (Salt Lake) கொண்ட பாரியநிலப்பரப்பு மற்றும் அதனைச்சுற்றி ஏற்படுத்தப்பட்டிருந்த விமான ஓடுபாதைமேலும் குறித்த பகுதியில் வழமைக்கு மாறான விதத்தில்வடிவமைக்கப்பட்டிருந்த கட்டட அமைப்புகள், சந்தேகத்தினை ஏற்படுத்தும்வகையில் இடம்பெறத் தொடங்கிய பல இராணுவ பரிசோதனைகள் என்பன Area 51மீதான கவனத்தினை வேறு விதமாக திசை மாற்றியிருந்தது.

அத்துடன் Groom Lake என அழைக்கப்பட்ட பகுதியில் நிலத்தின் அடியில் பாரிய புகையிரதப்பாதை ஒன்றுஅமைக்கப்பட்டுள்ளது என்கின்ற தகவல்களும் வெளிவந்திருந்தன.

இதற்கேற்றாற்போல், 1947 ஆம் ஆண்டு ஜுலை 7 ஆம் திகதியளவில்மெக்சிக்கோவின் Roswell எனும் பகுதியில் விபத்துக்குள்ளாகியிருந்த பறக்கும்தட்டு ஒன்றும்,

அதிலிருந்து மீட்கப்பட்ட உயிரிழந்த வேற்றுக்கிரகவாசிகளின்உடலும் Area 51 பகுதியில் வைத்து ஆய்வுக்குட்படுத்தப்படுவதாகத் தகவல்கள்வெளியாகியிருந்தன.

அத்துடன் குறித்த பறக்கும் தட்டானது Area 51  பகுதியில்வைத்து மீள்கட்டமைக்கப்பட்டு வருவதாகவும், அதன் தொழிநுட்பத்தினை அறிந்துகொள்ளும் பொருட்டும் சோதனைகளுக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் மேலதிகதகவல்கள் வெளிவந்திருந்தன.


குறித்த பறக்கும் தட்டின் சிதைவுகள் Area 51 பகுதியில் அமைந்துள்ள Hangar 18என்று அழைக்கப்படும் கட்டடப்பகுதியில் வைத்தே மேற்கொள்ளப்பட்டுவந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும்,  MJ-12  மற்றும் SECTOR 7என்றுஅழைக்கப்படுகின்ற உயர்மட்ட அதிகாரிகள், மற்றும் இராணுவ அதிகாரிகள்உள்ளடங்கிய குழுவொன்று இது தொடர்பிலான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகநியமிக்கப்பட்டிருந்தது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து Area 51 என்பது வேற்றுக்கிரகவாசிகள் மற்றும் பறக்கும் தட்டுக்கள்தொடர்பிலான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கென அமெரிக்க அரசினால்அமைக்கப்பட்ட அதியுயர் பாதுகாப்பும், இரகசியமும் மிகுந்த பிரதேசம் என பலதரப்பினரும் கருதத்தொடங்கியிருந்தனர். இவையெல்லாவற்றிற்கும் அப்பால்,வானிலைக் கட்டுப்பாடு, இரகசிய ஆயுதங்களின் உற்பத்தி, மற்றும் முன்னையகாலத்தினை நோக்கிப் பயணிப்பதற்கான தொழிநுட்பம் (Time Travel Technology)என்பவை தொடர்பிலான ஆய்வுகளும் Area 51 பகுதியில்மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் பல்வேறு சர்ச்சைகள்தோற்றுவிக்கப்பட்டிருந்தன.

அத்துடன், Area 51 இனைச் சார்ந்த ஏனைய நிலப்பகுதிகளானது பாரிய அணுவாயுதச் சோதனைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுமிருந்தன. இதன் காரணமாக Area 51 பகுதியில் பணியாற்றிய ஊழியர்கள் பலர் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்ததுடன், குறித்த பிரதேசத்தினை அண்மித்த பகுதியில் வாழும் பொதுமக்களுக்கு நாளடைவில் புற்றுநோய்த் தாக்கங்கள் ஏற்பட்டிருந்தன எனவும் பலத்த விமர்சனங்களும் கிளம்பியிருந்தன.

மேலும், Area 51 மற்றும் அதன் இரகசியங்கள் குறித்து The Independence Day போன்ற திரைப்படங்களும் வெளிவந்திருந்தன. அத்துடன், Indiana Jones திரைப்படமொன்றில் அமெரிக்க அரசினால் கைப்பற்றப்பட்டிருந்த விநோதமான பொருட்களைச் சேமித்து வைக்கும் களஞ்சியம் ஒன்று தொடர்பான காட்சி அமைக்கப்பட்டிருந்ததுடன், குறித்த களஞ்சியசாலைக்கு Hangar 51 எனப் பெயரிடப்பட்டுமிருக்கும்.

இவ்வாறான பல சர்ச்சைகளின் முடிச்சுக்களைத் தன்னகத்தே வைத்திருந்த Area 51தொடர்பிலும், அதன் இரகசியத் தன்மை தொடர்பிலும் தற்போது முதல்முறையாக CIA யினர் உத்தியோகபூர்வமான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.இவ்விடயம் தொடர்பிலான தகவல்கள் வொஷிங்டனின் George Washingtonபல்கலைக்கழகத்திலுள்ள தேசிய பாதுகாப்பு ஆவணக்காப்பகத்திலிருந்து தற்போதுவெளியிடப்பட்டுள்ளன. 1998 ஆம் ஆண்டளவில் குறித்த விடயம் தொடர்பில் சிலஆவணங்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்த போதிலும், அவற்றில் பல முக்கியமானவிடயங்கள் மறைக்கப்பட்டே குறித்த ஆவணங்கள் வெளியிடப்பட்டிருந்தன.இந்நிலையில் தற்போது Area 51 குறித்த முழுமையான ஆவணம்வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த ஆவணங்கள் மூலம் தெரியவருவதாவது;

தொடர்ந்து படிக்க <<இங்கே>> சுட்டவும்...


3 comments:

  1. நான் வேற்றுகிரகவாசியை பார்துல்லேன் இதை நான் சிலரிடம் கூரியபோது அவர்கள் சிரித்தார்கள்

    ReplyDelete
    Replies
    1. Where u saw mogan.. I am interested to know facts about that..

      Delete

welcome ur comment,