Wednesday, July 23, 2014

வியர்வை நாற்றம் போக்க சில எளிய வழிகள்!!!

கோடை காலம் தொடங்கி விட்டது. கோடை வந்தாலே அழையா விருந்தாளியாக வியர்வையும் சேர்ந்து கொள்கிறது. சிலரது வியர்வையும், அதனால் ஏற்படும் நாற்றமும் அதிகமாக இருக்கும். எவ்வளவு வாசனைத் திரவியங்களைப் பூசினாலும் அது தீர்வதில்லை. 

அடிக்கும் வெயிலுக்கும் வியர்வைக்கும் பயந்து, குளிர்சாதன அறையிலேயே முடங்கிக் கிடப்பவர்களும் இருக்கிறார்கள். வியர்வையின் அளவை வைத்துத்தான் நமது உடல் வெப்பநிலையையே கணக்கிட முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். மனிதர்கள் அனைவருக்கும் வியர்வைச் சுரப்பி ஒரே எண்ணிக்கையில்தான் இருக்கும். 

அந்த சுரப்பிகள் இயங்கும் தன்மையில்தான் அதிகம், குறைவு என்று வேறுபடும். உண்மையில் வியர்க்காமல் இருந்தால்தான் பிரச்சினை. அதேநேரம் அதிகம் வியர்ப்பதும் ஒருவித நோய் பாதிப்பின் தன்மையாக இருக்கலாம். இப்படிப்பட்டவர்கள் மருத்துவரைச் சந்தித்து தங்களுக்கு அதிகமாக வியர்ப்பதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்டு அதற்கேற்பச் சிகிச்சை மேற்கொள்ளலாம். 

உண்மையில் வியர்வையினால் மட்டும் நம் உடலில் துர்நாற்றம் வருவதில்லை. உடலில் சேர்ந்துள்ள நச்சுப் பொருள் வியர்வையோடு வெளியேறும்போதுதான் வியர்வை துர்நாற்றம் வீசுகிறது. வியர்த்த இடத்தை உடனே சுத்தப்படுத்தாமல் போகும்போது உருவாகும் வியர்வையில் பாக்டீரியா தொற்றால், வியர்வை ஒருவித கெட்ட வாசனையை வெளியிடுவதும் நடக்கிறது. 

வியர்வையில் இரண்டு விதங்கள் உண்டு. சிலருக்கு உடல் முழுக்க ஒரேமாதிரி வியர்க்கும். சிலருக்கு முகம், தலை, வயிறு, தொடை, அக்குள் என்று குறிப்பிட்ட இடங்களில் மட்டும் வியர்க்கும். உடல் பருமன் அதிகமாக இருப்பதும் வியர்வைக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. 

சிலர் மசாலா நிறைந்த உணவை ஆர்வமாய் அள்ளித் திணிப்பார்கள். இவர்களிடம் இருந்து வெளிப்படும் வியர்வை துர்நாற்றம் நிறைந்ததாய் மாறிவிடுகிறது. துர்நாற்ற வியர்வையால் அவதிப்படுகிறவர்கள் மசாலா, பூண்டு, வெங்காயம் தவிர்ப்பது நல்லது. 

உடம்பு நன்றாக வியர்த்து விட்டால் உடனே குளிப்பவர்கள் பாக்டீரியா தொற்றில் இருந்து தப்பி விடுவார்கள். இப்படிக் குளிப்பவர்கள் அந்த வாளித் தண்ணீரில் இயற்கை நறுமணப் பொருட்களை இட்டு உடலுக்கு ஊற்றிக் குளிக்கலாம். வியர்வை நாற்றம் விலகிவிடும். 

கோடையைச் சமாளிக்கும்விதமாக தினமும் 3 லிட்டர் தண்ணீர் பருகுங்கள். அதோடு இந்தக் கோடையில் தவறாமல் கிடைக்கும் இளநீர், பனை நுங்கு, பதநீர் பருகுங்கள். வியர்வை கட்டுப்படுவதோடு, வெளிப்படும் கொஞ்ச வியர்வையும் நாற்றம் இல்லாததாக இருக்கும். கொஞ்சம் கவனம் வைத்தால், வியர்வைப் பிரச்சினையை விலக்கிவிடலாம்!

இவற்றை எல்லாம் தாண்டி ஒரு அதிசயம் கடந்த மாதம் நண்பர் ஒருவர் மூலம் இயற்கை உணர்த்தியது.


” எலுமிச்சையை  அரை பழத்தை மட்டும் வெட்டி உடல் எங்கும் நன்றாக தேய்த்து 1 மணி நேரம் கழித்து குளித்துவிட்டால் போதும் ,   ஒரு கண்டிசன் குளிக்கும் போது சோப்பு கூட போடக்கூடாது , குளித்த பின் வாசனைத்திரவியங்கள் , பவுடர் பூசக்கூடாது.


வாசனைத்திரவியங்கள் பயன்படுத்தாமல் வியர்வை நாற்றத்தை ஒரே நாளில் நம் உடலில் இருந்து நீக்கலாம்.


  • தினமும் அரை எலுமிச்சை பழம் தேய்த்து குளிக்கலாம் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அரை எலுமிச்சை பயன்படுத்தலாம். முடிந்தவரை அசைவ உணவு வகைகளையும், மைதாவில் தயாராகும் உணவுப்பண்டங்களையும் குறைக்கப்பாருங்கள் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொண்டாலே வியர்வை நாற்றம் பெருமளவு குறையும். நீங்களும் பயன்படுத்தி தங்கள் பதிலை மறக்காமல் தெரிவியுங்கள்.

  • சாதாரண நீர் அருந்துவதை விட சிறிது சீரகம் போட்டு சூடாக்கி ஆற வைத்தோ அல்லது சிறிது துளசி இலை போட்டு வைத்த குளிர்ந்த நீரையோ அருந்துவது மிகவும் நல்லது.

  • உள்ளி (சின்ன வெங்காயம்), வெங்காயம், பூண்டு (வெளுத்துள்ளி), இறச்சி, அதிக காரம் உப்பு மசாலா கலந்த உணவுப்பொருட்களை குறைக்கவும். இவை வியற்வை நாற்றத்தை அதிகப்படுத்தும். 

  • நாற்றம் அதிகமாக இருந்தால் அடிக்கடி சுடுநீர்(டீ, காபி) குடிப்பதை தவிர்க்கலாம். 

  • சாதாரண சோப்பை நிறுத்திவிட்டு மெடிமிக்ஸ், டெட்மசால் (மருந்து கடைகளில் கிடைக்கும்) போன்ற ஆண்றி பாக்ரீரியல் சோப்புகளை மட்டும்கொஞ்ச காலத்திற்கு பயன்படுத்த ஆரம்பிக்கலாம். 

  • அடிக்கடி நீண்ட நேரம் குளிந்த நீரில் குளித்து உடல் சூட்டை தணிக்க முயலவும். வீட்டில் குளிப்பதை விட ஆறு, குளம், கடல் அருவி இவைகளில் குளிக்கும் போது இயற்கையாகவே உடல் சீக்கிரமாக தணிய ஆரம்பிக்கும். 

  • கடைசியாக நீங்கள் புகைபிடிக்கும் பழக்கம் உடைய ஆளாக இருந்தால் அதை உடனடியாக நிறுத்துங்கள். 
சில பயனுள்ள தகவல் 




No comments:

Post a Comment

welcome ur comment,