Wednesday, November 28, 2012

மாபெரும் பத்து அடையாளங்கள்=2.

 

மாபெரும் பத்து அடையாளங்கள்....

 

இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் பாகத்தை படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்...

 

மாபெரும் பத்து அடையாளங்கள்.1

ஈஸா நபியின் வருகை தஜ்ஜாலின் கொடுமை தலை விரித்தாடும் போது ஈஸா நபியவர்கள் 

வானிலிருந்து இவ்வுலகுக்கு இறங்கி வருவார்கள் என்பது பத்து அடையாளங்களில் ஒன்றாகும். ஈஸா நபி வருவார்கள் என்று நம்புவது குர்ஆனுக்கு எதிரானது என்றும் 

ஆதாரமற்றது என்றும் சிலர் வாதிடுகின்றனர். தமது வாதத்தை நிலை நாட்ட சில ஆதாரங்களையும் முன் வைக்கின்றனர். 

எனவே அது பற்றி விரிவாக அறிந்து கொள்ளும் கடமை நமக்கு உள்ளது

அதை இங்கே விளக்கினால் கியாமத் நாளின் அடை யாளங்கள் என்ற தலைப்பை விட்டு விலகிச் செல்வதாகத் தோன்றும்.  

எனவே ஈஸா நபி மரணித்து விட்டார்களா என்ற தலைப்பில் தனியாக ஒரு ஆய்வுக் கட்டுரை நூலின் இறுதியில் சேர்த்துள்ளோம். அக்கட்டுரை இது

குறித்த அனைத்து சந்தேகங்களையும் நீக்கும். இன்ஷா அல்லாஹ். 

 தஜ்ஜால் இவ்வாறு ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் போது ஈஸா நபியவர்கள் வருவார்கள் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்கள் இவ்வாறு இருக்கும் போது மர்யமின் மகன் மஸீஹ் எனும் ஈஸாவை 

அல்லாஹ் அனுப்புவான். அவர்கள் குங்குமச் சாயம் தோய்க்கப்பட்ட இரண்டு ஆடைகள் அணிந்து தமது இரு கைகளையும் இரண்டு வானவர்களின் சிறகுகள் மீது வைத்தவர்களாக டமாஸ்கஸ் (திமிஷ்க்) நகரின் கிழக்கே உள்ள வெள்ளை மினராவின் அருகே இறங்குவார்கள். அவர்கள் தலையைக் குனிந்தால் நீர் சொட்டும்! தலையை உயர்த்தினால் முத்துக்களைப் போல் வியர்வைத் துளிகள் உதிரும். அப்போது அவர்களின் பெருமூச்சு இறை மறுப்பாளர் மீது பட்டால் அவர் மரணிக்காமல் இருக்க மாட்டார். 

அவர்களின் பார்வை எட்டும் தொலைவுக்கு அவர்களின் பெருமூச்சு செல்லும். அவர்கள் தஜ்ஜாலைத் தேடுவார்கள். (பைத்துல் முகத்தஸ் அருகில் உள்ள) லுத் என்ற கிராமத்தின் வாசலில் அவனைக் கொல்வார்கள். மர்யமுடைய மகன் நீதியான தீர்ப்பளிப்பவராக இறங்கும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது. அவர் சிலுவையை முறிப்பார். பன்றியைக் கொல்வார். ஜிஸ்யா வரியை நீக்குவார். வாங்குவதற்கு யாரும் இல்லாத அளவுக்குச் செல்வம் கொழிக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஈஸா நபி இறங்கும் போது ஒட்டகங்கள் சவாரி செய்யப்படாமல் விடப்படும். பொறாமையும் கள்ளமும் கபடமும் இல்லாது ஒழியும் எனவும் நபிகள் நாயகம்(ஸல்)கூறினார்கள் நூல் : முஸ்லிம் 221  

ஈஸா நபி நபியாக வர மாட்டார் ஈஸா நபியவர்கள் இறுதிக் காலத்தில் வரும் போது இறைத் தூதராக வர மாட்டார்கள். புதிய மார்க்கம் எதையும் கொண்டு வர மாட்டார்கள் 

உங்கள் இமாம் உங்களைச் சேர்ந்தவராக இருக்கும் போது ஈஸா நபியவர்கள் இறங்குவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நூல் : புகாரி 3449 

 

ஈஸா நபியவர்கள் இறங்கும்போது அப்போதைய முஸ்லிம்களின் தலைவர் வாருங்கள்! எங்களுக்குத் தொழுகை நடத்துங்கள் என்று ஈஸா நபியிடம் கேட்பார். அதற்கு ஈஸா நபியவர்கள் உங்களைச் சேர்ந்த 

ஒருவர் தான் உங்களுக்குத் தலைவராக இருக்க முடியும். இது இந்தச்சமுதாயத்துக்கு இறைவன் அளித்த கண்ணியமாகும் என்று ஈஸா நபி கூறி விடுவார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நூல் : முஸ்லிம் 225  

தஜ்ஜாலைக் கொல்வார்கள் ரோமானியர்கள் (அதாவது கிறித்தவ சக்திகள்) அஃமாக் அல்லது தாபிக் என்றஇடத்தில் பாளையம் இறங்குவார்கள். அவர்களை எதிர்கொள்வதற்காக

அன்றைய உலகில் மிகச் சிறந்தவர்களைக் கொண்ட படை ஒன்று மதீனாவிலிருந்து புறப்படும். போருக்காக அணிவகுத்த பின் எங்களைச் சேர்ந்தவர்களைச் சிறைப்பிடித்தவர்களுடன் நாங்கள் போரிட வேண்டும். 

நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் என்று ரோமானியர்கள் கேட்பார்கள். 

அதற்கு முஸ்லிம்கள் எங்கள் சகோதரர்களைத் தாக்க நாங்கள் இடம் தர மாட்டோம் என்று கூறி அவர்களுடன் போர் புரிவார்கள். முஸ்லிம்களின் படையில் மூன்றில் ஒரு பகுதியினர் பின் வாங்கி விடுவார்கள். அவர்களை அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்க மாட்டான். மற்றொரு மூன்றில் ஒரு பகுதியினர் கொல்லப்படுவார்கள். அல்லாஹ்விடத்தில் அவர்கள் தாம் சிறந்த ஷஹீத்கள் ஆவர். மற்றொரு மூன்றில் ஒரு பகுதியினர் வெற்றி பெறு வார்கள். அவர்கள் கான்ஸ்டான்டி நோபிலை வெற்றி கொள்வார்கள் தமது வாள்களை ஒலிவ மரத்தில் தொங்க விட்டு போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டுக் கொண்டிருப்பார்கள். 

அப்போது மஸீஹ்(ஈஸா நபி) வந்து விட்டார் என்று ஷைத்தான் பரப்புவான். உடனே அவர்கள் புறப்படுவார்கள். 

ஆனால் அது பொய்யாகும். தஜ்ஜாலைக் கண்டவுடன் மக்கள் மலைகளை நோக்கி ஓட்டம் பிடிப்பார்கள்

என்று நபிகள் நாயகம(ஸல்)கூறினார்கள். அல்லாஹ் வின் தூதரே!அந்நாளில் அரபுகள் எங்கே என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) 

அவர்கள் அரபுகள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இருப்பார்கள் என விடையளித்தார்கள். நூல் : முஸ்லிம் 5238 

 

தஜ்ஜாலைக் கொன்ற பின் தஜ்ஜாலிடமிருந்து தப்பித்த கூட்டத்தினர் ஈஸா நபியிடம் வருவார்கள். அவர்களின் முகத்தைத் தடவிக் கொடுப்பார்கள். 

சொர்க்கத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் பதவிகளைப் பற்றி அவர்களுக்கு எடுத்துக் கூறுவார்கள். நூல் : முஸ்லிம் 5228 

 

தஜ்ஜாலை ஈஸா நபி கொன்ற பின்னர் ஏழு ஆண்டுகள் எந்த இருவருக்கிடையிலும் எந்தப் பகையும் இல்லாத நிலை ஏற்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நூல் : முஸ்லிம் 5233  

இந்த நிலையில் யாராலும் வெல்ல முடியாத அடியார்களை நான் வெளிப்படுத்தியுள்ளேன். அவர்களைத் தூர் மலையின் பால் அழைத்துச் செல்வீராக என்று ஈஸா நபிக்கு அல்லாஹ் செய்தி அனுப்புவான். நூல் முஸ்லிம் 5228

 

ஈஸா நபி அடக்கம் செய்யப்படும் இடம்  

ஈஸா நபியவர்கள் மரணித்த பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத் தலத்தின் அருகில் அடக்கம் செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை பரவலாகக் காணப்படுகின்றது. 

  இது குறித்து திர்மிதியில் 3550 வது ஹதீஸிலும் இன்னும் சில நூல்களிலும் ஒரு ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை உஸ்மான் பின் ளஹ்ஹாக் என்பவர் அறிவிக்கிறார். இவர் பலவீனமானவர். இது குறித்து ஹதீஸ்கள் யாவும் பலவீனமானவையே என்று திர்மிதீ இமாம் குறிப்பிடுகிறார்கள்  

 

 4 யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினரின் வருகை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்த பத்து அடையாளங்களில் யஃஜுஜ் மஃஜுஜ் எனும் கூட்டத்தினரின் வருகையும் ஒன்றாகும். 

இக்கூட்டத்தினர் பற்றி திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் பல விபரங்கள் கூறப்பட்டுள்ளன. இந்தக் கூட்டத்தினர் இனி மேல் தான் பிறந்து வருவார்கள் என்பதில்லை.

நீண்ட காலமாகவே அவர்கள் இருந்து வருகின்றனர். முடிவில் இரண்டு மலைகளுக்கிடையே உள்ள பகுதியை அவர் அடைந்த போது அதற்கப்பால் எந்தப் பேச்சையும் புரிந்து கொள்ளாத ஒரு சமுதாயத்தைக் கண்டார். துல்கர்னைனே! யஃஜூஜ் மஃஜூஜ் என்போர் பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். எங்களுக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு தடுப்பை நீர் ஏற்படுத்திட உமக்கு நாங்கள் வரி தரட்டுமா என்று அவர்கள் (சைகை மூலம்) கேட்டனர். என் இறைவன் எனக்கு அளித்திருப்பதே சிறந்தது.

வமையால் எனக்கு உதவுங்கள்! உங்களுக்கும் அவர்களுக்குமி டையே தடுப்பை அமைக்கிறேன் என்றார். (தனது பணியாளர்களி டம்) என்னிடம் இரும்புப் பாளங்களைக் கொண்டு வாருங்கள்! என்றார். இரு மலைகளின் இடைவெளி (மறைந்து) மட்டமான போது ஊதுங்கள்! என்று கூறி அதைத் தீயாக ஆக்கினார். என்னிடம் செம்பைக் கொண்டு வாருங்கள்! அதன் மீது(உருக்கி) ஊற்றுவேன் என்றார். அதில் மேலேறுவதற்கும் அதில் துவாரம் போடவும் அவர்களுக்கு இயலாது. இது எனது இறை வனின் அருள். என் இறைவனின் வாக்கு நிறைவேறும் போது இதை அவன் தூளாக்கி விடுவான் என் இறைவனின் வாக்குறுதி உண்மை யானது என்றார். அவர்களை ஒருவரோடு ஒருவராக மோத விடுவோம். ஸூர் ஊதப்படும். அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவோம். அல்குர்ஆன் 18:94-99) 

முன்பே அந்தக் கூட்டத்தினர் இருந்து வருகின்றனர். அவர்கள் மலைகளால் சூழப்பட்ட பகுதியில் வசிக்கின்றனர். அம் மலைகளுக் கிடையே இரும்புப் பாளங்களை அடுக்கி செம்பு உருக்கி ஊற்றப்பட்டுள்ளது. அதைத் தாண்டி வரவும் முடியாது. அதைக் குடைந்து வெளியே வரவும் முடியாது யுக முடிவு நாளின் நெருக்கத்தில் அந்தத் தடை உடைக்கப்பட்டு அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள். ஒருவருடன் ஒருவர் முட்டி மோதிக் கொள்ளும் அளவுக்கு அவர்களின் எண்ணிக்கை பெருமளவில் இருக்கும் என்றெல்லாம் 

இந்த வசனங்களிலிருந்து நாம் அறியலாம். இறுதியில் யஃஜுஜ் மஃஜுஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள். 

உடனே அவர்கள் (வெள்ளம் போல் ஒவ்வொரு மேட்டிலிருந்தும்) விரைந்து வருவார்கள். 

யுகமுடிவு நாளின் நெருக்கத்தில் அவர்களுக்கு வழி திறக்கப்படும் என்பதை, இந்த வசனமும் அறிவிக்கின்றது. அப்போது அல்லாஹ் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினரை அனுப்பு வான். 

அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் விரைந்து வருவார்கள். அவர்களில்முதலில் வருபவர்கள் தபரிய்யா என்ற ஏரியில் தண்ணீரைக் குடிப்பார்கள்

பின்னால் வருபவர்களுக்கு தண்ணீர் இருக்காது. அந்த நேரத்தில் ஈஸா நபியவர்களும் அவர்களின் தோழர்களும் முற்றுகையிடப்படுவார்கள். 

 

கியாமத் நாளின் அடையாளம் என்று ஒருவரைப் பற்றிக் கூறுவதென்றால் 

அவர் அந்த நாளுக்கு மிக நெருக்கத்தில் உலகத்தில் வாழ வேண்டும். அப்போது தான் அவரை கியாமத் நாளின் அடையாளம் எனக் கூற முடியும். 2000ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒருவரை கியாம நாளின் அடையாளம் என்று எப்படி கூற முடியும

ஈஸா நபியைப் பொருத்த வரையில் அவர்கள் அல்லாஹ்வால் உயர்த்தப் பட்டார்கள் ஆள் மாறாட்டம் செய்து வேறொருவரைத் தான் ஈஸா நபியின் எதிரிகள் கொன்றனர் அவர் இறைவனால் உயர்த்தப்பட்டார். உயர்த்தப்பட்டவர் இறுதிக் காலத்தில்யுக முடிவு நாளுக்கு நெருக்கத்தில் மீண்டும் வருவார் மரணிப்பதற்காக 

அவர் இந்த உலகத்திற்கு மீண்டும் அனுப்பப்படுவார் என்று நபிகள் நாயகத்தின் ஏற்கத்தக்க ஏராளமான பொன் மொழிகள் தெரிவிக்கின்றன கியாமத் நாளின் அடையாளமாக அவர்கள் திகழ்கிறார்கள் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் அழகாக நமக்கு விளக்குகிறார்கள். 

 

எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! மர்யமுடைய மகன் உங்களிடம் நீதி செலுத்து பவராக தீர்ப்பு வழங்குபவ ராக இறங்குவார். சிலுவையை முறிப்பார். பன்றியைக் கொல்வார். ஜிஸ்யாவரியை நீக்குவார். வாங்குவதற்கு யாருமில்லாத அளவுக்குச் செல்வம் கொழிக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூற்கள்: புகாரி முஸ்லிம்  

நானே ஈஸா நபி என்று கூறிய பொய்யர்கள் சிலர் தோன்றினர். சிலுவை பன்றி ஜிஸ்யா என்பதற்கெல்லாம் நவீனமான விளக்கம் கூறி அதைத் தாங்கள் செயல்படுத்தியதாகக் கதையளந்தனர். யாரும் வாங்காத அளவுக்குச் செல்வம் கொழிக்கும் என்பதற்கு எந்தச் சமாதானமும் அவர்களிடம் இல்லை.

இந்தப் பொய்யர்களின் காலத்தில் இத்தகைய நிலை ஏற்படவேயில்லை. முஸ்லிமில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பில் போட்டி பொறாமை கபடம் ஆகியவை எடுபட்டுப் போகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக இடம்பெற்றுள்ளது. (நானே ஈஸா நபி என்று கூறிய)இந்தப்பொய்யர்கள் வந்தபோது இந்தத் தீயபண்புகள் முன்பை விட அதிகமானதே தவிர எடுபட்டுப் போகவில்லை. அவர் இறங்கக் கூடிய காலத்தில் இஸ்லாத்தைத் தவிர எல்லா மதங்களையும் அல்லாஹ் அழிப்பான் 

என்று அபூதாவூதில் இடம் பெறும் ஹதீஸ்கூறுகிறது. அந்த பொய்யர்களின் காலத்தில் அப்படி நடக்கவில்லை. 

 

தஜ்ஜால் கொடுமை தலைவிரித்தாடும் போது தான் ஈஸா(அலை) இறங்குவார்கள். தஜ்ஜாலின் நிலை இவ்வாறு இருக்கும்போது மர்யமின் மகன் மஸீஹை அல்லாஹ் அனுப்புவான். டமாஸ்கஸ் நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள வெள்ளை மினாரா (கோபுரம்) வின் அருகில் அவர் இறங்குவார். இரண்டு வானவர்களின் சிறகுகள் மீது தம் கைகளை வைத்தவராக இறங்குவார். 

அவர் தலை குனிந்தால் தலையில் நீர் கொட்டும். தலையை உயர்த்தினால்முத்துப் போல் தண்ணீர் சிதறும்! அவரது மூச்சுக்காற்று அவரது பார்வைஎட்டும் தூரம் வரை செல்லும். அவரது மூச்சுக்காற்று படுகின்ற எந்த காஃபிரும் சாகாமல் இருப்பதில்லை. பின்னர் தஜ்ஜாலைத் தேடுவார்கள். லுத் பைத்துல் முகத்தஸின் அருகிலுள்ள ஊர்) எனும் வாசலில் வைத்துஅவனைக் கொல்வார்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன்(ரலி) நூல்: திர்மிதீ  

(நானே ஈஸா நபி என்று கூறிய)இந்தப் பொய்யர்கள் மூலம் இவற்றில் எதுவும் நிறைவேறவில்லை.  

ஈஸா (அலை) மரணித்து சில காலத்தில் யுக முடிவு நாள் வந்து விடும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள். யுக முடிவு நாளின் மிக நெருக்கத்தில் ஏற்படவுள்ள நிகழ்ச்சிகளில் ஈஸா (அலை) அவர்களின் வருகையும் ஒன்றாகும் என்பதை முஸ்லிம்கள் நம்பியாக வேண்டும். நான்காவது ஆதாரம் உடனே அவர் (அக்குழந்தை) நான் அல்லாஹ்வின் அடியான். எனக்கு அவன் வேதத்தை அளித்தான். என்னை நபியாக்கினான். நான் எங்கே இருந்த போதும் பாக்கியம் பொருந்தியவனாகவும் ஆக்கினான். நான் உயிருடன் இருந்து என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும் ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டான். என்னை துர்பாக்கியசாயாகவும் அடக்குமுறை செய்பவனாகவும் அவன் ஆக்கவில்லை. திருக்குர்ஆன் 19:30-32 இந்த வசனங்களுக்கு பல்வேறு மொழி பெயர்ப்பாளர்கள் தவறாகவே மொழி பெயர்த்துள்ளனர். தவறான மொழி பெயர்ப்பின் அடிப்படையில் ஒரு சாரார் ஈஸா நபி அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதற்கு இதைச் சான்றாகக் காட்டுகிறார்கள். சரியான மொழி பெயர்ப்பின் படி ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்ற கருத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ இவ்வசனங்கள் தரவில்லை. நான் அல்லாஹ்வின் அடிமையாவேன். எனக்கு வேதத்தை அவன் வழங்கினான். மேலும் என்னை நபியாகவும் ஆக்கினான். 

(திருக்குர்ஆன் 19:30) நான் எங்கிருந்த போதும் என்னை பாக்கியம் பெற்ற வனாக அவன் ஆக்கியுள்ளான். மேலும் நான் உயிருள்ளவனாக இருக்கும் காலமெல்லாம்தொழுமாறும் ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டான்.

(திருக்குர்ஆன் 19:31) மேலும் எனது தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் (ஆக்கினான்.) என்னை துர்பாக்கியசாயாகவும் அடக்குமுறை செய்பவனாகவும்  அவன் ஆக்கவில்லை. (திருக்குர்ஆன் 19:32) 

இரண்டாவது வசனத்தில் நான் உயிருள்ளவனாக இருக்கும் போது தொழ வேண்டும் ஸகாத் கொடுக்க வேண்டும் என ஈஸா நபி கூறியதாகக் கூறப்படுகிறது ஈஸா நபி அவர்கள் உயிருடன் உயர்த்தப்பட்டு வானில் இருந்தால் அவர்கள் எப்படி ஸகாத் கொடுக்க முடியும் அவர்கள் ஸகாத் கொடுக்க முடியவில்லையானால் அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பது தான் 

பொருள். ஏனெனில் உயிருடன் இருக்கும் வரை தமக்கு ஸகாத் கடமைஎன்று ஈஸா நபி அவர்கள் கூறி யிருக்கிறார்கள். இது தான் அந்த சாரார் எடுத்து வைக்கும் வாதம். இவ்வசனத்தில் வ பர்ரன் பிவாததீ என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது.

 

எனது தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் என்பது இதன் பொருள். செய்பவனாகவும் (செய்பவன் + ஆக + உம்) என்பதில் உம் மைப் பொருளை எங்கே முற்றுப் பெறச் செய்வது என்பதில் தான் பலரும் கவனக் குறைவாக இருந்துள்ளனர். உம் மைப் பொருளைப் பொருத்த வரை தமிழ் மொழியில் கருத்துக் குழப்பம் ஏற்படுவதில்லை. அரபு மொழியில் கருத்துக் குழப்பம் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது என்பதை முதல் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.  

இப்ராஹீமை நல்லவனாகவும் வல்லவனாகவும் கருதுகிறேன் என்ற  தமிழ் வாக்கியத்தில் நல்லவனாகவும் வல்லவனாகவும் 

என இரண்டு உம் மைப் பொருள்கள் இடம் பெற்றுள்ளன. அரபு மொழியில் இதே வாக்கியத்தைக் கூற வேண்டுமானால் கருதுகிறேன் இப்ராஹீமை நல்லவனாகவும் வல்லவனாகவும் என்ற வரிசைப்படி அமையும். இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு திருக்குர்ஆன் 19:32 வசனத்தை ஆராய்வோம். என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் என்பதை எங்கே முற்றுப் பெறச் செய்ய வேண்டும் என்று தேடினால் இரண்டு இடங்களில் அதை முற்றுப் பெறச் செய்ய முடியும். 

என்னை நபியாகவும் ஆக்கினான் என்று வசனம் கூறுகிறது. இதன் தொடர்ச்சியாக என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் என்று முற்றுப்பெறச் செய்யலாம் என்னை நபியாகவும் என்தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் அவன்ஆக்கினான் என்ற கருத்து கிடைக்கிறது.  என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் என்ற சொற்றொடரை 

19:3வசனத்தின் இறுதியிலும் முற்றுப் பெறச் செய்ய முடியும். 

நான் உயிருடையவனாகவும் என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும் ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக்கட்டளையிட்டுள்ளான் என்ற கருத்து இதிருந்து கிடைக்கும்.  

நாம் இரண்டாவதாகக் கூறியபடி முற்றுப் பெறச் செய்வது தான் மிகவும் சரியானதாகும். உம்மை ப் பொருளாக இடம் பெறும் சொற்களை அதற்கு அரு கில் உள்ள இடத்தில் தான் முற்றுப் பெறச் செய்ய வேண்டும். அருகில்  முற்றுப் பெறச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் தான் தொலைவில்முற்றுப் பெறச் செய்ய வேண்டும் என்பது இலக்கண விதியாகும். 

என் தாயாருக்கு நன்மை செய்பவனாக என்பது 19:32- வது வசனம்.  அதற்கு முந்தைய வசனமாகிய < 19:31 ல் முற்றுப் பெறச் செய்ய வழியிருக்கும் போது அதைப் புறக்கணித்து விட்டு அதற்கும் முன்னால்சென்று வசனத்தில் முற்றுப் பெறச் செய்வதை இலக்கணம் அறிந்தவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. 

எனவே நான் உயிருள்ளவனாகவும் என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் இருக்கும் காலமெல்லாம் என்பது தான் சரியான பொருளாகும் 

எனவே ஈஸா நபி அவர்கள் உயிருடன் இருப்பது மட்டுமின்றி தாயாருக்கு நன்மை செய்பவராகவும் இருந்தால் தான் அவர் மீது ஸகாத் கடமையாகும். அவர் எப்போது உயர்த்தப்பட்டு விட்டாரோ அப்போது அவரால் தாயாருக்கு நன்மை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. 



ஈஸா நபி அடங்கினாலும் அவர்களுக்கு வேறு இடங்களில் விதி விலக்கு அளிக்கப் பட்டுள்ளதைக் கவனிக்காததால் தான் இவ்வாறு வாதிடுகின்றனர். ஈஸா நபி கியாமத் நாளின் அடையாளமாக இருக்கிறார். (திருக்குர்ஆன் 43:61 ஈஸா நபி மரணிப்பதற்கு முன் அவரை வேதக்காரர்கள் நம்பிக்கை கொள்வார்கள். (திருக்குர்ஆன் 

ஈஸா நபியவர்கள் மரணிக்கவில்லை என்று இவ்விரு வசனங்களும் அறிவிக்கின்றன. எனவே அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டார்கள் என்பதையும் இவ்விரு வசனங்களையும் இணைத்து ஈஸா நபி தவிர மற்ற தூதர்கள் அவருக்கு முன் மரணித்து விட்டார்கள் என்று தான் முடிவு செய்யவேண்டும். இவ்வாறு முடிவு செய்யும் போது எந்த வசனத்தையும் நாம் மறுக்கவில்லை. எல்லா வசனங்களும் சேர்ந்து எந்தக் கருத்தைத் தருகிறதோ அந்தக் கருத்தைத் தான் நாம் கொள்கிறோம். இவ்விரு வசனங்கள் மட்டுமின்றி மற்றொரு வசனமும் ஈஸா நபியவர்கள் மரணிக்கவில்லை என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது. மர்யமின் மகன் மஸீஹ் தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர். அவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக! பின்னர் அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் சிந்திப்பீராக! திருக்குர்ஆன் 5:75) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறித்து அவருக்கு முன்னர் தூதர்கள் சென்று விட்டனர் என்று திருக்குர்ஆன் 3:144 வசனம் 

குறிப்பிடுவது போலவே இவ்வசனம் ஈஸா நபியைக் குறித்துப் பேசுகிறது. 

இவ்வசனம் அருளப்பட்ட காலத்தில் ஈஸா நபி மரணித்திருந்தார்கள் என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். அவரைக் கடவுளாகநம்புகின்ற மக்களுக்கு மறுப்புக் கூறும் போது எவ்வாறு கூற வேண்டும் 

ஈஸா தூதர் தான் அவரே மரணித்து விட்டார் என்று கூறினால் அது தான் சரியான பதிலாக இருக்க முடியும்.  

மரணித்தவரை எப்படிக் கடவுள் எனக் கருதலாம் என்ற கருத்து இதனுள் அடங்கியிருக்கும். ஈஸா நபி மரணித்திருந்தால் அதைச் சொல்ல வேண்டிய இடம் இது தான். ஈஸா நபியைக் கடவுளாக்கியவர்களுக்கு மறுப்புச் சொல்லும் இந்த இடத்தில் இறைவன் பயன்படுத்திய வார்த்தையைக் கவனித்தீர்களா ஈஸா தூதர் தான். அவருக்கு முன்னர்தூதர்கள் சென்று விட்டனர் என்று அல்லாஹ் கூறுகிறான் 

அல்லாஹ் ஞானமிக்கவன் நுண்ணறிவாளன் அவன் பொருத்தமற்ற சொற்களைப் பயன்படுத்துவதை விட்டும் தூய்மையானவன். ஈஸா நபி மரணித்திருந்தால் இந்த வாசக அமைப்பு இறைவன் தெளிவாகக் கூறுபவன் அல்லன் என்ற கருத்தைத் தந்து விடும். 

அவரே இறந்திருக்கும் போது அதைக் கூறாமல் அவருக்கு முன் சென்றவர்கள் இறந்து விட்டார்கள் என்று விவேகமுள்ளவர் யாரேனும் பேசுவதுண்டா 

அவருக்கு முன்னர் தூதர்கள் சென்று விட்டனர் எனக் கூறி விட்டு அவர் பூமியில் வாழும் போது சாப்பிட்டுக் கொண்டிருந்ததைக் காரணமாகக் காட்டி அவரது கடவுள் தன்மையை அல்லாஹ் மறுக்கிறான். அவர் மரணித்திருந்தால் 

அதையே காரணமாகக் காட்டி அவரது கடவுள் தன்மையை இறைவன் மறுத்திருப்பான். முஹம்மதுக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர் என்ற வசனம் அருளப்படும் போது முஹம்மத் (ஸல்) அவர்கள் உயிரோடு இருந்தனர் என்று புரிந்து 

கொள்கிறோம். அது போல் ஈஸாவுக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர் என்ற வசனம் இறங்கும் போதும் ஈஸா நபி உயிருடன் இருந்தனர் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும். 

ஒரே மாதிரியாக அமைந்த இரண்டு இடங்களில் வித்தியாசமாகப் பொருள்

கொள்வது ஏற்புடையதன்று. 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது நபித் தோழர்கள் நடந்துகொண்ட முறையை அவர்கள் சான்றாகக் காட்டுவதும் சரியல்ல. ஈஸா நபி வருவார்கள் என்ற ஏராளமான ஹதீஸ்களை நபித் தோழர்கள் தான் அறிவிக்கின்றனர். நாம் முன்னர் சுட்டிக் காட்டிய 43:61, 4:159 

இரு வசனங்களையும் நபித் தோழர்கள் அறிந்திருந்தனர். ஈஸா நபிக்கு விதிவிலக்கு இருந்ததைச்சந்தேகமற அவர்கள் அறிந்திருந்தனர் நபிகள் நாயகத்துக்கும் அது போல விதிவிலக்கு இருக்கும் என்று அவர்கள் எண்ணியதால் தான் நபிகள் நாயகம் மரணிக்க வில்லை என்று வாதிட்டனர்

 

நபிகள் நாயகத்துக்கு விதிவிலக்கு இல்லை என்பது அபூபக்கர்(ர)அவர்களின் வாதத்தின் மூலம் தெரிந்ததும் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டார்கள்

அனைவருக்கும் சர்வ சாதாரணமாகத் தெரிந்த விதி விலக்குகளை 

யாரும் சான்றாகக் காட்டிப் பேச மாட்டார்கள். எனவே இவ்வசனம் ஈஸா நபி மரணித்ததாகக் கூறவில்லை. 

 

ஆறாவது ஆதாரம் மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும்  

என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்! என நீர் தான் மக்களுக்குக் கூறினீரா என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும் போது நீ தூயவன்.

எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். 

நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை 

நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன் என்று அவர் பதிலளிப்பார். நீ எனக்குக் கட்டளையிட்ட படி எனது இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை

நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன். 

அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. அவர்களை 

நீ மன்னித்தால் நீ மிகைத்தவன் ஞானமிக்கவன் எனவும் அவர் கூறுவார்) திருக்குர்ஆன் 5:116-118) இவ்வசனங்கள் மறுமையில் ஈஸா நபியை விசாரிப்பது பற்றியும்  

அதற்கு அவர் அளிக்கும் பதில் பற்றியும் கூறுகின்றன இவ்வசனத்தில் 

என்னை நீ கைப்பற்றிய போது என்று மொழி பெயர்க்கப்பட்ட இடத்தில் தவஃப்பைத்தனீ என்ற சொல் பயன் படுத்தப்பட்டுள்ளது.

இச்சொல்லுக்கு என்னை மரணிக்கச் செய்த போது என்று பொருள் கொள்வதா என்னைக் கைப்பற்றிய போது என்று பொருள் கொள்வதா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. 

என்னை மரணிக்கச் செய்த போது என்று சிலர் பொருள் கொண்டு ஈஸா 

நபி மரணித்து விட்டார்கள் என்பதற்கு இவ்வசனத்தைச் சான்றாகக் காட்டுவர். என்னை மரணிக்கச் செய்த பின் அவர்களின் நடவடிக்கைக்கு நீயே பொறுப்பு என்று ஈஸா நபியே கூறியுள்ளதிருந்து அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதை அறியலாம் என்று இவர்கள் வாதிடுகின்றனர். இது போல் அமைந்த மற்றொரு வசனத்தையும் எடுத்துக் காட்டுகின்றனர். ஈஸாவே! நான் உம்மைக் கைப்பற்றுபவனாகவும் என்னளவில் உம்மை உயர்த்துபவனாகவும் என்னை) மறுப்போரிடமிருந்து உம்மைத் தூய்மைப்படுத்துபவனாகவும் உம்மைப் பின்பற்றுவோரை கியாமத் நாள் வரை (என்னை) மறுப்போரை விட மேல் நிலையில் வைப்பவனாக வும் இருக்கிறேன்  

என்று அல்லாஹ் கூறியதை நினைவூட்டுவீராக! பின்னர் என்னிடமே உங்களின் திரும்புதல் உள்ளது. நீங்கள் முரண்பட்ட விஷயத்தில் உங்களுக்கிடையே தீர்ப்பு வழங்குவேன். திருக்குர்ஆன் 3:55) உம்மைக் கைப்பற்றுபவனாகவும் என்ற இடத்தில் முதவஃப்பீக என்ற அரபுச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சொல்லும் தவஃப்பாவிலிருந்து பிறந்த சொல்லாகும். எனவே உம்மை மரணிக்கச் செய்பவனாகவும் என்று தான் பொருள் கொள்ள வேண்டும் எனவும் இவர்கள்வாதிடுகின்றனர். அவர்கள் கூறுவது என்ன என்பதை அறிந்து விட்டு இதன் சரியான விளக்கத்தைக் காண்போம் தவஃப்பா என்ற சொல் திருக்குர்ஆனில் 25 இடங்களில் இடம் பெற்றுள்ளது. அவற்றில் 23 இடங்களில் மரணிக்கச் செய்தல் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த வசனத்திலும் அவ்வாறே பொருள் கொள்ள வேண்டும் என்பது இவர்களின் வாதம். இவர்களின் இந்த வாதம் அறிவுடையோரால் நிராகரிக்கப்பட வேண்டிய வாதமாகும். இவர்களின் வாதத்திலேயே இவர்களின் வாதத்துக்கு மறுப்பும் அமைந்திருக்கிறது. இவர்களின் வாதப்படி 23 இடங்களில் மரணிக்கச் செய்தல் என்று பொருள் கொள்ளப்பட்டிருந்தும் இரண்டு இடங்களில் கைப்பற்றுதல் என பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இவர்களின் வாதம் சரி என்று வைத்துக் கொண்டால் 23 இடங்களில் செய்த பொருளையே மீதி இரண்டு இடங்களுக்கும் செய்திருக்க வேண்டும். எனவே அந்தந்த இடங்களில் எந்தப் பொருள் சரியானது என்பது தான் கவனிக்கப்பட வேண்டுமே தவிர பெரும்பான்மை அடிப்படையில் எல்லாஇடங்களுக்கும் ஒரே அர்த்தம் செய்வது ஏற்கத்தக்கது அல்ல இது குறித்து நாம் விரிவாகவே ஆராய்வோம். தவஃப்பா என்ற சொல்ன் நேரடிப் பொருள் மரணிக்கச் செய்தல் அல்ல முழுமையாக எடுத்துக்கொள்ளுதல் என்பதே அதன் நேரடிப் பொருளாகும்.  

மரணத்தின் மூலம் மனிதன் முழுமையாக எடுத்துக் கொள்ளப்படுவதால் 

மரணிக்கச் செய்வதை இச்சொல் மூலம் குறிப்பிடுவது வழக்கத்துக்கு வந்தது.

திருக்குர்ஆனில் 2:234, 2:240, 3:55, 3:193, 4:97, 6:61, 7:37, 7:126,

8:50, 10:46, 10:104, 12:101, 13:40, 16:28, 16:32, 16:70, 22:05, 32:11

40:67, 40:77, 47:27 ஆகிய இடங்களில் மரணிக்கச் செய்தல் என்ற

பொருளில் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது அவன் தான் உங்களை இரவில் கைப்பற்றுகிறான் (திருக்குர்ஆன் 6:60) இவ்வசனத்தில் அதே சொல் இடம் பெற்றாலும் மரணிக்கச் செய்தல் என்று இங்கே பொருள் இல்லை. தூக்கத்தில் ஒருவரைக் கைப்பற்றுதல்

என்பதே இதன் பொருளாகவுள்ளது. அவர்களை மரணம் கைப்பற்றும் வரை வீட்டில் தடுத்து வையுங்கள் 

(திருக்குர்ஆன் 4:15) 

மரணம் மரணிக்கச் செய்யும் வரை என்று இவ்வசனத்திற்குப் பொருள்

கொள்ள முடியாது. கைப்பற்றுகிறான் என்று தான் அதே சொல்லுக்கு இந்த இடத்தில் பொருள் 

கொள்கிறோம். மரணிக்கச் செய்தல் என்று பொருள் கொள்வதில்லை. இவை தவிர மறுமையில் முழுமையாகக் கூ தரப்படும் என்பதைக் கூறும்

2:281, 3:161, 3:185, 16:111 ஆகிய வசனங்களிலும் இதே சொல் தான் 

பயன்படுத்தப்பட்டுள்ளது. முழுமையாகக் கூ தரப்படும் என்று தான் பொருள்

கொள்ள வேண்டும். மறுமையில் சாகடிக்கப்படுவார்கள் என்று பொருள் கொள்ள முடியாது. மரணிக்கச் செய்தல் கைப்பற்றுதல் முழுமையாக வழங்குதல் ஆகிய பொருள் இச்சொல்லுக்கு உண்டு. எந்தெந்த இடத்துக்கு எது பொருத்தமானதோஅதை அந்த இடத்தில் செய்ய வேண்டும். தொழுகையைக் குறிக்கும் ஸலாத் என்ற சொல்லும் அதிருந்து பிறந்தசொற்களும் 109 இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 102 

இடங்களில் தொழுகையைக் குறிப்பதற்கும் 7 இடங்களில் அகராதியில் 

உள்ள அர்த்தத்துக்கும் பயன்படுத்தப் பட்டுள்ளது. இப்படி ஏராளமான சொற்

களைக் காணலாம். இப்போது விவாதத்துக்கு எடுத்துக் கொண்ட வசனத்தில் இடம் பெற்ற  

தவஃப்பா ; என்ற சொல்லுக்கு எவ்வாறு பொருள் கொள்வது என்னை மரணிக்கச் செய்த போது என்று இந்த இடத்தில் நாம் பொருள் 

கொண்டால் ஈஸா நபி கியாமத் நாளின் அடையாளமாக உள்ளார்திருக்குர்ஆன் 43:61) என்ற வசனத்துடனும் ஈஸா நபி மரணிப்பதற்கு முன் வேதமுடையோர் அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள் திருக்குர்ஆன் 4:159) என்ற வசனத்துடனும் மோதுகின்றது. கைப்பற்றுதல் என்று பொருள் கொண்டால் அவ்விரு வசனங்களுடன் ஒத்துப் போகின்றது. மரணிக்கச் செய்தல் என்பது எவ்வாறு தவஃப்பாவின் கருத்தாக இருக்கிறதோஅது போலவே கைப்பற்றுதல் என்பதும் அச்சொல்லுக் குரிய நேரடிப் பொருள் தான். அச்சொல்லுக்குரிய இரண்டு அர்த்தங்களில் எந்த அர்த்தம் ஏனைய வசனங்களுடன் முரண்படாத வகையில் ஒத்துப் போகிறதோ அதைக் கொள்வதுதான் சரியானதாகும். மேலும் ஈஸா நபி கூறிய வாசக அமைப்பும் இக்கருத்துக்கு வலு சேர்க்கின்

றது. நான் உயிருடன் இருந்தவரை அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்என்னை நீ கைப்பற்றிய போது நீயே அவர்களுக்குப் பொறுப்பாளன் என்றுஈஸா நபி கூற மாட்டார்கள். நான் அவர்களுடன் இருந்த போது பார்த்துக் கொண்டிருந்தேன் என்னை நீகைப்பற்றிய போது நீயே அவர்களுக்குப் பொறுப்பாளன் என்று தான் ஈஸாநபி கூறுவார்கள். நான் உயிருடன் இருந்த போது எனக் கூறாமல் நான் அவர்களுடன் இருந்த போது என்று ஈஸா நபி கூறுவார்கள். இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை நாம் சிந்திக்க வேண்டும். நான் உயிருடன் இருந்த போது என்று கூறி விட்டு ஃபலம்மா தவஃப்பை

தனீ என்று அவர்கள் கூறினால் அந்த இடத்தில் என்னை மரணிக்கச் செய்த போது என்று தான் பொருள் கொள்ள முடியும் ஆனஈல் அல்லஈஹ் அந்த வார்த்தைகளைத் தவிர்த்து விட்டு நான் அவர்களுடன் இருந்த போது என்ற முற்றிலும் வித்தியாசமான வார்த்தையைப்பயன்படுத்தியுள்ளான். அதாவது ஈஸா நபியவர்கள் அவர்களுடன் இருந்து கண்காணிக்கும் நிலையையும் அடைவார்கள் உயிருடன் இருந்தும் அவர்களுடன் இல்லாமல் இருக்கும் நிலையையும் அடைவார்கள் என்பது தான் இதன் கருத்தாகும். தவஃப்பா என்ற சொல்லுக்கு என்னைக் கைப்பற்றிய போது என்று பொருள் கொள்ள வேண்டும் என்பதை இவ்வாசக அமைப்பும் உணர்த்துகின்றது. அந்த மக்களுடன் ஈஸா(அலை)இவ்வுலகில் வாழ்ந்த போது அம்மக்களைக்கண்காணித்தார்கள். அம்மக்களை விட்டும் உயர்த்தப் பட்ட பின் கண்காணிக்க மாட்டார்கள் என்ற கருத்து< முன்னர் நாம் சுட்டிக் காட்டிய வசனங்களுடன் அழகாகப் பொருந்திப் போகின்றன. இவை தவிர தர்க்க ரீதியான சில கேள்விகளையும் கேட்கின்றனர் இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒருவர் எப்படி உயிருடனிருக்க முடியும் அவர்எதை உண்கிறார் அவர் எப்படி மலஜலம் கழிக்கி றார் என்பது போன்ற 

கேள்விகளை இத்தகையோர் கேட்கின்றனர். அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு விஷயத்தைப் பற்றி முடிவு செய்துவிட்டால் அந்த முடிவு நமக்கு விருப்பமில்லாததாக இருந்தாலும் நமது அறிவு அதை ஏற்கத் தயக்கம் காட்டினாலும் நம்ப வேண்டியது முஸ்லிம்களின் கடமையாகும். ஏனெனில் நமது அறிவு ஏற்க மறுப்பதையும் செய்து காட்டும் வல்லமை அவனுக்கு இருக்கின்றது. l சாதாரண நிலையில் இவ்வாறு நடப்பதில்லை என்பது உண்மை தான். அல்லாஹ் நாடினால் இவ்வாறு நடத்திக் காட்டுவது சந்தேகப்படக் கூடியதன்று

அதிசயமான ஒரு விஷயத்தைச் சாதாரண நிலையில் வைத்துப் பார்க்கக் 

கூடாது என்பதை உணர்ந்தால் இவ்வாறு கேட்க மாட்டார்கள் ஈஸா (அலை) அவர்கள் தொட்டில் குழந்தையாக இருந்த போது பேசியதாக

அல்லாஹ் கூறுகிறான். 5:110 இதுவும் சாதாரணமாக நடப்பது கிடையாது. ஆயினும் இறைவன் அவ்வாறு

கூறுவதால் அதில் குதர்க்கம் செய்வதில் நியாயம் இல்லை இறந்தவர்களை உயிர்ப்பித்தல் சாதாரணமாக நடக்கக் கூடிய தன்று. ஆயினும் ஈஸா (அலை) அவ்வாறு செய்ததாக அல்லாஹ் கூறுவதால் 3:49, 5:110)

அதை நம்பித் தான் ஆக வேண்டும். இறைவனின் வல்லமைக்கு முன்னே 

இது பெரிய விஷயமன்று. களிமண்ணால் பறவை செய்து அதை நிஜப் பறவையாக மாற்றுவதும் நடைமுறையில் சாத்தியமற்றது தான். ஆனால் இதை அல்லாஹ் கூறுவதால் 3:49)

நம்பித் தான் ஆக வேண்டும். இது போல் பல நூறு விஷயங்களில் குதர்க்கமான கேள்விகள் கேட்க வழியுண்டு. ஆயினும் அல்லாஹ்வின் வல்லமையை உணர்ந்து அல்லாஹ்வின் 

வேதத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இவற்றை நம்பத் தயங்க மாட்டார்கள். நம்பத் தயங்கினால் அல்லாஹ்வையும் அவனது வேதத்தையும் நம்பியவர்களாக முடியாது. ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும். என்று அல்லாஹ்

கூறுகிறான். 3:185, 21:35, 29:57) >ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச்

சுவைத்தே தீரும் என்பதற்கு முரணாக ஈஸா (அலை) உயிருடன் உள்ளார்கள் என்பது அமைந்துள்ளது எனவும் அவர்கள் வாதிடுகின்றனர். ஈஸா (அலை) அவர்கள் ஒரு போதும் மரணிக்கவே மாட்டார்கள் என்று கூறினால் இவர்கள் கூறக்கூடிய முரண்பாடு ஏற்படும். ஈஸா (அலை) அவர்கள் உயிருடன் உள்ளார் என்று கூறக் கூடியவர்கள் ஈஸா (அலை) மரணிக்க மாட்டார்கள் என்று கூறுவதில்லை. அவர்கள் இவ்வுலகுக்கு வந்துவாழ்ந்து மரணத்தைத் தழுவுவார்கள் என்றே நம்புகின்றனர். மரணம் தாமதமாக வருகின்றது என்று தான் நம்புகின்றனரே தவிர மரணமே அவருக்குவராது என நம்புவதில்லை. எனவே அந்த வசனத்தினடிப்படையில் ஈஸா(அலை) மரணித்து விட்டார் என வாதிக்க முடியாது. ஈஸா நபி இன்றளவும் உயிருடன் இருக்கிறார். நபிகள் நாயகம் (ஸல்) 

அவர்கள் உயிருடன் இல்லை. எனவே எங்கள் ஈஸா நபியே உங்கள் நபியைவிடச் சிறந்தவர்கள் என்று கிறித்தவர்கள் வாதம் செய்வதற்கு இந்த நம்பிக்கை உதவி செய்கிறது. எனவே கிறித்தவர்களின் வாயை அடைக்க ஈஸா நபியின் மரணத்தை நம்பியேயாக வேண்டும் என்பது அவர்களின் வாதம் இது முட்டாள்தனமான வாதமாகும். ஒரு நபிக்கு கொடுக்காத சில சிறப்பை வேறொரு நபிக்கு அல்லாஹ் கொடுக்கலாம். கொடுத்திருக்கிறான். ஓரிரு சிறப்பு உள்ளதால் எல்லா வகையிலும் ஒருவர் சிறந்தவராக முடியாது. ஈஸா நபி தந்தையின்றி அற்புதமான முறையில் பிறந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ தந்தையின் விந்துத்துளி மூலம் பிறந்தார்கள். அதனால் ஈஸா நபியே சிறந்தவர் என்று கூட கிறித்தவர்கள் வாதிடலாம். இதனால்

ஈஸா நபி தந்தைக்குத் தான் பிறந்தார் என்று கூற வேண்டுமா இவர்கள் கூறியது போல் கிறித்தவர்கள் வாதம் செய்தால் அந்த வாதத்தை அறிவுப்பூர்வமாகச் சந்திக்க இயலும். எவ்வளவு காலம் ஒருவர் உயிருடன் இருக்கிறார் என்பதில் சிறப்பு ஏதுமில்லை. என்ன செய்திருக்கிறார் என்பதிலேயே சிறப்பு உள்ளது. இது பகுத்தறிவுள்ள அனைவரும் ஏற்கக் கூடிய வாதம் தான். இதை விளக்கமாக எடுத்துச் சொல்லி அவர்களின் வாதத்தை முறியடிக்க முடியும். ஏசு தீமைக்கு எதிராக ஏதும் போர் புரிந்ததாக வீர வரலாறு இல்லை. வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் சரியான தீர்வைக் கூறியதாக 

பைபிள் கூறவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கோ இந்தச் சிறப்புகள் உள்ளன. 

இப்படி ஆயிரமாயிரம் சிறப்புகளைக் கூறி அவர்களின் வாதத்தை முறியடிக்க முடியும். அவர்களின் தவறான வாதத்திற்கான சரியான உண்மையைமறுக்கத் தேவையில்லை. ஈஸா(அலை) அவர்களின் வருகை இன்னும் மர்யமின் குமாரரும், அல்லாஹ்வின் தூதருமான மஸீஹ் எனும் ஈஸாவை நாங்கள் கொன்று விட்டோம் என்று அவர்கள் கூறுவதாலும் அவர்கள் சபிக்கப்பட்டனர். அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை; அவரைச் சிலுவையில் அறையவுமில்லை. எனினும் அவர் (ஈஸா) அவர்களுக்குக் குழப்பமாக்கப்பட்டார். நிச்சயமாக இதில் முரண்படுவோர் இது பற்றி சந்தேகத்திலேயே உள்ளனர். வெறும் யூகத்தைப் பின்பற்றுவோர்தவிர (சரியான) ஞானம் அவர்களிடம் இல்லை. நிச்சயமாக அவரை அவர்கள் கொல்லவே இல்லை. மாறாக அல்லாஹ் அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும்,ஞானமுடையோனாகவும் இருக்கிறான். அல்குர்ஆன் 4:157,158) இவ்விரு வசனங்களையும், அல்லாஹ்வின் வல்லமையை உணர்ந்து, விதண்டாவாதமும், வார்த்தை ஜாலமும் செய்யாமல் சிந்தித்தால் இது கூறக்கூடிய உண்மையை யாரும் தெளிவாக அறியலாம். அவரை அவர்கள் கொல்லவில்லை'' என்பது அவர் மரணிக்கவில்லை என்பதை அறிவிக்காது. யூதர்கள் கொல்லவில்லை என்பதைத்தான் குறிக்கும்வேறு வழியில் அவர் மரணித்திருக்கலாம் என்பதை இவ்வசனம் மறுக்காது என்று இவர்கள் சமாதானம் கூறுகின்றனர். அத்துடன் அல்லாஹ் நிறுத்திக் கொண்டால் இவர்களது சமாதானம் பொருத்தமானதே. மாறாக அவரைத் தன்னளவில் அல்லாஹ் உயர்த்திக் கொண்டான்'' என்று அல்லாஹ்கூறுகிறான். அவர்களும் கொல்லவில்லை. அவரைத் தன்னளவிலும் உயர்த்திக் கொண்டான் என்பதையும் சேர்த்து சிந்தித்தால் அவர் மரணிக்கவில்லை என்பது தெளிவாகும். அவரை உயர்த்திக் கொண்டான் என்றால் அவரது அந்தஸ்தை உயர்த்திக் கொண்டான் என்று அவர்கள் விளக்கம் கூறி சமாளிக்கின்றனர்.zஅவர்களுடைய உடல் சம்பந்தமாகப் பேசி வரும்போது திடீரென்று அந்தஸ்து என்று தாவுவது ஏற்புடையதாக இல்லை. அந்தஸ்து உயர்வு பற்றி இங்கே கூற வேண்டியதில்லை அவரைக் கொல்லவில்லை. (கொல்லாத வகையில்) உயர்த்திக் கொண்டான் என்பது பொருத்தமாக அமைகிறது. ஒரு வாதத்துக்காக அந்தஸ்து உயர்வு என்றே வைத்துக் கொள்வோம். வேறு பல சான்றுகள் இந்த வாதத்தை உடைத்து எறிகின்றன. நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிநாளின் அடையாளமாவார். இதில்அறவே சந்தேகம் கொள்ளாதீர்கள்! என்னைப் பின்பற்றுங்கள். இதுதான் நேரான வழியாகும். (அல்குர்ஆன் 43:61) ஈஸா(அலை) அவர்கள் இறுதிக்காலத்தின் அத்தாட்சியாவார் என்ற 

வாசகம் பலமுறை சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று. இது ஈஸா(அலை) 

அவர்களுக்கு முந்தைய வேதங்களில் சொல்லப்பட்டிருந்தால் எதையாவதுகூறி சமாளிக்கலாம். இது நபி(ஸல்) அவர்களின் உம்மத்தினரை நோக்கி 

அல்லாஹ்வால் கூறப்படுகின்றது. கியாமத் நாளின் அடையாளம் என்றால்இனிமேல் அந்த அடையாளம் ஏற்பட வேண்டும் என்பதைத் தவிர வேறு அர்த்தம் அதற்கு இருக்க முடியாது. எப்போதோ இறந்து விட்ட ஒருவரைப்பற்றி இவ்வாறு கூற முடியாது. கியாமத் நாளின் அடையாளமாக அவர் திகழ்கிறார் என்ற குர்ஆன் வசனத்தை மனதிலிருத்திக் கொண்டு அவரை அல்லாஹ் தன்னளவில்உயர்த்திக் கொண்டான் என்பதைச் சிந்தித்தால் அந்தஸ்து உயர்வு என்ற அர்த்தத்துக்கு வருவது பொருத்தமாக இராது. அந்தஸ்து உயர்வுஎன்று சாதித்தால் கூட &quot;மறுமை நாளின் அடையாளமாக அவர் திகழ்கிறார்'' என்பது மிகத்தெளிவாக இந்த உண்மையைக் கூறிவிடு கின்றது. ஈஸா நபி மரணித்துவிட்டார்கள் என்று கூறுவோர் இந்தவசனத்துக்கு ஏற்கத்தக்க எந்த விளக்கமும் கூற முடியவில்லை. இப்படிஒரு வசனம் இருப்பதைக் கண்டு கொண்டதாகவே அவர்கள் காட்டிக் கொள்வதில்லை. கியாமத் நாளின் அடையாளமாக அவர்கள் திகழ்கிறார்கள் என்பதை நபி(ஸல்) அவர்கள் மிகவும் அழகாக நமக்கு விளக்குகிறார்கள். எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக!

 மர்யமுடைய மகன் உங்களிடம் நீதி செலுத்து பவராக, தீர்ப்பு வழங்குபவராக இறங்குவார். சிலுவையை முறிப்பார். பன்றியைக் கொல்வார். ஜிஸ்யா வரியை நீக்குவார். வாங்குவதற்கு யாருமில்லாத அளவுக்குச் செல்வம் கொழிக்கும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம் நானே ஈஸா நபி என்று கூறிய பொய்யர்கள் சிலர் தோன்றினர். 

சிலுவை, பன்றி, ஜிஸ்யா என்பதற்கெல்லாம் நவீனமான விளக்கம் 

கூறி அதைத் தாங்கள் செயல்படுத்தியதாகக் கதையளந்தனர். 

யாரும் வாங்காத அளவுக்குச் செல்வம் கொழிக்கும்'' என்பதற்கு 

எந்த சமாதானமும் அவர்களிடம் இல்லை. இந்தப் பொய்யர்களின் 

காலத்தில் இத்தகைய நிலை ஏற்படவேயில்லை. முஸ்லிமில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பில் &quot;போட்டி, 

பொறாமை, கபடம் ஆகியவை எடுபட்டுப் போகும்'' என்று நபி(ஸல்) 

கூறியதாக இடம்பெற்றுள்ளது. இந்தப் பொய்யர்கள் வந்தபோது இந்தத் 

தீயபண்புகள் முன்பை விட அதிகமானதே தவிர எடுபட்டுப் போகவில்லை. அவர் இறங்கக் கூடிய காலத்தில் &quot;இஸ்லாத்தைத் தவிர எல்லா 

மதங்களையும் அல்லாஹ் அழிப்பான்'' என்று அபூதாவூதில் இடம் 

பெறும் ஹதீஸ் கூறுகிறது. அந்த பொய்யர்களின் காலத்தில் அப்படி 

நடக்கவில்லை. தஜ்ஜால் கொடுமை தலைவிரித்தாடும் போது தான் ஈஸா(அலை) 

இறங்குவார்கள். தஜ்ஜாலின் நிலை இவ்வாறு இருக்கும்போது மர்யமின் மகன் மஸீஹை

அல்லாஹ் அனுப்புவான். டமாஸ்கஸ் நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள 

வெள்ளை மினாரா (கோபுரம்) வின் அருகில் அவர் இறங்குவார். இரண்டு

வானவர்களின் சிறகுகள் மீது தம் கைகளை வைத்தவராக இறங்குவார்.

அவர் தலை குனிந்தால் தலையில் நீர் கொட்டும். தலையை உயர்த்தினால்

முத்துப் போல் தண்ணீர் சிதறும்! அவரது மூச்சுக்காற்று அவரது பார்வை

எட்டும் தூரம் வரை செல்லும். அவரது மூச்சுக்காற்று படுகின்ற எந்த 

காஃபிரும் சாகாமல் இருப்பதில்லை. பின்னர் தஜ்ஜாலைத் தேடுவார்கள்

லுத்' (பைத்துல் முகத்தஸின் அருகிலுள்ள ஊர்) எனும் வாசலில் 

வைத்து அவனைக் கொல்வார்கள் என்றும் நபி(ஸல்) கூறியுள்ளார்கள் அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம் ஆன்(ரலி) நூல்: திர்மிதீ இந்தப் பொய்யர்கள் மூலம் இவற்றில் எதுவும் நிறைவேறவில்லை. ஈஸா(அலை) மரணித்து சில காலத்தில் யுகமுடிவு நாள் வந்துவிடும் 

எனவும் நபி(ஸல்) கூறியுள்ளார்கள். யுகமுடிவு நாளின் மிக நெருக்கத்தில் ஏற்படவுள்ள நிகழ்ச்சிகளில் ஈஸா

(அலை) அவர்களின் வருகையும் ஒன்றாகும் என்பதை முஸ்லிம்கள் 

நம்பியாக வேண்டும். ஈஸா(அலை) இன்று வரை மரணிக்கவில்லை; உடலுடன் உயர்த்தப்பட்ட

அவர்கள் இறுதிக்காலத்தில் இறங்குவார்கள் என்பதற்குச் சான்றாக மற்று

மொரு தெளிவான திருக்குர்ஆன் வசனத்தைப் பாருங்கள்! &quot;அல்லா

ஹ் அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான்'' என்ற வசனத்திற்கு 

அடுத்த வசனமாக இந்த வசனம் இடம் பெற்றுள்ளது. வேதமுடையவர்களில் எவரும் அவர்(ஈஸா) இறப்பதற்கு முன் அவர் 

(ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை. ஆனால் மறுமை நாளி

ல் அவர் அவர்களுக்கு எதிராகச் சாட்சி சொல்பவராக இருப்பார். (அல்குர்ஆன் 4:159) ஈஸா(அலை) அவர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பே மரணித்துவிட்

டார்கள் என்று கூறக்கூடியவர்களின் நம்பிக்கைப்படியும் இந்த வசனத்திற்

குப் பொருள் கொண்டு பார்ப்போம். ஈஸா(அலை) அவர்கள் இன்று வரை

மரணிக்கவில்லை என்று கூறுவோரின் நம்பிக்கைப்படியும் பொருள் கொ

ண்டு பார்ப்போம். எது சரியான பொருள் என்பதை இதன் மூலம் அறிந்து

கொள்ளலாம். ஈஸா நபியின் மரணத்திற்கு முன்'' என்ற சொற்றொடருக்கு முதல் 

சாராரின் நம்பிக்கைப் பிரகாரம் எப்படிப் பொருள் வரும்? ஈஸா நபியின்

மரணத்திற்கு முன் என்றால் அவர் இந்த உலகில் வாழ்ந்தபோது என்றுதா

ன் இவர்கள் பொருள் கொள்ள முடியும். ஈஸா நபியின் மரணத்திற்கு மு

ன் அதாவது அவர் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் என்பது 

தான் இந்தச் சொற்றொடரின் பொருளாகிறது. வேதமுடையவர்கள் அனைவரும் ஈஸா(அலை) வாழ்ந்த காலத்தில் இனி 

ஈமான் கொள்வார்கள் என்பது மொத்த வசனத்தின் பொருளாகிறது. ஈஸா(அ

லை) வாழ்ந்த காலத்தில் இனி ஈமான் கொள்வார்கள் என்பதற்கு ஏதேனும் 

பொருளிருக்கிறதா? அல்லாஹ்வின் வசனம் எந்த அர்த்தமுமில்லாததாக 

அல்லவா ஆகிவிடும்? ஈஸா(அலை) இனிமேல் மரணிப்பதற்கு முன் - இனி மேல் வேதமுடைய

வர்கள் ஈமான் கொள்வார்கள் என்பது தான் பொருத்தமாக உள்ளது. ஈஸா 

நபி வாழ்ந்த காலத்தில் இனி ஈமான் கொள்வார்கள் என்பதில் எவ்வளவு 

குழப்பம் என்று பாருங்கள். அவர் வாழ்ந்த காலத்தில் இனி ஈஸா(அலை) 

மீது ஈமான் கொள்வார்கள் என்று அவர் மரணித்த பிறகு அல்லாஹ் 

சொல்வானா? இதைச் சிந்தித்தால், ஈஸா(அலை) இன்றுவரை மரணிக்கவில்லை; அவர் 

மரணிப்பதற்கு முன்னால் வேதமுடையோர் அனைவரும் அவரை நேரில் 

பார்த்து ஈமான் கொள்வார்கள் என்பது தெளிவாகும். எவ்வளவு அழுத்தமாக 

ஈஸா நபி மரணிக்கவில்லை என்பதைக் குர்ஆன் கூறுகிறது என்று சிந்தியுங்கள்

மேலும் அல்லாஹ் அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான் எனக் 

கூறப்படுவதால் உயர்த்திக் கொண்டான் என்பது உடலுடன்தான் என்பதை 

ஐயத்திற்கிடமின்றி அறிவிக்கின்றது. புகை மூட்டம் யுகமுடிவு நாளின் நெருக்கத்தில் வானத்திலிருந்து புகைப் படலம் இறங்கும்.

அது சாதாரண புகையாக இருக்காது. மாறாகக் கடுமையாக வேதனையளிப்ப

தாக அந்தப் புகை அமைந்திருக்கும் என்று திருக்குர்ஆனும் நபிமொழிகளும் 

அறிவிக்கின்றன. வானம் தெளிவான புகையை வெளிப்படுத்தக் கூடிய நாளை எதிர்பார்ப்பீராக!

அப்புகை மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும், இது கடுமையான வேதனையாக

அமைந்திருக்கும். (அல்குர்ஆன் 44:10,11) உங்கள் இறைவன் உங்களுக்கு மூன்று விஷயங்களைப் பற்றி எச்சரிக்கிறான்

அவற்றில் ஒன்று புகை மூட்டம். முஃமினை இப்புகை ஜலதோஷம்

பிடிப்பது போல் பிடிக்கும். காஃபிரைப் பிடிக்கும் போது அவன் ஊதிப்போ

வான். அவனது செவிப்பறை வழியாகப் புகை வெளிப்படும். இரண்டாவது 

(அதிசயப்)பிராணி. மூன்றாவது தஜ்ஜால் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூமாலிக்(ரலி) நூல்: தப்ரானி பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை கியாமத் நாள் ஏற்படாது

என்று நபி(ஸல்) கூறிய ஹதீஸை முன்னர்(பக்கம் 17ல்) குறிப்பிட்டுள்

ளோம். அந்தப் பத்து அடையாளங்களில் ஒன்றாக புகை மூட்டத்தையும் ந

பி(ஸல்) குறிப்பிட்டுள்ளதை இந்த இடத்தில் கவனத்தில் கொள்க!

அப்புகையை காஃபிர்கள் சுவாசிக்கும் போது அப்புகை அவர்களின் காதுகள் 

வழியாக வெளியேறும் என்றும் அதனால் அவர்களின் உடல் ஊதிவிடும் 

என்றும் அவர்களுக்கு அதனால் மிகப்பெரிய வேதனை ஏற்படுமென்றும் 

இந்த ஆதாரங்கள் கூறுகின்றன மூன்று பூகம்பங்கள் யுகமுடிவு நாளின் நெருக்கத்தில் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவுகளும், 

பூகம்பங்களும் ஏற்படும். மனிதர்கள் உயிருடன் புதையுண்டு போவார்கள்.

(மதீனாவின்) கிழக்கே ஒரு பூகம்பம். மேற்கே ஒரு பூகம்பம், அரபு தீபகற்

பத்தில் ஒரு பூகம்பம் ஆகிய மூன்று பூகம்பங்களை நீங்கள் காண்பது வரை 

யுகமுடிவு நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி நூல்: முஸ்லிம்

உலகில் ஆங்காங்கே பூகம்பங்களும் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றன

என்றாலும் நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடக்கூடிய இந்த பூகம்பங்கள் 

மிகவும் பிரம்மாண்ட மானவையாக அமைந்திருக்கும்.

இம்மூன்று பூகம்பங்களையும் நபி(ஸல்) அவர்கள் மூன்று தனி அடை

யாளங்களாகக் கூறியுள்ளார்கள். இம்மூன்றையும் சேர்த்து இதுவரை 

ஒன்பது அடையாளங்களை நாம் விளக்கியுள்ளோம்.

பெரு நெருப்பு எமன் நாட்டில் மிகப்பெரும் நெருப்பு ஏற்பட்டு அந்நெருப்பு கொஞ்சம் 

கொஞ்சமாக பரவி மொத்த உலகையும் சூழ்ந்து கொள்ளும். யாராலும்

அணைக்கமுடியாத அந்நெருப்பு பரவ ஆரம்பித்ததும் மக்கள் தத்தமது 

ஊரைக்காலி செய்துவிட்டு ஓட ஆரம்பிப்பார்கள். நெருப்பும் அவர்களை 

விரட்டிச் செல்லும். முடிவில் எந்த இடத்தில் அவர்கள் ஒன்று சேர்க்கப்ப

டுவார்களோ அந்த இடத்தை அடைவார்கள். எமனிலிருந்து நெருப்பு தோன்றி மக்களை அவர்களது மஹ்ஷரின்பால்

விரட்டிச் செல்லும், அதுவரை கியாமத் நாள் ஏற்படாது என்று நபி(ஸல்)

அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி) நூல்:முஸ்லிம் யுக முடிவு நாளின் நெருக்கத்தில் ஏற்படக்கூடிய பத்து அடையாளங்களை

யும் ஓரளவு நாம் அறிந்து கொண்டோம். இந்தப் பத்து அடையாளங்கள் ஏற்பட்டு, பாவமன்னிப்பின் வாசல் அடைப

டுவதற்கு முன் நமது வாழ்வைச் சீராக்கிக் கொள்ள வல்ல இறைவன் 

துணை செய்வானாக!.

 

நூலின் பெயர் : கியாமத் நாளின் அடையாளங்கள் 

ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன் 

10 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்.

    //மரணத்தின் மூலம் மனிதன் முழுமையாக எடுத்துக் கொள்ளப்படுவதால்
    மரணிக்கச் செய்வதை இச்சொல் மூலம் குறிப்பிடுவது வழக்கத்துக்கு வந்தது.// நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இத்திருமொழியில் அந்த நல்லடியார் கூறியது போன்று என்று ஈசா நபியை சுட்டிக்காட்டி, அவர்கள் குர் ஆனின் எந்த சொற்களை உபயோகித்திருக்கிறார்களோ அதே சொல்லான 'வகுன்து அலைஹிம் ஷஹீதன் மாதும் துஃபீஹிம் பலம்ம தவஃப்பைத்தனீகுன்த அன்தர்ரகீப அலைஹிம், அதாவது அவர்களோடு இருந்த காலம் வரை அவர்களுக்கு சாட்சியாக இருந்தேன் ஆனால் நீ என்னை மரணிக்க செய்தபின் நீயே அவர்களின் கண்காணிப்பாளனாக இருந்தாய் என்று கூறியிருக்கிறார்கள். திருக்குரானில் ஈசா நபி (அலை) அவர்கள் கூறிய இந்த சொற்களில் ஒரு எழுத்துக் கூட மாற்றம் இல்லாத சொல்லாக ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மறுமையில் கூறுகிறார்கள். ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பலம்ம தவஃபைத்தனீ என்று உபயோகித்த சொல்லிற்கு நீ என்னை மரணிக்க செய்தபின் என்று சரியான பொருள் கொடுத்திருக்கும் போது, ஈசா (அலை) அவர்கள் கூறும் அதே சொல்லான பலம்ம தவஃபைத்தனீ என்ற சொல்லுக்கு 'நீ என்னை ( உடலோடு வானத்திற்கு) கைப்பற்றிய பின்.' என்று விளக்கம் கொடுப்பது என்ன நியாயத்தில் இருக்கிறது.

    ReplyDelete
  2. //(திருக்குர்ஆன் 43:61 ஈஸா நபி மரணிப்பதற்கு முன் அவரை வேதக்காரர்கள் நம்பிக்கை கொள்வார்கள். (திருக்குர்ஆன் // இன்று யூதர்களும் கிருஸ்தவர்களும் மரணித்துக் கொண்டிருக்கும் போது அவர்கள் எப்படி ஈசா நபி மீது நம்பிக்கை கொள்ளமுடியும்? அவர் உயர்த்தப்பட்ட காலத்திலிருந்து இறங்கும் காலம் வரையில், உலகில் இறந்து விட்ட வேததையுடையவர்களும், தற்போது இருப்பவர்களும்,இனிமேல் வருபவர்களும் எல்லோரும் அவர் மீது நம்பிக்கை கொள்பவர்களாக கட்டாயம் இருப்பார்கள் என்றாகிவிடும்.

    ஆனால் இவ்வாறு எண்ணுவது பொருத்தமற்றது. வேதத்தையுடைய எண்ணற்ற மக்கள் மஸீஹின் நுபுவத்தை மறுத்த நிலையில் இது நாள் வரை நரகத்தை அடைந்துள்ளார்கள் என்பதை எல்லோரும் நன்கறிவர். இனிமேலும் அவர்களில் எத்தனை பேர் அவரை மறுப்பதன் காரணமாக அந்த நெருப்பில் நுழைவார்கள் என்பதை அல்லாஹ்வே அறிவான்.

    இறந்துபோன வேதத்தையுடையவர்கள் எல்லோரும் அவர் இறங்கும் காலத்தில் அவரிடம் நம்பிக்கை கொள்வார்கள் என்பதுதான் அல்லாஹ்வின் நாட்டமாக இருந்திருப்பின், அவன் அவர்கள் எல்லோரையும் அவர் இறங்கும் காலம் வரையிலும் உயிரோடு வைத்திருப்பான். அனால் வர்கள் இறந்து போனபின் அவர்கள் இனி எவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியும்? அதிலிருந்து வேதக்காரர்கள் என்ற சொல் ஈஸா நபியின் காலத்திலோ அவருக்குப் பின்னரோ உள்ள வேதக்காரர்களையும் குறிக்கும் எனத் தெரிகிறது. அந்த வசனத்தைக் ஒரு குறிப்பிட்ட ஒரு காலவறையோடு தொடர்புபடுத்தக் கூடிய எந்த ஒரு சொல்லும் அந்த வசனத்தில் இல்லை. தவிர எடுத்து வைக்கப்பட்ட அந்தப் பொருளும் தவறாகும்.

    ஏனெனில் மஸீஹை மறுப்போர் வேதக்காரராயினும் வேதக்காரர்களல்லாதவராயினும் அவரின் மூச்சினால், குப்ரின் நிலையிலேயே இறந்துபோவார்கள் என ஆதாரப்பூர்வமான ஹதீஸுகள் உரத்த குரலில் கூறுகின்றன, (மஸீஹின் மூச்சால் இறப்பது என்பதன் உண்மையான பொருளை நாம் விளக்கி வந்துள்ளோம். இதன் பொருள்,சான்றுகளின் அடிப்படையில் இறப்பதாகும். ஏதேனும் நஞ்சு நிறைந்த நச்சுப் பொருள் அவரது வாயிலிருந்து வெளிவந்து காற்றில் கலந்து பலவீனமான காபிர்களைக் கொல்லும் என்றோ ஆயினும் அதனால் தஜ்ஜாலைக் கொல்ல முடியாது என்றோ எண்ணுவது தவறாகும்).

    ReplyDelete
  3. //. மர்யமின் மகன் மஸீஹ் தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர். அவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக! பின்னர் அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் சிந்திப்பீராக! திருக்குர்ஆன் 5:75)// ஈஸா (அலை) அவர்கள் இறைவன் இல்லை என்பதற்கான வசனம் இது. 'மர்யமின் மகன் மெஸீஹ் ஒரு தூதரேயன்றி வேறில்லை, அவருக்கு முன்னுள்ள தூதர்கள் மரணமடைந்துவிட்டார்கள்'. என்று கூறிய பிறகுள்ள வாசகங்கள் அந்த வசனம் இறங்கும் நேரத்தில் நிச்சயமாக ஈஸா நபி மரணமடைந்திருக்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்துகின்றது. அல்லாஹ் கூறுகிறான்:

    "அவருடைய தாயார் நேர்மையான பெண்ணாக இருந்தார். அவர்கள் இருவரும் உணவு உண்டு வந்தனர்."(5:76)

    இங்கு அவர் ஓர் இறைத்தூதர்தான்: மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்ட உணவு உண்ணாத உடலை நாம் அவ்விருவருக்கும் வழங்கவில்லை என்பதை உணர்த்துவதற்காகவே அவர்கள் இருவரும் உணவு உண்டு வந்தனர் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். உணவு உண்ணாத உடலை இறை தூதர்களுக்கு வழங்கவில்லை என்ற (21:9) வசனத்தை இணைத்துப் பார்க்கும் போது, இது ஈஸா நபி மரணிக்கவில்லை: ஆயினும் இனிமேல் மரணிப்பவர்களே என்ற கருத்தை அல்ல; மாறாக உணவு உண்ணத் தேவையுடைய உடலைக் கொண்டிருந்த ஈஸா தற்போது உண்ணவில்லை. என்பதிலிருந்து அவர் மரணிக்கும் தன்மை கொண்டவர் என்பது மட்டுமல்ல; மரணித்தும் விட்டார் என்பதையே தெளிவுபடுத்துகிறது. அல்லாஹ் இதை உருதிப்படுத்தும்விதமாக ஈஸா (அலை) அவர்கள் உண்ணாமல் கடந்த ௨௦௦௦ ஆண்டு காலமாக வாழ்ந்து வருகிறார் என்ற இந்தக் கிறித்தவக் கொள்கையை திருக்குர்ஆன் முற்றிலுமாக மறுக்கிறது!

    "நாம் (தூதர்களாகிய) அவர்களுக்கு உணவு உண்ணாத உடலை வழங்கவில்லை. அவர்கள் மிக நீண்ட காலம் வாழ்ந்ததுமில்லை." (21:9)

    இந்த வசனத்தின்படி ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களை இறைதூதராக நம்பும் எந்த முஸ்லிமும் உணவு உண்ணாத உடலை அவருக்கு வழங்கியதாக நம்பமாட்டார். அவ்வாறு நம்பினால் மனிதனுக்கு அப்பாற்பட்ட ஓர் அசாதாரணமான பண்பு அவருக்கு இருப்பதாக கிறித்தவர்களைப் போன்று அவரும் நம்புகிறார் என்று பொருள்

    "உமக்கு முன்னர் எந்த மனிதருக்கும் நீண்ட நெடுங்காலம் வாழும் வாழ்க்கையை நாம் வழங்கியதில்லை. எனவே நீர் மரணித்து அவர்கள் மட்டும் நீண்ட நெடுங்காலம் வாழ்வதா? (21:35)

    மேற்கண்ட வசனத்தின் மூலம் ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மரணித்து அன்னாருக்கு முன்னர் தோன்றிய ஈஸா நபி (அலை) எப்படி உயிரோடு இருக்க முடியாது என்பதை தெளிவுபடுத்தி விட்டது. மேலும் இங்கே குறிப்பிட்டுள்ள 'மர்யமின் மகன் மெஸீஹ் ஒரு தூதரேயன்றி வேறில்லை, அவருக்கு முன்னுள்ள தூதர்கள் மரணமடைந்துவிட்டார்கள்'. இந்த வசனத்தின் அடிப்படையில் ஈசா (அலை) அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை இருக்குமானால் அந்த நம்பிக்கையை முஹம்மது ஒரு தூதரே அன்று வேறில்லை அவருக்கும் முன்னர் வந்த தூதர்கள் மரணித்துவிட்டார்கள் எந்த வசனம் இந்த நம்பிக்கையை அடியோடு தகர்த்துவிடுகிறது. திருக்குரானின் ஒரு வசனம் இன்னொரு வசனத்தை உறுதிப் படுத்தும். முதலில் கூறிய வசனத்தில் அடிப்படையில் ஈசா நபி உயிரோடு இருக்கிறார் என்று நம்பினால் திருக்குரானின் ஒரு வசனம் இன்னொரு வசனத்தை உறுதிப்படுத்தும் என்ற திருக்குரானின் வசனம் பொய்யாகி விடும் (நவூதுபில்லாஹ்). அதே கருத்தின் அடிப்படையில் அதாவது ஈச ஒரு தூதரே அன்றி வேறில்லை அவருக்கு முன்னர் வந்த தூதர்கள் மரணித்துவிட்டனர். என்ற வசனத்தை வைத்து ஈசா நபி உயிரோடு இருக்கிறார்கள் என்று நம்பினால் .முஹம்மது ஒரு தூதரே அன்றி வேறில்லை அவருக்கு முன்னர் வந்த தூதர்கள் மரணித்துவிட்டனர் என்ற வசனத்தின் அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்று நம்பவேண்டிவரும். இதை இவர்கள் நம்புவார்களா?

    ReplyDelete
  4. //யூதர்கள் கொல்லவில்லை என்பதைத்தான் குறிக்கும்வேறு வழியில் அவர் மரணித்திருக்கலாம் என்பதை இவ்வசனம் மறுக்காது என்று இவர்கள் சமாதானம் கூறுகின்றனர். அத்துடன் அல்லாஹ் நிறுத்திக் கொண்டால் இவர்களது சமாதானம் பொருத்தமானதே. மாறாக அவரைத் தன்னளவில் அல்லாஹ் உயர்த்திக் கொண்டான்'' என்று அல்லாஹ்கூறுகிறான். அவர்களும் கொல்லவில்லை. அவரைத் தன்னளவிலும் உயர்த்திக் கொண்டான் என்பதையும் சேர்த்து சிந்தித்தால் அவர் மரணிக்கவில்லை என்பது தெளிவாகும். அவரை உயர்த்திக் கொண்டான் என்றால் அவரது அந்தஸ்தை உயர்த்திக் கொண்டான் என்று அவர்கள் விளக்கம் கூறி சமாளிக்கின்றனர்.zஅவர்களுடைய உடல் சம்பந்தமாகப் பேசி வரும்போது திடீரென்று அந்தஸ்து என்று தாவுவது ஏற்புடையதாக இல்லை. அந்தஸ்து உயர்வு பற்றி இங்கே கூற வேண்டியதில்லை அவரைக் கொல்லவில்லை. // (4:157,158) வசனங்களின் அடிப்படையில் யூதர்கள், மரியமின் குமாரரைக் கொன்றுவிட்டதாக கூறுகிறார்கள், ஏன் கொலை செய்ய எண்ணவேண்டும்? அவருடைய உடலைக் கொன்று விட்டால் பிரச்சனை தீர்ந்துவிடுமா? பிரச்சனை அங்கு 'நபித்துவம்' என்ற அந்தஸ்து விஷயம்தானே அல்லாது உடல் சம்பந்தப்பட்டதல்ல,

    ஈசா(அலை) தம்மை இறைவனிடமிருந்து வந்துள்ள தூதர் என்று வாதித்தார்கள் யூதர்கள் அவரை எப்படியும் பொய்ப்படுத்தியே தீரவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு எத்தனையோ வழிகளில் முயற்சி செய்து தோல்வியடைந்து, இறுதியில் அவரைத் தங்களின் வேதத்தில் கூறப்பட்டபடி சிலுவையில் அறைந்து கொன்றுவிட்டால் அவர் சபிக்கப்பட்ட மரணத்தையடைந்து விட்டார் என்று பிரபல்யப்படுத்தி, சபிக்கப்பட்ட மரணத்தை அடைந்தவர் எப்படி நபியாக அந்தஸ்தில் உயர்ந்தவராக இருக்கமுடியும் என்று கூறி அவரைப் பொய்ப்படுத்தி விடலாம் என்று எண்ணி அவரைச் சிலுவையில் அறைந்து கொல்லத் திட்டம் தீட்டி செயல் பட்டனர். நபி என்ற அந்தஸ்திலிருந்து சபிக்கப்பட்ட அந்தஸ்திற்கு கொண்டுவரவே அவர்கள் முனைந்தனர்.

    யூதர்களுக்கும் ஈசா(அலை) அவர்களுக்கும் இடையிலுள்ள பிரச்சனை சொத்துத் தகராறோ, கொடுக்கல் வான்கள் தகராறோ அல்ல. அவர்களின் உடலை மட்டும் கொன்று அவர்களுக்கு அதனால் என்ன லாபம்? அந்த இடத்தில்தான் இறைவன் ஈசா(அலை) அவர்கள் உண்மையான நபி: அவர்கள் அந்தஸ்தில் குறைந்தவரல்ல என்று நிரூபிப்பதற்காக அவரை சிலுவை மரணத்திலிருந்து காப்பாற்றி அவருக்கு அந்தஸ்தில் உயர்வைக் கொடுத்தான். இதில் யாரும் திடீரென அந்தஸ்துக்குத் தாவவில்லை. பிரச்சனையே ஈசா(அலை) அவர்களின் நபித்துவம்(அந்தஸ்து) பற்றியதுதான். தாஜுல் உரூஸ் என்ற அகராதி நூலிலும் லிஸானுல் அறப் என்ற அகராதி நூலிலும் ரபாஆ என்பது இழிவுபடுத்துதல் என்பதின் எதிர் சொல்லாகும் என்று குரிப்பிடபப்ட்டுள்ளது. சபிக்கப்பட்ட மரணத்திலிருந்து காப்பற்றி (சிலுவை மரணம்) அவருக்கு இயற்கை மரணத்தைக் கொடுத்து தன்னிடத்தில் உயர்வைக் கொடுத்தான் இதை திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது. "அல்லாஹ் அவரை (ஈசா நபியை) தன்னளவில் உயர்த்திக் கொண்டான்." என 4:159 இல் காணப்படுவதை 3:56 ஆம் வசனம் தெளிவு படுத்துகிறது. இந்த வசனம் இவ்வாறு அமைந்துள்ளது.

    "ஈசா நான் உம்மை மரணிக்கச் செய்வேன் மேலும் என்னளவில் உயர்த்திக் கொள்வேன் என அல்லாஹ் கூறிய பொது ........"இந்தத் திருக்குர் ஆன் வசனம் ஈசா நபி இறைவனளவில் உயர்த்தப்படுவதற்கு முன் அவருக்கு மரணம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்திவிடுகிறது. ஏனெனில் இங்கு மரணம் முதலிலும் உயர்த்துதல் அடுத்தும் இடம்பெற்றிருக்கிறது. இந்த வசனம் ஈசா நபியை அல்லாஹ் வானத்திற்கு உயர்த்திக் கொண்டான் என்று கூறுபவர்களுக்கு சாட்டை அடி. திருக்குரானில் ஒரு வசனத்தை எடுத்துக் கொண்டு விளக்கம் கொடுத்தால் அதில் பிரச்சனை எழும் அது தொடர்பான அனைத்து வசனங்களையும் எடுத்து விளக்கம் கொடுக்கவேண்டும். அதை இவர் செய்வாரா?

    ReplyDelete
  5. //ஒரு நபிக்கு கொடுக்காத சில சிறப்பை வேறொரு நபிக்கு அல்லாஹ் கொடுக்கலாம். கொடுத்திருக்கிறான். ஓரிரு சிறப்பு உள்ளதால் எல்லா வகையிலும் ஒருவர் சிறந்தவராக முடியாது. ஈஸா நபி தந்தையின்றி அற்புதமான முறையில் பிறந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ தந்தையின் விந்துத்துளி மூலம் பிறந்தார்கள். அதனால் ஈஸா நபியே சிறந்தவர் என்று கூட கிறித்தவர்கள் வாதிடலாம். இதனால்
    ஈஸா நபி தந்தைக்குத் தான் பிறந்தார் என்று கூற வேண்டுமா இவர்கள் கூறியது போல் கிறித்தவர்கள் வாதம் செய்தால் அந்த வாதத்தை அறிவுப்பூர்வமாகச் சந்திக்க இயலும். எவ்வளவு காலம் ஒருவர் உயிருடன் இருக்கிறார் என்பதில் சிறப்பு ஏதுமில்லை. என்ன செய்திருக்கிறார் என்பதிலேயே சிறப்பு உள்ளது. //ஒரு நபிக்கு கொடுக்காத சிறப்பை வேறொரு நபிக்குக் கொடுத்திருப்பது உண்மைதான் மறுப்பதற்கில்லை. ஆனால் எல்லா நபிமார்களைவிடவும் காத்தமுன் நபியாகிய நபி(ஸல்) அவர்களுக்கு எல்லாவகையிலும் அந்தஸ்தையும் சிறப்பையும் கொடுத்திருப்பதை நீங்கள் மறுக்கிறீர்களா? மறைமுகமாக அல்லாமல் நேரடியாக பதில் கூறுங்கள். நாங்கள் குரானின் அடிப்படையிலேயே மறுத்து நபி(ஸல்) அவர்கள்தான் எல்லா நபிமார்களை விட எல்லாவகையிலும். சிறந்தவர்கள். அவர்களுக்குக் கொடுக்கப்படாத எந்த அந்தஸ்தையும் வேறொரு நபிக்குக் கொடுக்கவில்லை என்பதை ஆணித்தரமாக நிரூபித்துக் காட்டுகிறோம். நிரூபித்துக்காட்டி வருகிறோம்.

    அடுத்து 4:157,158 வசனங்களைக் காட்டி அவர் மரணிக்கவில்லை அவரை தனன்ளவில் உயர்த்திக் கொண்டான். என்று கூறி இதில் அந்தஸ்து என்பது ஏற்புடையதாகாது. உடல் ரீதியாகத்தான் உயர்த்திக் கொண்டான் என்று விரிவுரை வழங்கியுள்ளீர்கள்.இதற்க்கு துணையாக 43;61 ஆயத்தையும் சேர்த்துக்கொண்டுள்ளீர்கள்.

    இறைவன் ஜடபொருளாகவோ, அவனுக்கென்று ஒரு தனி இடத்தைஅமர்த்திக் கொண்டாலோதான்
    உங்களின் உடல் ரீதியான உயர்வு, வாதம் எடுபடும். ஆனால் இங்கு அந்தஸ்துதான் என்பதற்கு இறைவனின் இருப்பிடம் சம்பந்தமான ஒரு கேள்விக்கு நபி(ஸல்) அவர்கள் கூறிய மறுமொழி ஒரு சான்றாக உள்ளது.

    நீங்கள் அந்நஜாத்தில் ஆசிரியராக இருந்த போது 1986, செப்டம்பர் இதழில் பக்கம் 46 இல் சிறுவர் பகுதியில் அலாவுதீன் அவர்கள் கேள்வி-பதில் பகுதியில் 'அல்லாஹ் வானத்திலுள்ள அர்ஷின் மீதிருக்கிறான் அர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்) அர்ஷின் மீது ஒழுங்குற அமைந்தான்' (20:5) என இறைவன் தன்னைப் பற்றி குறிப்பிடுகின்றான். அதாவது 'மதிப்பில் உயர்ந்திருக்கிறான். கண்ணியத்தால் உயர்வு பெற்றிருக்கிறான்' என்று அதற்குப் பொருள் கொள்ளவேண்டும் என நபி(ஸல்) கூறியதாக புகாரியில் ஒரு அறிவிப்பில் காணப்படுகிறது என எழுதியுள்ளீர்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? அல்லாஹ் தன்னளவில் உயர்த்திகொண்டான் என்றால் அந்தஸ்து அளவில் உயர்த்திக் கொண்டான் என்றே பொருள் கொள்ள வேண்டுமேயல்லாது உடல் ரீதியாக அப்படியே உயர்த்திக்கொண்டான் என்றால், அதனால் எழும் பல்வேறு கேள்விகளுக்குப் பகுத்தறிவு ரீதியிலான பதில் சொல்லமுடியாமல் போய்விடும். இறுதியில் அல்லாஹ்வின் வல்லமையில் பழியைப் போட்டு தப்பித்துக் கொள்ள வேண்டியதுதான்.

    ReplyDelete
  6. நிச்சயமாக அவர் இறுதிநாளின் அடையாளமாவார்(43:61) என்ற ஆயத்திற்கு நீங்களாகவே ஒரு விளக்கமளித்ததோடல்லாமல் நபி(ஸல்) அவர்கள் அந்த ஆயத்திற்கு விளக்கமளித்ததுபோன்று ஒரு தோற்றத்தை புகாரி,முஸ்லிம் ஹதீஸ் மூலம் காட்டியுள்ளீர்கள். அந்த ஹதீஸ், இப்னு மர்யமின் வருகையைப்பற்றி நபி(ஸல்) அவர்கள் அறிவித்த ஹதீஸ் அந்த வருகை எப்படி நிகழும் என்பதையும் சுன்னத்துல்லாவின் அடிப்படையில் ஏற்கனேவே விளக்கியுள்ளோம். அந்த நேரத்தின் அடையாளம் என்ற வசனத்திற்கு அந்த ஹதீஸ் விளக்கமாகாது.

    விளக்கமில்லாத ஹதீஸை உங்களுக்குச் சாதகமாக விளக்கம் என்று எடுத்துக் காட்டி. உண்மையிலேயே ஈசா(அலை) அவர்களின் மரணத்திக்கு சான்றாக நபி(ஸல்) அவர்கள் விளக்கமளித்துள்ளதாக உள்ள புகாரியில் தெளிவாக வந்துள்ள (பலம்மா தவபைத்தனி என்ற (5:118) ஆயத்திற்கு விளக்கம்) ஹதீஸை மறைத்துள்ள காரியம், நீங்கள் எவ்வளவு பெரிய மோசடிக்காரர் என்பதை தெளிவாக உணர்த்தக் கூடியதாக உள்ளது. ஒரு பிரச்சனை சம்பந்தமாக திருக்குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றிலிருந்து, எல்லா வசனங்களையும் இணைத்து முரண்படாத வகையில் விளக்கமளித்து, ஒரு முடிவுக்கு வரவேண்டுமேயல்லாமல், விரிவுரை எழுதுவதாகக் கூறிக்கொண்டு முரண்படக்கூடியவிதத்திலும் யுக்திக்கும், புத்திக்கும் பொருந்தாத விதத்திலும் ஒன்றைக் காட்டி மற்றொன்றை மறைத்து எழுதினால் இறைவனின் கோபத்திற்கும், சாபத்திற்கும்தான் ஆளாக நேரிடும். அறிவுடைய மக்கள் இதை தெளிவாக புரிந்துகொள்வார்கள், சிந்தித்து செயல்படக்கூடியவர்கள் மத்தியில் உங்களின் வாதம் எடுபடாது. விரைவில் உங்களின் தவ்ஹீது மூட்டையைக் கட்டிக் கொண்டு ஓட நேரிடும். உங்களின் தவறான கருத்துக் அடிகிடைக்கின்றபோது அந்த ஆயத்துகளையும், ஹதீஸ்களையும் கண்டுகொள்ளாமல் நழுவுவதும் உங்களுக்குக் கைவந்த கலையாக உள்ளது.

    ReplyDelete
  7. 'பல் ரபவுல்லாஹு இலைஹி' என்பதற்கு முன்னாள் ஈசா(அலை) அவர்களின் உடலையும் சேர்த்துக் கூறப்பட்டதனால் (கொலை செய்தல், சிலுவையில் அறைதல்) 'ரபா ஆ' என்ற உயர்த்துதலும், உடலோடுதான் என்று எழுதியுள்ளீர்கள். 'ரபா ஆ' என்பதற்கு நீங்கள் சுயமாகக் கொடுத்துள்ள பொருள் தவறானதாகும் ஏனெனில் திருக்குரானில் 'ரபா ஆ' என்ற சொல் நீங்கள் கொடுக்கின்ற பொருளில் எங்கேயும் வரவில்லை. ஹதீஸ்களிலும் 'ரபா ஆ' என்ற சொல் உடலுடன் உயர்த்துவதாக எங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் காண முடியாது. உங்களைவிடப் பெரிய விரிவுரையாளர்கள் பலர் சென்றுள்ளனர். அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்காக 'ரபா ஆ' என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்கள். அரபு அகராதி 'லிஸானுல் அரபு' விலும் 'ரபா ஆ' என்ற சொல்லுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. எல்லாம் உங்களின் கூற்றை மறுக்கிறது. இவ்வாறிருக்க அல்லாஹ் நபி(ஸல்) அவர்கள், சென்றகாலப் பெரும்,பெரும் விரிவுரையாளர்கள், அகராதி ஆகியவற்றை எல்லாம் புறக்கணித்துவிட்டு, உங்கள் தவறான கற்பனைப் பொருளை என் ஏற்றுக் கொள்ளவேண்டும்? திருக்குரான், ஹதீஸ்களிலிருந்து 'ரபா ஆ' என்ற சொல்லுக்கு உடலோடு உயர்த்தப்பட்டதற்க்கான ஆதாரங்களைக் காட்டுங்கள் ஏற்கிறோம்.

    மேலும் 'ரப அஹூ' எனபதில் ஹூ என்பது ஈசாவின் உடலையும் சேர்த்துதான் குறிக்கும் என்ற உங்களின் சுயசிந்தனையின் அடிப்படையிலான வாதத்தையும் திருக்குர்ஆன் மறுக்கிறது. (3:170) இல் இறை வழியில் கொலை செய்யப்பட்டவர்கள் அவர்களின் இறைவனிடத்தில் உயிருடன் இருக்கிறார்கள். உணவளிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு வழங்கியவற்றால் மகிழ்ச்ச்சி அடைகின்றார்கள் என்று வந்துள்ளது. கொலை செய்யப்பட்டவர்கள் உயிருடன்தான் இருக்கின்றார்களா? உடலுக்கும் சேர்த்துதான் உணவளிக்கபப்டுகின்றார்களா? உடலுடந்தான் மகிழ்ச்சியடைகின்றார்களா? ஏனெனில் இதில் வந்துள்ள சுட்டுப் பெயர்கள் 'குதிலூ' என்று கொலை செய்யப்பட்டவர்கலையே குறிக்கும்.

    ReplyDelete
  8. ஈசாவைக் கொல்லவில்லை. சிலுவையில் அறையவில்லை என்று சொல்வதானால் கொலைசெய்யப்படாதவரும், சிலுவையில் அறையப்படாதவரும் சாகக் கூடாது என்று எங்கே சொல்லப்பட்டுள்ளது? சிலுவையில் அறையப்படாமல், கொலை செய்யப்படாமல் இறந்த பின்னர் 'ரப அ' செய்யப்பட்டார் என்று சாதாரண அறிவுடையவர்கள் கூட எளிதில் புரிந்துக் கொள்ளமுடியும். ஏனெனில் (3:56) இல் அல்லாஹ். 'நான் உன்னை என்னளவில் உயர்த்துவேன்' என்று வாக்குறுதி அளிப்பதற்கு முன்னதாக நான் உன்னை மரணிக்கச் செய்வேன் என்று கூறியிருந்தான். என்னளவில் உயர்த்துவேன் என்ற வாக்குறுதியைப் பூர்த்தி செய்ததாக 'பல் ரபவுல்லாஹு இலைஹி' என்ற வசனத்தில் உறுதிப் படுத்திவிட்டான் என்றால் அதற்க்கு முன்னர் மரணமடையசெய்வேன் என்ற வாக்குறுதியையும் நிறைவேற்றியதாகத் திருக்குர்ஆன் ( 5:118 ) இல் (பலம்மா தவப்பைத்தனி) என்ற சொல்லால் இறைவன் உறுதிபடுத்தியுள்ளான்

    ஈசா மீண்டும் உலகிற்கு வந்து, இறந்துபோன பின்னர்தான் மேற்கண்ட ஆயத்தில், குறிப்பிட்டவை நிகழும் என்று நினைப்பதாக இருந்தால், அது உங்களின் கற்பனையே தவிர உண்மையில்லை. ஏனெனில் அந்த உரையாடல் 'வ இத்காலல்லாஹூ' என்று இறந்த காலச் சொல்லில்தான் ஆரம்பிக்கிறது. மேலும் ஈசாவின் இந்த வார்த்தைகளை எடுத்தாளுகின்றபோது நபி (ஸல்) அவர்கள் ; ப அகூலு கமாகால அப்துஸ்ஸாலிஹ் - (புகாரி கிதாபுத் தப்சீர்) அதாவது அதாவது அல்லாஹ்வின் நல்லடியார் கூறியதுபோல் நானும் கூறுவேன்' என்றுதான் கூறியுள்ளார்களே தவிர 'கமா யகூலு' அவர்கள் கூறப்போவதுபோல் என்று கூறவில்லை. எனவே இதிலிருந்து தெரிவது என்னவென்றால் ஈசா உயர்த்தப்படுதளுக்கு முன்னதாகவே அவரது மரணமும் நிகழ்ந்துவிட்டது என்பதாகும். இதனை அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் உறுதிப்படக் கூறியிருக்கும்போது, நீங்கள் மட்டும் அதனை மறுக்கிறீர்கள் என்றால் நாங்கள் அதை ஏற்க்கவேண்டுமா? குரான் ஹதீஸ் அறிவுடைய நபி(ஸல்) அவர்களை மதித்து நடக்கக் கூடிய எந்த முஸ்லிமும் என்றுக் கொள்ள மாட்டான்.

    ReplyDelete
  9. மேலும் நீங்கள், ஈசா(அலை) உடலுடன் உயர்த்தப்பட்டு உயிருடன் இருக்கிறார் என்று கூறுகிறீர்கள். அப்படியானால் இறைவன் குர்ஆனில் கூரிவதைப் பாருங்கள். 'ஈசா தான் அல்லாஹ் என்று கூறிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறுகின்றான்: மஸீஹ் இப்னு மர்யம். ஒரு தூதர் மட்டுமே, அவருக்கு முன் வந்த தூதர்கள் மரணித்துவிட்டனர்', (5:73-76 ) என்று இங்கே ஈசாவுக்கு முன்தோன்றிய தூதர்கள் இறந்துவிட்டதைப் போல் ஈசாவும் இறக்காமல், அவர் மட்டும் விண்ணில் உயிருடனும், உடலுடனும் இருக்கிறார் என்றால், ஈசா மற்ற தூதர்களைப் போன்றல்லாததால் இறைவனாவார் என்ற கிறிஸ்தவர்களின் கூற்றுக்கு இவ்வசனம் எவ்வாறு மறுப்பாக முடியும்? அல்லாஹ் கிறிஸ்தவர்களின் தவறான கடவுள் கொள்கையை மறுத்து சான்றாகக் காட்டும் இந்த வசனம் பயனற்றதாகப் போய்விட்டதா?

    உடலோடும் இருக்கிறதாகக் கூறுகிறீர்களே; அல்லாஹ் நாடினால் உணவளிக்க முடியும் என்கிறீர்களே; அவருடைய உடலும் இப்போது இல்லை. உணவு உண்பதுமில்லை என்று அல்லாஹ் கூறுவது உங்களுக்கு கேட்கவில்லையா? அல்லாஹ் ஈசாவைப் பற்றி உணவருந்திக் கொண்டிருந்தார் என்று (5:76) கூறுகிறான். அதாவது இப்போது அவர் உணவருந்தவில்லை: சென்ற காலத்தில் தான் உணவருந்தினார். இப்போது என் உணவருந்தவில்லை என்றால் அதற்குத் தேவையான உடல் இல்லை. ஏனெனில் அவர் இறந்துவிட்டார். என்று இறைவன் கூறுகிறான்.

    (21:9) இல் ஈசா உட்பட உள்ள எந்தத் தூதருக்கும் உணவருந்தாதத் தேவையில்லாத உடலை வழங்கவில்லை என்கிறான். எனவே அவருக்கு உடல் இருந்தால் கட்டாயம் அவர் உணவருந்தியே ஆகவேண்டும். என்பது அல்லாஹ்வின் கூற்று எனேவேதான் அவர் இப்போது உணவருந்துவது எப்படி? என்று நாங்கள் கேட்கிறோம்.

    அடுத்து ஈசாவும் அவருடைய தாயாரும் உணவருந்திக் கொண்டிருந்தார்கள் (5:76) என்று இறைவன் கூறி, இப்போது உணவருந்தவில்லை என உறுதிப்படுத்துகிறான். நீங்கள்தான் அல்லாஹ்வின் வல்லமையைக் கொண்டு உணவு ஊட்டுகிறீர்கள். ஆனால் அவர் இப்போது உணவு உண்ணவில்லை என்று இறைவன் அறிவிப்பதால் அவர் உடலுடன் இல்லை என்று உறுதியாகிறது. இன்னும் அவர் உணவு தேவை இல்லாத உடலுடன் விண்ணில் இருப்பதாக அடம்பிடிப்பதானால், அதன் பொருள் (21:9) இன் படி அவர் நபியாக முடியாது. ஏனெனில் நபியாக இருந்தால் இறைவாக்குப்படி உணவு உட்கொள்ளக்கூடிய உடல் தேவை (21:9)

    ReplyDelete
  10. http://imaammahdi.blogspot.in/2011/10/blog-post_23.html

    ReplyDelete

welcome ur comment,